/

4 ஆண்டுகளுக்குப் பிறகு... எங்கள் அச்சங்கள் ஜிஎஸ்டி மூலம் உறுதியாகிவிட்டன.

Published Date: July 2, 2021

பெரும்பாலான இடங்களில் இருப்பதை விட தமிழகத்தில் வருமான ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ளது. எனவே, நாங்கள் மிக அதிக நுகர்வு கொண்ட மாநிலமாக இருக்கிறோம் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரி மதிப்பு (tax buoyancy) இல்லை, வரிவிதிப்பு முறை எளிதாக்கப்படவில்லை என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். இணக்கச் சுமை சிறிய நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ளதாகக் காணப்படுகிறது, அதேசமயம் வரிவிதிப்பில் மாநிலங்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்துள்ளன. தமிழ்நாடு கோடிக்கணக்கான வருவாயை இழந்து வருவதாகவும், வரி விகிதப்படி மாநில பிரதிநித்துவம் அமைவதே சரியான முடிவுகள் எடுக்க உதவும் என்றும் திலாஷா சேத்திடம் கூறுகிறார். 

 

நான்கு ஆண்டுகளாக தொடரும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நீங்கள் புதிய உறுப்பினராக இரண்டு முக்கியமான கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஜிஎஸ்டி நிர்வாக முறை குறித்த உங்கள் கருத்துகள் என்ன? உங்கள் பார்வையில் கொண்டுவரவேண்டிய உடனடி மாற்றங்கள் என்ன?

GSTயில் இரண்டு வகையான ஆபத்து இருந்தது. ஒன்று, இதுபோன்ற உள்ளார்ந்த சிக்கலான அமைப்பை நீங்கள் செயல்படுத்த முடியுமா? - ஏனென்றால் பல மாநிலங்கள் தங்கள் வரிவிதிப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்கின்றன. அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், இந்தியா உலகின் அதிகளவில் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட பெரிய நாடு. ஒரே இடத்தில் அதிகாரங்களைக் குவிக்கும் ஒரு கூட்டாட்சியாக இந்தியா இருக்கிறது. எனவே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நாம் உண்மையிலேயே நம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்துவிட்டோமா?, நாங்கள் எதிர்பார்த்த ஆபத்துகள் நேர்ந்திருக்கிறதா? என்பதுதான். நாம் அடைய எதிர்பார்த்த  இலக்குகளை இன்னும் அடையவில்லை. வரி மதிப்பு (tax buoyancy) ஏற்படவில்லை. எளிதான வரிவிதிப்பு முறையில் அதிக வருவாய் ஈட்டப்படவில்லை. 

ஜிஎஸ்டிக்கான விரிவான ஆவணங்கள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் ஆகியவை இணக்க செயல்முறையை கடினமாகியுள்ளது என்று மிகச்சிறிய நிறுவனங்கள் முதல் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் கூட கூறுகிறார்கள். நாங்கள் பயந்தபடி மாநிலங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டோம். அதற்கும் மேல் எதிர்பாராத பல பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. 

 

ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட வரி மதிப்பை நம்மால் ஏன் அடைய முடியவில்லை என்று நினைக்கிறீர்கள்? அடிக்கடி ஜிஎஸ்டி வீதங்களை குறைத்ததினாலா அல்லது அடிப்படை விகித அமைப்பு குறைபாடுள்ளதா? நாம் 28% விகிதத்தில்  227 பொருட்களுடன் தொடங்கினோம், அது இப்போது 28 ஆக குறைந்துள்ளது.

அது பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. முன்னாள் கேரள நிதியமைச்சர் கூறியது போல GST விகிதங்கள் வருவாய் நடுநிலையில் (revenue-neutral) அல்ல. இப்போது இதைப் பார்க்க இரண்டு வழிகள் உள்ளன. விநியோகம் -  தேவை மேம்பாடு குறித்த நாம் இன்னும் விவாதிக்ககூட இல்லை. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வியாபாரம் செய்வது எளிதாவதால் வருவாயின் அளவு அதிகரித்திருகக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்திருக்கலாம். நடுநிலை (revenue-neutral) வழியில் விகிதங்களைக் குறைத்த போதிலும், அது அதிக வசூலுக்கு வழிவகுத்திருக்கக்கூடும். ஆனால் இந்த விஷயத்தில் இரு பிரச்சினைகளும் உள்ளது  என்று நினைக்கிறேன். நிச்சயமாக தற்போது உள்ள வடிவமைப்பில் வருவாய் நடுநிலை(revenue -neutral) இல்;லாததோடு அதை செயல்படுத்துவது மிக மோசமாக உள்ளது.

