/

72வது சுதந்திர நாளை முன்னிட்டு மன்னர் திருமலை கல்லூரியில் நான் நிகழ்த்திய உரை

Published Date: August 15, 2018

72வது சுதந்திர நாளை முன்னிட்டு மன்னர் திருமலைகல்லூரியில் நான் நிகழ்த்திய உரை

வணக்கம்!

இது ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நம் மண்ணில், பல போர்கள்மூலமும், போராட்டங்கள் மூலமும் வென்று, ஒரு மிகப்பெரிய நாடாக ஒருங்கிணைத்து, 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இத்தனை பெரிய நாட்டை கடந்த 71 ஆண்டுகளாக நாம் சீராக நிர்வகித்து வருவது சாதாரணமான காரியமல்ல. இந்த நாட்டின் குடிமக்கள் என்பதில் நாம் பெருமை கொள்வோம். எனக்கு முன்னர் பேசிய பேராசிரியர் குறிப்பிட்டது போல "போராடி, கஷ்டப்பட்டு நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கியிருக்கிறோம்” என்பது முற்றிலும் உண்மை.

/

நாம் இப்போது இந்தியாவில், ஒரு அரசியலமைப்பில் இருக்கிறோம். இதற்கு முன்னர் சோழநாடு, பாண்டியநாடு என எண்ணற்றநாடுகளாக மக்கள் வசித்து வந்தனர். அந்த நாடுகளில் நம் முன்னோர்கள்வாழ்ந்தனர். அதனால் ஒரு நாடு என்பது அரசியலமைப்பால்உருவாகிறது. அரசியலமைப்பு என்பது மக்களால் உருவாக்கப்படுகிறது. அதனால் குடிமக்களான நாம் சக மனிதர்கள் மீது வைக்கின்ற பற்று தான் தேசப்பற்று.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கருத்து வேறுபாடு ஏதும் இருப்பின் உடனே தேசவிரோதி என அடையாளப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். யாரையும் கேள்வி கேட்கக்கூடாதுஎன்பதல்ல தேசப்பற்று. கவுன்சிலர் ஆரம்பித்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர் என யாரையும் கேள்வி கேட்கக்கூடாதுஎன்பதல்ல தேசப்பற்று. இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்கு, ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற கல்வி மற்றும் திறமையினால் கேட்க வேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்டால்தான் அது தேசப்பற்று.

கேள்வி கேட்பது ஒரு குடிமகனின் கடமை. அதற்காகவே மாணவர்களானஉங்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒருநாடு முன்னேற வேண்டுமானால், அந்நாட்டின் குடிமக்கள் முன்னேற வேண்டும். குடிமக்கள் முன்னேற வேண்டுமெனில் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அது என்னவெனில் உற்பத்தி திறன் மேம்பட வேண்டும். உற்பத்தி திறனைஉயர்த்தினால் மட்டுமே வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். இந்த உலகத்தில் இதுதான் வழி. இதுதான் உலகளாவிய பொருளாதார தத்துவம். வேறு எந்த வழியுமில்லை. உற்பத்தித்திறனுக்கானஅடிப்படைத்தேவைகளில் ஒன்று கல்வி மற்றும் திறன். இரண்டாவது உழைப்பு. இதை 1947ல் அனைவரும் அறிந்திருந்தனர்.

என் தாத்தா பி.டி.ராஜன் அவர்கள் 1968ல் நடந்த நீதிக்கட்சியின்50வது ஆண்டு பொன்விழாவில்ஆற்றியஉரையில், "1947-லிருந்து1968 வரை பலவகைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம். குறிப்பாக சமூகநீதிகொள்கையால்அனைவருக்கும்வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால், ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கல்வி மற்றும் உழைப்பினால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவு வளரவேயில்லை. இதே 20 வருடங்களில் இரண்டாவது உலகப்போரால் பெருமளவு பாதிப்படைந்தஜப்பானும், ஜெர்மனியும் நாம் நாட்டிற்க்குமேலேயேமுன்னேறியிருக்கிறார்கள். எனில் அது கல்வியாலும், உழைப்பாலும், அதன்மூலம் உருவான உற்பத்தி திறனாலும் தான்”, என்று பேசியுள்ளார். அந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் அப்போது மக்கள் முன்னேற்றமடையக் கூடிய திட்டங்களும்போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை எனலாம்.

இதே பத்தியின் section (iv)ல் நியூ இந்தியா 2022 திட்டத்தின் முக்கியத்துவத்தை நிதிக்குழு உணரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், "ஐந்து ஆண்டுகளுக்கு உண்டான ஒதுக்கீடுகள் குறித்த பரிந்துரைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உண்டான அளவீடுகளை கொண்டு நிதிக்குழு ஆலோசிக்க வேண்டும்” எனும் கூற்று பத்தியின் சாரசம்சத்திற்கு எதிராக உள்ளது. இது போன்ற குழப்பங்களை முற்றிலுமாக களைய இந்த யோசனையை கைவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

முதல்முறையாக1967-ல்பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அமைக்கிறது. அன்று தொடங்கி இப்போது 50 ஆண்டுகள் கழித்துள்ள நிலையில், நாம் இப்போது முழுமையாக உலகமயமாக்கப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்கிறோம். இங்கு தற்போது முற்றிலும் தாராளமயமாக்கப்பட்ட வணிகம் நடக்கிறது. இங்குள்ள பெட்டிக்கடைகளில்சீனத்தயாரிப்புப் பொருட்கள் கிடைக்கிறது.

