தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் மாநிலத்தின் "மூத்த அரசியவாத்களுகான துறையான" நிதித்துறையை கையாளும் இளைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இந்த கடினமான பணியில் அவர் நியமிக்கப்பட்டபோது, அவர் அதற்கு முன்னர் ஒரு முறை மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.

Published Date: June 2, 2022

CATEGORY: ECONOMY

தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் மாநிலத்தின் "மூத்த அரசியவாத்களுகான துறையான" நிதித்துறையை கையாளும் இளைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இந்த கடினமான பணியில் அவர் நியமிக்கப்பட்டபோது, அவர் அதற்கு முன்னர் ஒரு முறை மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.

அனுபவமிக்க அரசியல்வாதிகள் அவரது செயல்பாடுகள் குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர், ஆனால் பி.டி.ஆர் அவர்களோ, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஓரளவுக்கு வெற்றிபெற்றுள்ளார், ஒன்றிய  அரசாங்கத்திடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார், மேலும் தற்போதைய வரிவிதிப்பு முறையை, குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியை கடுமையாக விமர்சிப்பவராக உள்ளார். தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) பொறுப்பேற்க வேண்டுமெனவும், பணவீக்கப் போக்குகளைக் கட்டுப்படுத்த அவர்கள் இருவரும் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஃப்ரண்ட்லைனுக்கு அவர் அளித்த பேட்டியின் பகுதிகள்:

CPI (நுகர்வோர் விலைக் குறியீடு) மூலம் அளவிடப்படும் தேசிய சராசரி 7.8 சதவீதமாக இருக்கும் போது, ஏப்ரல் மாதத்திற்கான NSO (தேசிய புள்ளியியல் அலுவலகம்) தரவுகள் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.4 சதவீதமாக உள்ளதைக் காட்டுகிறது. இந்த வேறுபாட்டிற்கான தங்களது விளக்கம் என்ன?

பணவீக்கம் என்பது மிகவும் சிக்கலான விஷயம். பணவீக்கத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கலாம். ஒன்று தேவை உந்துதல் பணவீக்கம். மற்றொன்று, மறைக்கபட்ட தேவை அல்லது விநியோக பக்க அதிர்ச்சிகள் அல்லது இயல்பான சுழற்சியில் ஏற்படும் சில பிறழ்வுகள் எனலாம்.... இந்தியாவின் ஆற்றலின்(எரிபொருள்) பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது எனவே எண்ணெய் விலை உயர்வு நமது பணவீக்கத்தை அதிகப்படுத்துகின்றன, ஏனெனில் அரசாங்கம் அந்த விலை உயர்வை நேரடியாக நுகர்வோர் மீது சுமத்துகிறது. எரிபொருள் ஒவ்வொரு பெரிய தொழிற்துறையிலும் உள்ளீடு செலவாகவும் உள்ளது.

அந்தக் கண்ணோட்டத்தில், கடந்த 10, 15 ஆண்டுகளில் மரபுவழியிலான பணவியல் கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா என்ற வாதம் நடைபெறுவதாக நான் கருதுகிறேன் - பணவீக்கத்தைத் தூண்டாமல் நீங்கள் வரம்பற்ற அளவு பணத்தை அச்சிட்டுக் கொண்டே இருக்கலாம். இது முன்னெப்போதும் கண்டிராத நிகழ்வு - கோவிட்-க்கு முன்னரும், பின்னரும் பல டிரில்லியன்கள் அளவுக்கு அதிகப்படியான பணப்புழக்கம் உண்டாக்கப்பட்ட பின்னரும் அவை பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுகவில்லை.

அது ஏன் நடக்கவில்லை என்பதற்கான  கோட்பாட்டில் இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவதாக, எவ்வளவு அதிகப்படியான பணப்புழக்கம் செலுத்தப்பட்டாலும், அதை செலவழிக்கக்கூடிய மக்களின் கைகளுக்கு அது செல்லவில்லை. முதலீடு செய்யக்கூடியவர்களின் கைகளுக்கு மட்டுமே அது போய்க் கொண்டிருந்தது. எனவே, அதிக பணம் வசதிபடைத்தவர்களுக்கு சென்றது, நடுத்தர மற்றும் ஏழைகளுக்களிடம் பணம்  மிகவும் குறைவாக இருந்தது. பணம் வசதிபடைத்தவர்களுக்கு போனால், அவர்களால் செலவு செய்ய முடியாது. செலவு செய்தாலும் அவை சொத்துக்கள், கலை மற்றும் பங்குகள் போன்றவற்றில் இருக்கும்.

