ஆலோசனைக் கூட்டத்தில் ஹார்வர்டில் உள்ள கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் பேராசிரியர் ரேமா ஹான்னா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிதி வருவாய் இனங்களைப் பெருக்குவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

Published Date: December 14, 2022

CATEGORY: ECONOMY

மதுரை, டிச. 13: மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் ஆதாரத்தைப் பெருக்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாட்டு நிபுணர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாநகராட்சியில் நிதிவருவாய் இனங்களைப் பெருக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார்.  ஆலோசனைக் கூட்டத்தில் ஹார்வர்டில் உள்ள கென்னடி ஸ்கூல் ஆப்  கவர்ன்மென்ட் பேராசிரியர் ரேமா  ஹான்னா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிதி வருவாய் இனங்களைப் பெருக்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் மதுரை மாநகராட்சியில் தற்போதுள்ள நிதி, வருவாய் இனங்களை மேம்படுத்துவது குறித்தும்,,  சென்னை மாநகராட்சியில் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகளை மதுரை மாநகராட்சியில் பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில்மேயர் வ.இந்திராணிமாவட்ட ஆட்சியர் எஸ். அனிஷ்சேகர்மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங்,   துணை மேயர் தி. நாகராஜன்நகரப் பொறியாளர் அரசுதுணை ஆணையர்  முஜிபூர் ரகுமான்நகர் நல அலுவலர் வினோத்குமார்மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். 

வரிச்சலுகை பெற்று வணிக அடிப்படையில் இயங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஆலோசனைக் கூட்டத்தில்மதுரை நகரில் நீண்ட காலமாக சேவை அடிப்படையில், இயங்குவதாகக் கூறி வரிச்சலுகை பெற்று வரும் கல்வி நிறுவனங்கள்மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைப்புகள் உண்மையிலேயே சேவை அடிப்படையில் இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும்.

ஆய்வின்போதுசேவை அடிப்படையில் இயங்காமல் வணிக அடிப்படையில் இயங்குவது தெரியவந்தால்வரிச்சலுகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேலும், மதுரை நகரில் அதிகளவு வரி பாக்கி வைத்துள்ள தனியார் கல்வி நிலையங்கள்மருத்துவமனைகள்தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் வரிபாக்கியை உடனடியாக வசூலிக்க உதவி ஆணையர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.  மாநகராட்சி வரி வசூலிப்பாளர்களை இந்த நிறுவனங்களில் வரி வசூலிக்க அனுமதிக்கக் கூடாது.  மாநகராட்சி தொடர்பான பல்வேறு வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், வழக்குரைஞர்கள் குழு முறையாக செயல்பட்டு வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மதுரையில் இயங்கி வரும் புதிய, பழைய பெரிய நிறுவனங்கள் பலவற்றில் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ள பரப்புக்கும் கூடுதலாக இயங்கி வருகின்றன.  இதனால்இந்நிறுவனங்கள் செலுத்தும் குறைவான வரியால் நிதி இழப்பு ஏற்படுகிறது எனவேஇந்நிறுவனங்களில் முறையாக அளவீடு செய்ய குழுக்கள் அமைத்து உரிய வரியை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Media: Dinamani