அரசின் முறையான திட்டமிடுதல், சிக்கனம் காரணமாக வரு வாய்ப் பற்றாக்குறை ரூ.16,000 கோடியாகக் குறைந்துள்ளது. நிக ழாண்டில் இந்த பற்றாக்குறை மேலும் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.

Published Date: December 8, 2022

CATEGORY: ECONOMY

சென்னை,டிச.7: பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ள வலு வான அரசியல் தலைமை தேவை என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் சென்னை வேளச்சேரியில் புதன்கி ழமை நடை பெற்ற 12-ஆவது மாநில நிதி மாநாட்டை தொடக்கிவைத்து நிதி அமைச் சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

தமிழகத்தில் 10,000 தொழிற்சாலைகள் உள்ளன. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் முதல் கரோனா அலையை விட ஏழு மடங்கு வலிமையான இரண் டாவது அலையும் வந்தது. நோய்ப் பரவல் மற்றும் கடும் மழை கார ணமாக அதற்குத் தேவையான நிதியை அரசு திட்டமிட்டு திரட்ட வேண்டியிருந்தது.

அரசின் முறையான திட்டமிடுதல், சிக்கனம் காரணமாக வரு வாய்ப் பற்றாக்குறை ரூ.16,000 கோடியாகக் குறைந்துள்ளது. நிக ழாண்டில் இந்த பற்றாக்குறை மேலும் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.

எளிதாக வணிகம் செய்வதில் தமிழகம் 14-இல் இருந்து 3- ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 18 மாதங்களில் 10 பில்லியன் டாலர்கள் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது ஒரே நேரத்தில் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்குரிய மந்திரக்கோல்யாரி டமும் இல்லை. சீர்திருத்தங்களைக் கொண்டுவர வலுவான அரசி யல் தலைமை தேவை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் வலுவான அரசியல் தலைமை உள்ளது.

ரகுராம் ராஜனை போன்ற மூத்த நிதி ஆலோசகர்கள் கூறும் சீர் திருத்தங்களை மாநில அரசு ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) குறைந்துள் ளது. அதேபோல தமிழகத்திலும் குறைந்துள்ளது. மூன்று ஆண்டு களில் நமது மூலதனச் செலவு மூன்று மடங்காக நிச்சயம் உயரும்.

முதல்வர் தலைமையில் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த கூட்டம் நடந்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

வேலையில்லாத படித்த இளைஞர்கள் 'நான் முதல்வன்' போன்ற திட்டங்களில் சேரலாம். தமிழ்நாடு அரசு தகுந்த நிதி நடவடிக்கை களை எடுத்து வருவதால், நிதிநிலை, பொருளாதாரம் பாதுகாப் பாக உள்ளது என்றார் அவர்.

இந்த மாநாட்டில், சிஐஐ ஆலோசனைக்குழு ஒருங்கிணைப் பாளர் கோபால் மகாதேவன், இணை ஒருங்கிணைப்பாளர் பி.சி. தத்தா, சிஐஐ தென்மண்டல முன்னாள் தலைவர் டி.டி.அசோக், முன்னாள் மாநிலத் தலைவர் என்.கே.ரகுநாத் உள்பட பலர் பங் கேற்றனர்.

Media: Dinamani