Published Date: November 18, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை நவ. 18: புதிய வழித்தடங்களைத் துவக்கி வைத்து, அரசு டவுன் பஸ்சில் நிதியமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் பயணித்தார்.
மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நடந்த புதிய வழித்தடத் துவக்க விழா நிகழ்ச்சியில், புதிய அரசு டவுன் பஸ்சை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். மாட்டுத்தாவணியில் துவங்கி அண்ணா பஸ் ஸ்டாண்ட் - அரசு மருத்துவமனை - சிம்மக்கல் - பெரியார் பஸ் ஸ்டாண்ட்- எல்லீஸ் நகர்- பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் இந்த பஸ் இயக்கப்படுகிறது, இதேபோல், கொன்னாவாயன் சாலை அரசு பஸ் ஸ்டாப்பில் நடந்த நிகழ்ச்சியில் மாட்டுத்தாவணி -அண்ணாநிலையம்-அரசு மருத்துவமனை- செல்லூர் - தத்தனேரி- அருள்தாஸ்புரம்- இஎஸ்ஐ - கொன்னவாயன் சாலை பாத்திமா கல்லூரி - விளாங்குடி வழித்தடத்தில் இயங்கும் அரசு டவுன் பஸ்சையும் அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். மேலும், அமைச்சர் கொன்னவாயன் சாலையிலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு கிளம்பிய அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். தன்னுடன் பயணித்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களுக்கும், சேர்த்து அமைச்சர் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்தார். அனைவரும் தத்தனேரி பகுதி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், முன்னாள் கவுன்சிலர் குடைவீடு அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: Dinamani