மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்களை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: September 26, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்களை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். 

மதுரை மாநகராட்சி மத்திய தொகுதிக்குட்பட்ட 76 வது வார்டு திடீர் நகரில் அமைந்துள்ளது  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம். மதுரையில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறும் இங்கு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருவதற்கு போதிய இடம் வசதி இன்றி பொதுமக்கள் அவதியடைந்து, வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்நிலையில்  புதிய கட்டிடங்களை நேற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஆய்வு பணிகள் மேற்கொண்ட அமைச்சர் மருத்துவமனையின் உட் கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதை அடுத்து திடீர் நகர் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர்  சித்ரா விஜயன், வட்டாட்சியர் முத்துப்பாண்டியன், உதவி கமிஷனர் பிரபாகரன், உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் , ஸ்ரீகோதை, உதவி செயற்பொறியாளர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். திடீர் நகரில் உள்ள அலாவுதீன் தோப்பு, பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Media: Dinakaran