Published Date: December 10, 2022
CATEGORY: CONSTITUENCY
சென்னை, டிச.10- காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும்! இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும் எனவும், தமிழகம் சமூக நீதியில் மட்டுமல்ல இந்தியாவிற்கு சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் எனக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.12.2022) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத் தொடக்க விழாவில் ஆற்றிய உரை வருமாறு:
தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல: இந்தியாவுக்காக மட்டுமல்ல உலகத்தின் நன்மைக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைக்கு எல்லை இல்லை. இயற்கைக்கு வரையறை இல்லை. இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. இயற்கையைக் காக்க வேண்டிய கடமையும் அனைவருக்கும் உரியது என்கின்ற அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல! இது உலகளாவிய பிரச்சனை! அரசாங்கம் மட்டுமே தீர்த்து விடக்கூடிய பிரச்சனை அல்ல! அதனால்தான், நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்ஹிம், இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அவர்கள், அரசு சாரா உறுப்பினர்களும் இணைந்து இது ஒரு மாநாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி!
இன்றைக்கு ஐ.நா. அமைப்பாக இருந்தாலும் உலகின் பல நாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சனையைப் பற்றி தான் அனைவரது கவலையும்! அதுதான் காலநிலை மாற்றம்! மானுடத்தின் மிக முக்கிய பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் என்பது இருக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசும் மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது என்பதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்.
இதனை ஒரு வரலாற்று கடமையாக மட்டுமல்ல: எனது வாழ்க்கைக் கடமையாகவும் நான் பார்க்கிறேன் “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று தொல்காப்பியம் தொடங்கி, “நீரின்றி அமையாது உலகம்” என்ற வள்ளுவம் வரை, சூழலைப் போற்ற வேண்டியதன் தேவையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். அதனால்தான், அந்தப் பாதையில் நமது அரசு இன்று செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூக நீதியில் மட்டுமல்ல. சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி, தொழில், மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை!
நமக்கு இயற்கை உணர்த்தும் பாடம்!
உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள் என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது, “நான் இயற்கை மனிதன்” என்று சொன்னார். “செயற்கையான அடையாளங்கள் எதுவும் எனக்குக் கிடையாது” என்றார். “மானுடப்பற்று மட்டுமே எனக்கு உண்டு” என்று சொன்னார். அத்தகைய இயற்கை மனிதர்களாக: மானுடப்பற்று மட்டுமே கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும். வாழ்ந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை நமக்கு இயற்கை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
என எல்லாப் பக்கமும் நாம் பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம். இவை நமக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கமான பிரச்சனை!
காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்ட வேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.
நமது திராவிட மாடல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில்(Gloscow) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் அவர்கள், “ இந்தியா வரும் 2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலையை எட்டி விடும் என்று அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது.
கடந்த ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்துச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
வெப்பமண்டல நாடுகளின் காலம் நிலையை கணிப்பது கடினம்!
மீண்டும் மஞ்சப்பை இயக்கம் துவக்கப்பட்டது!
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, “ காலநிலை மாற்ற நிர்வாகக் குழு” எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலநிலை மாற்றத்தை அறிந்து திட்டங்களை செயல்படுத்துவோம்!
மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை!
2070க்குள் தமிழகம் கார்பன் சமநிலையை அடையும்!
இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள
2070 ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றம் காப்போம்! சூழலையும் காப்போம்!
மண்ணையும் காப்போம்! மக்களையும் காப்போம்!
இயற்கையை காப்போம் !இன்னுயிர் காப்போம்!
பல்லுயிர் காப்போம்! மானுடப் பண்பாடு காப்போம்!
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Media: Murasoli