 

ஜிஎஸ்டி என்பது பெரிய உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாயை பாதித்துள்ளது, இது இழப்பீட்டுக்கான தேவையினை பிரதிபலிக்கிறது. தொழில்துறை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு என்ன?

தமிழகம் அதிக உற்பத்தி செய்யும் மாநிலமாகும். எனவே இது உற்பத்தியில் அதன் தாக்கத்தை அதிகம் வெளிப்படுத்தும். ஜிஎஸ்டி வந்தபோது,  உற்பத்தியில் இருந்து நுகர்வுக்கு வரிவிதிப்பை மாற்றப்போகிறது என்று கூறப்பட்டது. இதனால் அதிக  உற்பத்தி கொண்ட மாநிலங்களுக்கு வீழ்ச்சியும், அதிக நுகர்வு கொண்ட மாநிலங்களின் வருவாய் அதிகரித்திருக்கவும் வேண்டும். இந்த கருத்து ஒருவழியில் உண்மை என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தை எடுத்துக் கொண்டால், அது உண்மையாக இருக்காது. இது அதிக தனிநபர் வருமானம் மற்றும் அதிக உற்பத்தி கொண்ட மாநிலமாகும்.

தமிழ்நாட்டில் 80 மில்லியன் மக்கள் உள்ளனர். பெரும்பாலான மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வருமான சமத்துவமின்மை குறைவாக உள்ளது. எனவே நாமும் மிக அதிகமாக நுகரும் மாநிலமாக உள்ளோம். இங்கு அதிக உற்பத்தி மட்டுமல்ல, அதிக தனிநபர் வருமானமும் அதிக தனிநபர் நுகர்வுக்கு வழிவகுக்கிறது. எனவே 80 மில்லியன் மக்கள்த்தொகையோடு பொருத்திப் பார்த்தால்,  நிச்சயமாக நாம் அதிக நுகர்வு மாநிலமாகத்தான் இருக்க வேண்டும். எனவே அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது IGST தமிழகத்துக்கு மிக குறைந்த அளவில் இருக்க வேண்டும். அதாவது, நாம் செலுத்துவதை விட சற்று குறைவாகவே திரும்பப் பெறுவோம். ஏனெனில் நாம் பிற மாநிலங்களுக்கு உற்பத்தி செய்து அனுப்புகிறோம். ஆனால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பாகிறது. ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இழப்பீடு ஏற்படுவது என்பது எப்படி சாத்தியம்? எனவே இந்த அமைப்பில் ஒரு கசிவு இருப்பதாக நான் கருதுவதற்கும், வரி மிதப்பு ஏன் அடையப்படவில்லை என்பதற்கும் இவை அனைத்தும் காரணங்களாகும்.

 

ஜிஎஸ்டி கூட்டுறவு கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அதற்கு நேர் மாறாகவே நிகழ்வுகள் அமைந்துள்ளது. மத்திய அரசுடன் நம்பிக்கையின்மை பற்றி எல்லாம் மாநிலங்கள் பேசுகின்றன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வடிவமைப்பு மோசமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இதை உருவாக்கியதில் ஒரு அடிப்படை சிக்கல் உள்ளது. இந்த அமைப்பு ஒரு மாநிலம், ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தோன்றியுள்ளது, ஆனாலும் வடகிழக்கு மாநிலங்களின் நிலையால் இதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இவ்வமைப்பு உருக்குலைந்த நிலையில் இருக்கிறது. மேலும் முடிவுகள் எடுப்பதில் ஒருமித்த கருத்துக்கும் (consensus), கருத்து வேறுபாடு இல்லாத தன்மைக்கும் (unanimity) இடையிலான வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும். இந்த கேள்வியை நான் கடந்த கூட்டத்தில் எழுப்பினேன். நான் இதை ஒரு மோதலாக பார்க்க விரும்பவில்லை, ஆனால் வடிவமைப்பை பற்றிய என் கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். இந்த வடிவமைப்பு ஒரு செயல்படுத்த முடியாத ஒன்று. வரிவிதிப்பு முறை ஒரு நிறுவனத்தின் பங்குகள் போன்றது. நீங்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குச் செல்லும்போது அனைவருக்கும் சமமான வாக்குகள் கிடைக்காது. எனவே நான் கூறுவதாவது ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்குகள் வசூலிக்கப்படும் வரி விகிதத்திற்கேற்ப அமைய வேண்டும்.

 

SOURCE: Business Standard

 Articles Year Wise: