நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது

Published Date: December 18, 2022

CATEGORY: GST

 

புதுடெல்லி, டிச. 18: - டெல்லியில் நேற்று 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஒரே நாடுஒரே வரி இந்த அடிப்படையில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.  இந்த வரி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.  மத்திய நிதி மந்திரி தலைமையில் இயங்கி வரும் இந்த அதிகாரம் மிகுந்த கமிட்டியில்  மாநில நிதி மந்திரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.  இந்த கவுன்சில் அடிக்கடி கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.  இந்த வரிசையில் 48- வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

புதிய வரிகள் இல்லை

இந்தக் கூட்டத்தில் புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் பருப்பு உமிக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத வரியும் ரத்து செய்யப்பட்டது.

இதைப்போல பெட்ரோலுடன் கலப்பதற்காக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தில் ஆல்கஹால்  மீதான ஜி.எஸ்.டியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் இந்தக் கவுன்சில் பரிந்துரைத்தது.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக, சில முறைகேடுகளைக் குற்றமாக கருதுவதை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.  அத்துடன் வழக்கு தொடர்வதற்கான வரி ஏய்ப்பு உச்ச வரம்பை ரூபாய் 1. கோடியில் இருந்து ரூபாய் கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. 

நேரப்பற்றாதுரை

மேலும்  எஸ்.யு.வி.  வகை வாகனங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்களும், அவற்றுக்கான வரிவகைகள் குறித்த விவாதங்களும் கூட்டத்தில் நடந்ததாக நிர்மலா சீதாராமன் கூறினார்.  ஜி.எஸ்.டி அடிப்படையை அனைத்து நிலைகளிலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில்   விவாதிப்பதற்காக 15 அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.  ஆனால், நேரப்பற்றாக்குறை காரணமாக வெறும் 8 அம்சங்கள் குறித்து மட்டுமே முடிவு எடுக்க முடிந்தது.  எனவே மீதமுள்ளவை அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படாத அம்சங்களில், ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பான் மசாலா மற்றும் குட்கா வர்த்தகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வழிமுறை உள்ளிட்டவை முக்கியமானவை ஆகும்.

இதைப்போல ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை  விடுதிகளுக்கான ஜி.எஸ்.டி குறித்த ஆலோசனையும்  கூட்டத்தில் நடைபெறவில்லை இது தொடர்பாக மேகாலயா முதல்-மந்திரி  கன்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மந்திரிகள் குழுவினர் தங்கள் அறிக்கையை சில நாட்களுக்கு முன்னரே வழங்கியதால் இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை என வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.

Media: Dhinathanthi