எஸ்பிஐ ஏடிஎம்மில் தமிழ் மொழி இல்லை என வந்த புகாருக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்.

Published Date: November 16, 2022

CATEGORY: ECONOMY

 

ptr palanivel thiagarajan

தமிழகத்தில் ஏடிஎம்களிலேயே தமிழ் மொழி இருப்பதில்லை என்பது நெடுநாட்களாக முன்வைக்கப்படும் புகார். ஆனால், அனைத்து ஏடிஎம்களிலும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியின் ஏடிஎம்மில் தமிழ் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகள் மட்டும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர் ஒருவர் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், “ஜெய்ஹிந்த்புரம் மதுரை தமிழ்நாடு ATM ல் English Hindi Telugu. தமிழ் எங்கே????
@TheOfficialSBI

தமிழ் இல்லைனா கூட பரவாயில்லை எங்கே இருந்து Telugu வந்ததது?????
@ptrmadurai நம்மூர்ல இப்படி பன்றாங்கே சார்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலில், “தமிழகத்தின் அனைத்து வங்கிகளிடமும் நிதித்துறை ஏற்கனவே இந்த பிரச்சனையை குறிப்பிட்டுள்ளது. இது ஒரு அசாதாரண செயல்பாட்டு பிழைவு.

இதுபற்றி எங்கள் துறை செயலாளர்கள் இன்று வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்று, சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Media: TAMIL.SAMAYAM.COM