மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் பாலத்தின் மற்றொரு பகுதியாக உள்ள சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம், இணைப்புப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாலப் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.

Published Date: November 19, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை: பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைப்புப்பால பணிகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் பாலத்தின் மற்றொரு பகுதியாக உள்ள சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம், இணைப்புப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாலப் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.  எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தபோது இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க பழனிவேல் தியாகராஜன் முயற்சி செய்தார்.  தற்போது அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் நில எடுப்புப் பணிகள் நிறைவடைந்தன.  இதையடுத்து ஜெய்ஹிந்துபுரம்-டிவிஎஸ் நகர் இணைப்புப் பாலத்தைக் கட்டும் பணியை பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

மேயர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  251 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலக் கட்டுமானப் பணியை 18 மாதங்களில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Media: The Hindu