ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்கள் 1801 அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது நினைவுநாள், அரசு விழாவாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 221-ஆவது நினைவு நாளான திங்கள்கிழமை மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து குருபூஜை தொடங்கியது. காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மதசூதன்ரெட்டி தேசியக்கொடியேற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

Published Date: October 26, 2022

CATEGORY: CONSTITUENCY

திருப்பத்தூர் அக் 25:  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கட்கிழமை மருதுபாண்டியர்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது உருவச் சிலைகளுக்கு அமைச்சர்கள் பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்கள் 1801 அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது நினைவுநாள், அரசு விழாவாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 221-ஆவது நினைவு நாளான திங்கள்கிழமை மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து குருபூஜை தொடங்கியது. காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மதசூதன்ரெட்டி தேசியக்கொடியேற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, அரசு சார்பில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரிய கருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், கோகுல இந்திரா, மணிகண்டன், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக.ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்டச் செயலாளர் அசோகன், நகர்செயலாளர் புதுத்தெரு முருகேசன், பாஜக சார்பில் தொகுதிப் பொறுப்பாளர் முருகேசன், ஒன்றியத் தலைவர் தங்கபாண்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருணகிரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மாவட்டச்செயலாளர் தேர்போகிப்பாண்டி, மதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன், நகரச்செயலாளர் ராஜ்மோகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன், நாம் தமிழர் கட்சியின் நகர் பொறுப்பாளர் சரவணன், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் மோகன், லெனின், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டாலின், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி நாராயணன் மற்றும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

பால்குடம்: திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவுத்தூண் அருகேயுள்ள உருவச்சிலைகளுக்கு யாகவேள்வி நடைபெற்றது. அகமுடையார் உறவின்முறை மடத்தில் சிவவழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பால்குடங்களுடன் பூத்தட்டுகளும் சுமந்து ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நினைவுத் தூணுக்கு வந்தனர். அகமுடையார் சங்கத்தலைவர் ஏ.ராஜசேகர் தேசியக் கொடியைஏற்றி வைத்தார். மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு பால், தயிர், இளநீர்,மஞ்சள்,திருமஞ்சனம் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அகமுடையார் உறவின்முறை மற்றும் மருதீஸ்வரர் ஆன்மிக சேவா சங்கம் இணைந்து இவ்விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அகமுடையார் சங்கத் தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர், என்.பி.சுப்பிரமணியன், செயலர்      சி.பைரவசுந்தரம், பொருளாளர் விஜயசேகரன், மருதீஸ்வரர் ஆன்மிக சேவா சங்க தென்மண்டலச் செயலர் மகிமை நாகராஜன், மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கோயிலான சண்முகநாதப் பெருமான் கோயில் பிரகார மண்டபத்தில் உள்ள பெரிய மருது, சின்ன மருது உருவச் சிலைகளுக்கு பொன்னம்பல அடிகளார் தலைமையில் பட்டாடை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Media: Dinamani