மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கத்தில் மேலும் அவர் பேசியது:

Published Date: November 19, 2022

CATEGORY: ECONOMY

மதுரை, நவ. 18: திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர்,  தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்ரங்கத்தில் மேலும் அவர் பேசியது:

தமிழகத்தில் சுமார் 30 சதவீதம் முதியவர்கள் தனிமையில் வாழ்வதாகக் கணக்கெடுப்புகளில் தெரிய வருகிறது.

இதில்,  பலர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறாமல் இருப்பதாகக் கண்டறியப்பட்டு,  அவர்களுக்கு  உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பொது முடக்க காலத்தில் கற்றலில் மாணவர்களுக்கு பெரிய இடைவெளி ஏற்பட்டது.  பின்னர், அரசு செயல்படுத்திய ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’  மூலமாக அந்த இடைவெளி குறைக்கப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை சுமார் ரூ.16 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.  இதற்கு, முதல்வர் அளித்த உறுதியான ஆதரவே முதன்மையான காரணம் ஆகும்.

சென்னையுடன் ஒப்பிடுகையில் மதுரை மாநகரின் அடிப்படை வசதிகள் திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை.  அதனை சீர் செய்யும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,  பல்வேறு வர்த்தக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Media: Dinamani