புதிய ஓய்வூதிய திட்டத் தொகை ரூ. 61,251 கோடி ! எல். ஐ .சி. யில் முதலீடு

Published Date: April 20, 2023

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசு பங்கான ரூ.61, 251.16 கோடி தொகை எல்.ஐ.சி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சமர்ப்பித்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் 1.4.2003 மற்றும் அதற்குப் பின்பு அரசு பணியில் சேர்வோருக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக செலுத்துகிறது.

கடந்த 31.3.2022 நிலவரப்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ. 61,251.16 கோடி எல்.ஐ.சி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய கடந்த 2016-ம் ஆண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 27.11.2018ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்.20-

Media: Maalai Murasu