ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலைதூக்கக் கூடாது: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

Published Date: December 18, 2922

CATEGORY: CONSTITUENCY

மதுரை, டிச.18 - தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார்.சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

அமைச்சர்கள் கீதாஜீவன்பழனிவேல் தியாகராஜன்மனோ தங்கராஜ், ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

 அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு  பெரும்பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.  அவர்களுக்கு அரணாக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்திவிடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது.

மத உணர்வை மதிப்போம்மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி மு க வின் கொள்கை. நம்மிடம்  ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலைதூக்கக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார். 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையினரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாகத் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.  எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறோம்.  தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர்.  எனக்கு கல்வி, திறமை இருந்தாலும்,   முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

 இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகையை மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மாணிக்கம் தாகூர், எம்.எல். ஏக்கள் இனிகோ இருதயராஜ்ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ. தளபதி, அப்துல் சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி, சி.எஸ்.ஐ பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணைத் தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்

நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இயக்குனர் சுரேஷ்குமார், கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Media: Maalai Murasu