அரசியலுக்கு பலர் பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்பு அந்த வேலை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்தேன். இதற்கு ஒரே காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்பதே ஆகும்.

Published Date: September 25, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, செப்.25: மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலுக்கு பலர் பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்பு அந்த வேலை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்தேன். இதற்கு ஒரே காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்பதே ஆகும்.

நான் அமைச்சரான பின்பு தொகுதியில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உபகரணங்களை வழங்கி இருக்கின்றேன். தற்போது மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் அலோன் கோ நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து தமிழகஅரசு இதுபோன்று முகாம்களை நடத்துவதை எங்களுக்கு செய்கின்ற உதவியாகக் கருதுகிறேன்.

இதுவரை எனக்கு வந்த தகவலின்படி 800 பேர் பதிவு செய்து அதில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

நான் எந்த பொறுப்புக்கு போனாலும் இந்தத் தொகுதி மக்களை மறக்க மாட்டேன். என்னை முதன் முதலில் இதே இடத்தில் வாக்காளர்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் தற்போது மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரின் ஆசியினால் தற்போது அமைச்சராக பணியாற்றி வருகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Media: Dinamani