இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த நான் நேற்றைய தினம் மாநில முழுமைக்குமான பள்ளி மாணவர் காலை உணவுத் திட்டத்தை இதே மாநகரில் நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

Published Date: September 16, 2022

CATEGORY: CONSTITUENCY

சென்னை, செப் 16.: மதுரை மாட்டுத்தாவணியில் ரூ. 600 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்தார்..

முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை விவரம் வருமாறு:-

இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த நான் நேற்றைய தினம் மாநில முழுமைக்குமான பள்ளி மாணவர் காலை உணவுத் திட்டத்தை இதே மாநகரில் நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

இன்றைய தினம் மதுரைப் பகுதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்று இருக்கிறேன். சென்னை, கோவை, திருப்பூருக்கு அடுத்ததாக மதுரையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொழில் வளர்ச்சி என்கிற போது அது பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் உள்ளடக்கியதுதான். இந்தத் தொழில்கள் மூலமாகத்தான் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பல லட்சம் குடும்பங்கள் வாழும் அந்த அடிப்படையில் இவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. 

பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, இன்று தொழில் வளர்ப்பதிலும் முன்னணியில் விளங்குகிறது. இத்தகு சிறப்புமிகு தூங்காநகரில் இவ்விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சமச்சீரான வளர்ச்சியே.

Media: Maalai Murasu