மதுரையில் குறுவட்ட விளையாட்டு போட்டி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வியாழக்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். உடன், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மேயர் வ.இந்திராணி, முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா உள்ளிட்டோர்.

Published Date: September 2, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, செப். 1: மதுரையில் பள்ளி மாணவ,மாணவிகளுக்குஇடை யேயான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கி டையே ஆண்டுதோறும் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குறுவட்ட விளை யாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மதுரை எம் ஜிஆர் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழா வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று தேசி யக் கொடியேற்றி வைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

இப்போட்டியில் 37 பள்ளிகளைச் சேர்ந்த 950 மாணவ, மாண வியர் பங்கேற்றனர். இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஒட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற் றன. விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநக ராட்சி மேயர் வ.இந்திராணி, மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Media: Dinamani