இலங்கை தமிழருக்காக இவ்வளோ செய்கிறாரா அமைச்சர் பிடிஆர்... அவரே சொன்ன விஷயங்கள்!

Published Date: November 24, 2021

CATEGORY: POLITICS

இலங்கை தமிழருக்காக இவ்வளோ செய்கிறாரா அமைச்சர் பிடிஆர்... அவரே சொன்ன விஷயங்கள்!

அரசு தகவல்படி அகதிகளாக முகாம்களில் வாழும் ஆயிரத்து 712 குடும்பத்தினருக்கு 86லட்சத்து 57 ஆயிரத்து ரூபாய் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அணீஸ் சேகர் ஆகியோர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

நிதி அமைச்சராக இருப்பதால் 10 லட்சத்திற்கும் மேல் உள்ள கோப்புகளை நான் பார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் 30 கடந்த நாட்களில் இலங்கை தொடர்பான 25 கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

 

அதில் கல்வி, தொழில் முனைவோர் உள்ளிட்ட எல்லா கோப்புக்கள் வந்தன. இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும் சமமாக இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு வருகிறது.

எனது துறை அதிகாரிகளுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம்  குறித்த தகவல் சேமித்து வைக்க தனி கணினி ஒதுக்கி தமிழ்நாடு அரசு சார்பில் என்னென்ன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்ற தகவல்களை சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளேன்.

இங்கு உள்ள வீடுகள் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  செய்வார்.

 

சமீபத்தில் கொழும்புவில் உள்ள தூதரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இலங்கையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இங்கிருந்து என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து உதவி செய்ய தயாராக தமிழ்நாடு முதல்வர் இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். கண்டிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “25 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழர்கள் ஒரு குடும்பத்தைப் போல் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” என்றார்.

 

Media: TAMIL.SAMAYAM.COM