இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கே.சு.

Published Date: October 21, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை:  தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இ-சேவை மையம்

தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர்  அந்த மையங்களுக்கான நவீன கம்ப்யூட்டர்கள் வழங்கிடும் அடையாளமாகத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசுத் தலைமைக் கொறடா கோவி.செழியன், கு.செல்வப் பெருந்தகை மணி மா. சிந்தனை செல்வம் சதன் திருமலை குமார் எம்  எச் ஜவாஹிருல்லா ஈ ஆர் ஈஸ்வரன் வேல்முருகன் ஆகிய 9 எம்எல்ஏக்களுக்கு கம்ப்யூட்டர்களையும் பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் மு க ஸ்டாலின் வழங்கினார்

அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் முதலமைச்சரும் குளத்தூர் தொகுதி எம்எல்ஏ மாண மு க ஸ்டாலின் இடம் நவீன கம்ப்யூட்டர் பையனார் எண் மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தா மனோ தங்கராஜ் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச்செயல் அலுவலர் பிரவீன் நாயர், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீன் விதைப்பண்ணை

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன் விதைப்பண்ணை மற்றும் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அரசு மீன் பண்ணையில் ரூ.1.09 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் விதைப் பண்ணை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் இறங்கு தளத்தில் ரூ.1.59 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.85 கோடிகள் கட்டப்பட்டுள்ள பனிக்கட்டி  உற்பத்தி நிலையம் மற்றும் ரூ.1.14 கோடியில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்குக் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் மையம், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.05 கோடியில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்குக் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் மையம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மீன்வள பொறியியல் கல்லூரியின் முதல் தளத்தில் 30 ஆயிரத்து 602 சதுர அடி பரப்பளவில் ரூ.9 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கல்லூரி முதல்வர் அலுவலகம், ஆசிரியர்கள் அறை,  ஆய்வகங்கள், கருத்தரங்கு அறை, தேர்வு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள், தலைஞாயிறில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.4.20 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டிடங்கள் என மொத்தம் ரூ.24.92 கோடியிலான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கே.சு. பழனிசாமி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் கமிஷனர் அ.ஞானசேகரன், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கோ.சுகுமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அடிக்கல்

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில் 87 ஆயிரத்து 91 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்களுடன் 2 தொகுதிகளாக ரூ.32.93 கோடியில் குற்ற வழக்கு தொடர்புத்துறை இயக்குனரகம் மற்றும் சட்டக் கல்வி இயக்குனரகத்துக்கான  ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது இதற்கு   மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.ரகுபதி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, குற்றவழக்கு தொடர்வு இயக்குனர் சித்ராதேவி, சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Media: Dhinathanthi