மதுரை மாநகராட்சி மத்திய தொகுதிக்குட்பட்ட 21 வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: September 11, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி மத்திய தொகுதிக்குட்பட்ட 21 வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்ததுடன் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தத்தனேரி களத்து பொட்டல் பகுதி மக்கள் அப்பகுதியில் சமுதாய கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது.

இந்த சமுதாய கூடத்தினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாநகராட்சியின் 21 வது வார்டுக்குட்பட்ட அருள்தாஸ்புரம், தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையளர் சித்ரா விஜயன், உதவி ஆணையாளர் ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பகுதி கழக பொறுப்பாளர் நீலமேகம், வட்ட செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Media: Dinakaran