தமிழ்நாட்டில் முதலீடு,உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்

Published Date: November 18, 2021

CATEGORY: ECONOMY

தமிழ்நாட்டில் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்க

 ஒன்றிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்! 

ஒன்றிய நிதி அமைச்சர் நடத்திய காணொலிக் காட்சியில் பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் வலியுறுத்தல்!

சென்னை , - தமிழ்நாட்டில் முதலீட்டையும், உள்கட்டமைப்பு மேப்பாட்டையும் வேகமாக ஊக்குவிப்பதற்கு ஒன்றிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் கூட்டிய இணையதள மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை செவ்வாய் அன்று 16.11.2021 வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றியது பற்றிக் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய நிதி அமைச்சரின் அந்த முயற்சியை வரவேற்றதோடு, தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டு சுருங்கும் தன்மையை உடையது. தோற்றால் ஏற்பட்ட சமூகம் ஊடகத்தால் தமிழ்நாடு மாநிலம் வருவாய் மற்றும் முதலீட்டில் நீண்டு சுருங்கியுள்ளது. 

   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு முதலீட்டு மாநாடுகளுக்கு தலைமை வகித்து நடத்தியுள்ளார். அவற்றில் 50 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ. 21,021 கோடி முதலீட்டுக்கான உறுதியளிப்பும் சுமார் ஒரு லட்சம் பேருக்கான வேலைகளுக்கு உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஒப்புதலை அதன் பல்வேறு துறைகளில் இருந்து பெறுவதற்கான தேசிய ஒற்றைச்சாளர அமைப்பை பாராட்டியதோடு பின்னாலும் குறைகள் தீர்க்கும் அமைப்பும் இந்த மேடையிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். ஒன்றிய சட்டத்தின் கீழ் ஒப்புதல்களை பெறுவதற்கான காலக்கெடு தற்போது உள்ள நான்கு மாதங்களில் இருந்து ஒரு மாதமாக குறைக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவ சாதனங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான இறக்குமதி அனுமதிகள் இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு நிலம்!

சென்னை,கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 பெரிய விமான நிலையங்களில் விரிவாக்கத்தில் சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்தல் மற்றும் அதை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு மாற்றுதல் ஆகியவை நிறைவடைந்து உள்ளன அதை ஒன்றிய அரசு சர்வதேச விமான நிலையமாக விரைவில் அறிவித்து அதிக அளவில் வர்த்தக விமானங்களும்  பயணிகள் விமானங்களும் அந்த பகுதிக்கு வந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

   தூத்துக்குடி வ.உ.சி விமான நிலையம் ராணுவ ரீதியில் நாட்டுக்கு எந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அது ஓர் ஏற்றுமதி இறக்குமதி தளமாக கூடிய மாபெரும் அமைப்பை பெற்றுள்ளது என்பதையும் விரிவாக விளக்கினார். தூத்துக்குடி துறைமுகத்தை வெளிதுறை முகத்துடன் கூடிய விரிவாக்கத்திற்கான மாஸ்டர் பிளான் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும். 

தொற்று முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர தொழில்களை புனரமைப்பதற்கான விரிவான திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையை தொழிற்சாலைகளின் போக்குவரத்து செலவுகளை குறைப்பதற்கான எட்டு வழி சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் அவர்கள் நிலுவையில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 11 நெடுஞ்சாலை திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும்.

மாநில அரசு மின்சார டிரான்ஸ்பார்மர்கள் இன் நிலையை மேம்படுத்துவதற்கான ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறிய அமைச்சர் அவர்கள், இது தொடர்பாக ஒன்றிய அரசு போதுமான மற்றும் தொடர்ந்து நிலக்கரி சப்ளை செய்வதை உறுதி, அதன் மேம்பாட்டிலும் ஒடிஷாவில் உள்ள சந்திர பில்லா நிலக்கரி பிணை பெற்று மேம்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும்.

கடலில் இருந்த காற்றாலை மின்சாரம்!

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின்சாரத்தில் பெரும் இருப்பை விரிவாக வெளிப்படுத்திய அமைச்சர் ஒன்றிய அரசு கடலில் இருந்தும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் கொள்கை ஒன்றை தயாரித்து அதை மேம்படுத்த மாற்று மின் உற்பத்திக்கு உந்துதலை அளிக்க வேண்டும்.

மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளுக்குள் நிபந்தனைகள் இன்றி கடன் வாங்கிக் கொள்வதற்கு அனுமதிப்பதோடு அந்த எல்லைகளை அந்த மாநிலங்கள் முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றலுக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்.

அதே முறைகளில் ஒரு மாநிலத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஒரு திட்டம் என்ற கட்டுப்பாடு கொடுக்கப்படும் அமைப்புகள் மூலம் தொடராமல் செய்து சந்தை அமைப்பு முறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் தமிழ் நாடு மாநிலத்திற்கு பயனளிப்பதாக இருக்கும் ஏனெனில் கவர்ச்சிகரமான முதலீட்டிற்கான மாநிலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் வருமானவரி ஆதார் கோவில் போன்ற புள்ளி விவரங்களை பெறும் வகையில் புள்ளிவிபரங்கள் பகிர்ந்து கொள்ளும் அமைப்பு 11 அரசு உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளுக்கு அது உதவிகரமாக இருக்கும்.

ஒன்றிய அரசால் சமீபத்தில் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் விலையை குறைத்தது தேவைக்கும் வழங்குமாறு நெகிழ்வு நிலைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் அது வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் வாய்த்த சந்தர்ப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

   தன்னுடைய உரையில் நிறைவில் குறிப்பிட்ட கருத்துக்களில் அமைச்சர் ஒன்று அரசுடன் நெருக்கமாக ஒரு இணைந்து செயல்படுவதற்கான தீர்மான நிலையை உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு அந்த பத்திரிக்கையை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Media: Murasoli