அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்- பொன்குமார் வழங்கினார்!

Published Date: September 27, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, செப். 27- மதுரை மாவட்டத்தில் 3,873 கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ரூ.94, 62,362/ மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாரியத்தலைவர் பொன்குமார் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 24.09.2022 அன்று மதுரையில் நடைபெற்றது. நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் மரு.எஸ். அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வாரியத்தலைவர் பொன்குமார் ஆகியோர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக உரையாற்றினர்.

கட்டுமானத் தொழில் ஆபத்து நிறைந்தது என்பதால் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுவதை உறுதி செய்திடும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி வாரியத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கொத்தனார், பெயிண்டர், சென்ட்ரிங், வெல்டர், உதவியாளர் போன்ற கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இயற்கை இறப்பு நிதி, ஓய்வூதியம், பிள்ளைகளுக்கு கல்வி உதவி, விபத்து நிதி போன்ற நலத்திட்ட உதவிகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 3.873 தொழிலாளர்களுக்கு ரூ.94,62.362/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் வி.இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் IAS , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்       

மு. பூமிநாதன், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தி.குமரன், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தொழிலாளர் துணை ஆணையர்    கே.எம்.சி. லிங்கம் நன்றியுரையாற்றினார்.

Media: Murasoli