மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிதிஅமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடந்தது. மகபூப்பாளையம் ஜின்னா திடல், அன்சாரிநகர், திடீர்நகர், வடக்கு கிருஷ்ணன் கோயில்தெரு.

Published Date: November 28, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.28: நேரடியாக வீட்டிற்கே சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்களை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொருத்தி விட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிதிஅமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடந்தது. மகபூப்பாளையம் ஜின்னா திடல், அன்சாரிநகர், திடீர்நகர், வடக்கு கிருஷ்ணன் கோயில்தெரு. கருகப்பிள்ளை தெரு, வடக்குமாசிவீதி, ராமாயணசாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே நிதிஅமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்றார். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்களை அமைச்சரே பொருத்தியதால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி. கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் குடைவீடு அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Media: Dinakaran