மாநகராட்சியை கைப்பற்ற முனைப்போடு திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்

Published Date: January 31, 2022

CATEGORY: POLITICS

மாநகராட்சியை கைப்பற்ற முனைப்போடு திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்

மதுரை திருப்பரங்குன்றம், ஜன. 30

மதுரை மாநகராட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். 

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ.  தளபதி தலைமை வகித்தார். கூட்டு கூட்டத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியது: இந்தத் தேர்தலில் அனைவரும் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சியின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும். அவர்களுக்கு வருங்காலங்களில் உரிய பொறுப்பை கட்சி அளிக்கும். மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றிஆகவேண்டுமயே ஆக வேண்டும். ஏனெனில் மதுரை மாநகருக்கு பல கோடி மதிப்பில் கோயில் உள்கட்டமைப்பு வசதி, சாலைகள் பாலங்கள் என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற இருக்கின்றன. மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் தான் இந்த பணியை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். 

1996-2001 காலகட்டத்தில் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மூலம், மதுரையை அடைந்த வளர்ச்சியை விட அதிகப்படியான வளர்ச்சியை வரக்கூடிய காலங்களில் எட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சி தேர்தல். அதனை மையமாகக் கொண்டுதான் சாக்கடை,  குடிநீர், தெருவிளக்கு வசதி என ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்று சேர உள்ளது. திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் வென்றால் மட்டுமே அதன் முழுப்பயன் கிடைக்கும் என்றார். கூட்டத்தில் மாவட்ட, பகுதி ,கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

திருப்பரங்குன்றம்:  பசுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ. தளபதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: மதுரை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது வார்டு பிரித்தல் பலவித குறைபாடுகள் உள்ளன. கூட்டணி கட்சியினருக்கு 100 வார்டுகளில் 26 வீடுகள் ஒதுக்கப்படும். திங்கள்கிழமை மாலைக்குள் வேட்பாளர் இது செய்யப்படும். கட்சிப் பதவியில் இருப்பவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கட்சிப் பதவியை விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும். மதுரைக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவர உள்ளார். எனவே 100 இடங்களிலும் நாம் வெற்றி பெற உழைக்க வேண் டும். 

கூட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சின்னம்மாள் ,கே.அகிலன், சிவக்குமார், நீலமேகம், தன செல்வம் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Media: Dinamani