நான் எந்த நாட்டுக்குச்சென்றாலும் அங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட மென்பொருள் வல்லுநர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள். ஆக பொருள், பணம், மக்கள் வளம் ஆகியவை எல்லா நாடுகளுக்கும் பரிமாற்றம் ஆகக்கூடியவை. அதனை அதிகரிக்க வேண்டுமெனில், நாம் நம்முடைய சராசரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதை செய்த காரணத்தால் தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட ஒருபடி முன்னேறி நல்ல நிலையில் உள்ளது.

காரணம், நீதிக்கட்சிஆட்சியில்1920-லேயேஆண்களுக்கும், பெண்களுக்கும்கட்டாயஆரம்பக்கல்விஅளிப்பதென வலியுறுத்தி சட்டம் இயற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று நாம் நல்ல நிலையில் இருக்கிறோம்.

சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்அதுகுறித்தவிளக்கமான புத்தகங்களை அளிப்பர். பலரும் அதை அங்கேயே மேசை மீதே வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அந்தப் புத்தகங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய பல புள்ளிவிவரங்கள் உள்ளன.

/

தமிழகத்தின் "Gross Enrollment Ratio”, அதாவது கல்லூரியில்சேரக்கூடியவயதுடையவர்களில் எத்தனை பேர் கல்லூரியில்சேர்கிறார்கள் என்பது பற்றிய சதவிகிதம். இந்த ஆண்டு கல்வி மானியக்கோரிக்கை குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது 46%க்கும் மேல் கல்லூரியில்சேர்வதாககுறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு மாணவர்களில் ஒருவர், பணம் செலுத்தி கல்லூரியில்சேர்கிறார் என்பது தான் அவ்வறிக்கை சொல்லும் தகவல்.
இது மிகவும் ஆச்சரியப்படக்கூடியபுள்ளிவிவரம். இந்திய மொத்த சராசரி என்பதே வெறும் 22% சதவிகிதம்தான். நம் மாநிலத்துக்கு அடுத்து முன்னேறியமாநிலமானகேரளாவில்37% சதவிகிதம் மட்டுமே உள்ளனர். அரசியல் சூழ்நிலை, பொருளாதார நிலைமை ஆகியவை எவ்வுளவுமாறியிருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி வளர்ச்சித் திட்டங்கள், கல்வித்துறையின் சாதனை வரலாறு, கல்விக்கான மரியாதை ஆகியவை வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

 

என்னதான் 46% சதவிகிதம் பெற்று "Gross Enrollment Ratio”வில் நாம் முன்னிலையில் இருந்தாலும் குறைகள் இல்லாமல் இல்லை. நான் பொறியியல் படித்தபோது இங்கு வெறும் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இப்போது பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இருக்கின்ற அனைத்து கல்லூரிகளுமேதரமானதுதான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. சில கல்லூரிகள்மூடப்படவேண்டியவை. ஆனாலும், இந்தளவுமுன்னேறிருப்பது என்பது சாதாரண காரியமில்லை.

அடுத்ததாக, கல்லூரியில் படிப்பு முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கி, உட்கட்டமைப்புவசதிகளைமேம்படுத்தி, தொழிற்சாலைகள், தொழிற்பூங்காக்கள், மின்உற்பத்தி நிலையங்கள், மருத்துவமனைகள், துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளைஏற்படுத்தித்தருவதன் மூலம், புதிய தொழில்களில்முதலீட்டாளர்களை ஊக்குவித்து, தொழில் துறையை வளர்த்து, அதன்மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் தற்போது நடக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நாடு முன்னேற வேண்டும் என்பது அரசின் கடமை மட்டுமல்லாது நம் அனைவருக்கும் உள்ள பொதுவான எண்ணமும், கடமையுமாகும்.

/

இந்த சுதந்திர நாளை முன்னிட்டு நான் சொல்ல விரும்பும் செய்தியாக குறிப்பிடுவது என்னவெனில், ஒவ்வொரு குடிமகனும் கல்வி, உழைப்பு ஆகியவற்றின் மூலம் உற்பத்தித்திறனைமேம்படுத்தும் தங்களது கடமையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நன்றாக படித்து, உங்களுடைய திறமைகளைவளர்த்துக் கொண்டு தனிப்பட்ட முறையிலும், உங்கள் குடும்பத்தையம்முன்னேற்ற வேண்டியது முதல் கடமை. நீங்கள் முன்னேறினால் மட்டுமே நாடும் முன்னேறும்.

இரண்டாவது கடமை என்பது உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, நல்ல நிலைமைக்கு வந்தபின்னர்நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியதாகும். நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? எவ்வாறு இருக்கக்கூடாது? இதைவிட சிறப்பாக எப்படி இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளை உள்ளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கேள்வி கேட்பது நம் அடிப்படை உரிமை. யார் எப்படி சொல்லியிருந்தாலும், எந்த ஒரு முடிவையும்சுயசிந்தனை இல்லாத மூட நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கக்கூடாது. இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என பெரியார் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இதுதான் சமீபத்தில் மறைந்த தலைவர் கலைஞர் அவர்களும் கற்றுக் கொடுத்தார். "எந்தவொருபணியாக இருந்தாலும் அதனை இப்போது இருப்பதைவிட நன்றாக, சிறப்பாக செய்யலாமா என யோசிக்க வேண்டும்", என்று அடிக்கடி சொல்வது அவரது வழக்கம். அந்த மாமனிதர் இறந்து சில நாட்களே ஆன நிலையில் அவரது நினைவுகள் இன்றும் என் மனதில் ஓடுகிறது. இருந்தாலும் இங்கு வருவதை முக்கியப் பொறுப்பாக கருதி வந்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

 Articles Year Wise: