Published Date: November 14, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் இணைந்து உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாமை, அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது. அதில் சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தகுதியான 1002 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் மூலம் 900 மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர். இவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதல்கட்டமாக 219 மாணவர்களுக்கு ரூ.18 கோடியே 51 லட்சம் மதிப்பில் கல்வி கடன் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. விரைவில் மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த முகாமில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர்,வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ, துணை மேயர் நாகராஜன், கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Media: DAILYTHANTHI