சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஸ்வர்ணா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ்,

Published Date: September 11, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை, செப்-11'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளைச்  சேர்ந்த ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன. அங்குள்ள 1.30 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் 40 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் உயிர்நீர் இயக்கம் (ஜல் ஜீவன்' திட்டம்) செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் இறையன்பு,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம்,

சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஸ்வர்ணா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Media: Dhinathanthi