Published Date: November 1, 2021
CATEGORY: HUMAN RESOURCE POLICY
ரூ.2,000 கோடி மீட்பு: பிடிஆர் பகீர் தகவல் - ஈபிஎஸ் மாவட்டத்தில் அதிகமாம்!
பொதுமக்களுக்கு 'பொது நிதி மேலாண்மை' குறித்து விளக்குவதற்காக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செய்தியாளர்ககளை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “ தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும் நிதிகளை கணக்கிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் அரசு சார்பில் மூத்த அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அடிப்படையில் முடங்கியுள்ள பணங்களை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும், அதிகாரமில்லாத நீதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் மூத்த அதிகாரிகள் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்ததில் ரூ.2,000 கோடி அளவில் திட்டங்களுக்காக செலவு செய்யப்படாத தொகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின் மூலம் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறான கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணப் பயன்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.1200 கோடி தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இது சரியான முறையில் செலவு செய்யப்பட்டது என்பதற்கான எந்த தகவலும் இல்லை.
முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த பல்வேறு முக்கிய பரிந்துரைகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினை விரிவுபடுத்துதல், கோயில் பிற்காலத்தில் பள்ளி குழந்தைகளின் கற்றலில் அதனை ஈடுசெய்வதற்காக இல்லம் தேடி கல்வி மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் செலவினங்களுக்கான "சிஸ்டம்" சரி இல்லை. கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தும் "சிஸ்டம்" சரியான முறையில் இல்லை. மேலும் கடந்த ஆட்சியில் 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக நிதி சரியான முறையில் ஒதுக்கப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன் பெற ஏதுவாக அவர்கள் பெரும் கடனுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும்.
Media: TAMILSAMAYAM.COM