நூற்றாண்டு கால திராவிட வரலாறு காரணமாக தமிழகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, கல்வி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது தொடரும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் இஸ்ரேல் பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் ஜோசப் அவ்ரஹாம், உபாசி செயலாளர் சஞ்சித் பங்கேற்றனர்.

Published Date: September 21, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

நீலகிரி, செப். 21: தென்னிந்தியா தோட்ட அதிபர்கள் சங்க 129வது மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் எம்.பி.செரியன் வரவேற்றார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியதாவது: பெரும் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் இடையே பெரும் இடைவெளி உள்ளது. சிறு விவசாயிகளுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக வருவாய் மற்றும் நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலையில் பொருள்கள் கிடைப்பதே மாநில அரசின் நோக்கமாகும். ஆனால், நிதர்சனத்தில் இடைத் தரகர்கள் தான் அதிக லாபம் பெறுகின்றனர்.

இதைப் போக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் உற்பத்தி அதிகரிக்க வழிவகை செய்கிறது.  அரசின் திட்டங்கள் தற்போது துறை ரீதியாக உள்ளது. இதை பயனாளிகள் ரீதியாக செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு சுகாதாரம், கல்வியை மேம்படுத்தவும், தாய் சேய் உயிரிழப்பு விகிதாசாரத்தைக் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் தமிழகத்தில் இந்த நடவடிக்கைகளில் முன்னோடியாக திகழ்கிறது.

இருப்பினும் நமது தகுதிக்கு ஏற்ப நாம் இன்னும் இலக்கை அடையவில்லை. நமது பட்ஜெட் ரூ.4லட்சம் கோடியாக உள்ளது. காலநிலை மாற்றம், இறக்குமதி விதிமுறைகள், தொழிலாளர்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தோட்டத்துறைக்கு அரசு உதவ வேண்டும். விலை குறை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் தோட்டத்துறை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத்துறைக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்.

நூற்றாண்டு கால திராவிட வரலாறு காரணமாக தமிழகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, கல்வி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது தொடரும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் இஸ்ரேல் பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் ஜோசப் அவ்ரஹாம், உபாசி செயலாளர் சஞ்சித் பங்கேற்றனர்.

துணைத் தலைவர் ஜெப்ரி ரிபெல்லோ நன்றி கூறினார்.மாநாட்டில் உபாசி உறுப்பினர்கள் மற்றும் தோட்ட அதிபர்கள் பங்கேற்றனர்.

Media: Tamil Sudar