மதுரை அமைச்சர்களுக்கு பாராட்டு

Published Date: January 22, 2022

CATEGORY: CONSTITUENCY

நெரிசலை குறைப்பதற்கான திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

* மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு ரூ.100 கோடி மதிப்பில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ள சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்துவதற்கும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும்.

நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். தற்போது உள்ள அந்த சிறைச்சாலை இடம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பசுமை பகுதியாக மேம்படுத்தப்படும்.

* வண்டியூர், செல்லூர் மற்றும் தென்கரை ஏரி பகுதிகள். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் பொதுபயன்பாட்டு இடங்களாக மேம்படுத்தப்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது, இந்த நிகழ்ச்சி மிக சிறப்போடு நடை பெற வேண்டும் என்ற உணர்வோடு நம்முடைய வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அதிகமாகி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. காலையில் கூட, அவரோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் எப்படியாவது நான் வந்து விடுகிறேன் என்று என்னிடத்தில் சொன்னபோது, வேண்டாம், கட்டாயம் வரக்கூடாது. முதலில் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பிறகு பார்க்கலாம் என்று சமாதானம் செய்தேன். பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்து, அந்த துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து, அதன் வழியாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக அதனை மாற்றி கொண்டிருக்கக்கூடியவர் அமைச்சர் மூர்த்தி.

அதைப் போலத்தான் நம்முடைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவர் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. மூன்று தலைமுறைகளாக இந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர் பி.டி. ஆர். குடும்பம். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், அதை காரணமாக சொல்லாமல் நிதியை வழங்க வேண்டிய நெருக்கடியான கடமை அமைச்சர் பொறுப்பேற்று இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜனுக்குத்தான் உண்டு. நிதியை உருவாக்கவும்- இந்த அரசின் கொள்கை திட்டங்களை வகுப்பதிலும் தனது மொத்த திறமையையும் வழங்கி வருபவராக பழனிவேல் தியாகராஜன் இருந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பாராட்டி உள்ளார்.

அப்பலோ மருத்துவமனை சந்திப்பு,மண்டேலா நகர் சந்திப்பு காணப்படும் சந்திப்புகளில் புதிய மேம்பாலங்களும் ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றனர் இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும். தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை 5 முன்னிறுத்தும் வகையில்  மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும். இன்றைய நாள் ரூ.51.77 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சு.வெங்கடேசன் எம்.பி. எம்.எல்.ஏக்கள் அ.வெங்கடேசன், மு.பூமிநாதன், கோ.தளபதி, மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூர்யகலா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Media: Dinakaran