முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.9.2022) மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்தத்தினை துவக்கி வைத்தார்.

Published Date: September 16, 2022

CATEGORY: CONSTITUENCY

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.9.2022) மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவில், கடந்த 30 ஆண்டுகாலமாக கோயம்புத்தூர் வடிவேலம்பாளையத்தில் ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் சமூக சேவகி திருமதி கமலாத்தாள் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, தமிழ்நாட்டின் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டங்களின் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை அரிய ஆவணங்களாக தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்ட “ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி" என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Media: Murasoli