 

இது சுழற்சியை நிறைவு செய்யாது அல்லவா…

இது நுகர்வோர் செயல்முறையை பாதிக்காது. ஆனால், சந்தை மதிப்பீடுகளை பாதிக்கிறது; சொத்து விலையை பாதிக்கிறது. இது உண்மையான பொருளாதார நடவடிக்கைக்கு வழிவகுக்கவில்லை. பணவியல் கொள்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பணவியல் கொள்கையைப் பயன்படுத்துவது மிகவும் கடினம். எவ்வளவு பணப்புழக்கம் செலுத்தப்பட்டாலும், பொருளாதார நடவடிக்கை எதுவும் நடக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. பணபுழக்கம் உற்பத்தி அல்லது புதிய நிறுவனங்கள் அல்லது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படவில்லை.

தற்போது திடீரென பணவீக்கம் அதிகரித்துள்ளது.  உலகளாவிய பணவீக்கத்தில் ஒரு பெரிய உயர்வு ஏன் ஏற்பட்டுள்ளது, வேலையின்மை எண்ணிக்கை எப்போதும் குறைவாக இருக்கும் அமெரிக்கா போன்ற ஒரு இடத்தில் கூட ஏன் இது ஏற்பட்டுள்ளது? உண்மையில் பணியாளர்களுக்கான கடுமையான போட்டி உள்ளது, பொருளாதாரத்தில் ஒரு பெரிய துள்ளல் ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக ஊதியம் உயர்த்தப்படுகிறது மற்றும் அதன் காரணமாக பாரம்பரிய பணவீக்க சுழற்சியின் அடிப்படையில்- செலவழிக்க விரும்பும் மக்களின் கைகளில் பணம் உள்ளது. இத்துடன், கொவிட் ஏற்படுத்திய வழங்கல் பக்க அதிர்ச்சியும் இணைந்துள்ளது… எனினும் இது கோவிட் ஆண்டுகளில் இருந்த அளவிற்கு மோசமாக இல்லை.

இந்தியா எண்ணெய் உள்ளட பொருட்களின் பெரிய இறக்குமதியாளராக உள்ளது, அவற்றின் விலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இடுபொருள்களுக்கான செலவுகள் உயர்ந்து, பால், காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்வுக்கு வழிவகுத்தது, மேலும், வழங்கல் பக்க அதிர்ச்சி தெளிவாக தெறிக்கின்றது. தமிழ்நாடு போன்ற ஒரு இடத்தில் மாநில அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குவதால், பணவீக்கத்தின் விளைவுகளை சில வழிகளில் தணித்து வருகிறோம் . 

பொது விநியோக அமைப்பு போன்ற திட்டங்களா..

ஆம். சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி போன்ற துறைகளுக்கான திட்டங்களால் .. எனவே இங்கு விளிம்பு நிலையில் மக்கள் அதிக எண்ணிகையில் இல்லை. பலர் ஒப்பீட்டளவில் நன்றாக வாழ்கின்றனர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த பட்சம் மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் தனித்துவமாக பார்க்கமுடிவது, செல்வப் பங்கீட்டின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் குறைவான வேறுபாடுகள் கொண்ட சமூகமாக தமிழ்நாடு உள்ளது. நாங்கள் முழுமை பெற்றவர்கள் என்று நான் கூறவில்லை, ஆனால் ஏற்றத்தாழ்வை குறிக்கும் கினி கோயபிசியன்ட் மகாராஷ்டிரா அல்லது குஜராத்தில் இருப்பதை விட குறைவாக உள்ளது. இதன் பொருள் உண்மையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது கூடுதல் வேலையைச் சார்ந்தவர்கள்  என யாரும் இல்லை. எனவே, நுகர்வு இங்குஅதிகமாக உள்ளது. நுகர்வு ஏற்கனவே அதிகமாக இருக்கும்போது, பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பில்லை.

இவை அனைத்தும் யூகங்கள். என்னால் விளக்க முடியாது.. அனால் இந்த விளைவுகளை எண்ணி மகிழ்சியடைகிறேன். இது நமது ஒட்டுமொத்த பொருளாதார மாதிரியான திராவிட மாடலுடன் தொடர்புடையது: அரசு நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது மற்றும் தனிநபர் நுகர்வு அதிகமாக உள்ளது. சில பலவீங்களும் உள்ளன. நம் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன, திடக்கழிவுகள் அதிகமாக உருவாகின்றன, கழிவுநீர் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், நகர்மயமாக்கல் பெருகுகிறது ஆனால் உட்கட்டமைப்புகள் அதனை தாக்குப் பிடிக்கும் நிலையில் இல்லை.

எனவே, சமூக நலத் திட்டங்களின் பங்களிப்பும், அரசாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் என்ன செய்தன  என்பதும், அத்தோடு அதிக நுகர்வு ஆகியவை மட்டுமே இதற்கான விளக்கமாக இருக்க முடியுமா…

ஆம். நம்மிடம் ஏற்கனவே அதிக நுகர்வும், உயர்ந்த பாதுகாப்பு கட்டமைப்பும், மாநில அரசின் நலத்திட்டங்களும் உள்ளன. எனவே, பணவீக்க்கம் சிறிய அளவுக்கே அதிகரித்தது, மற்றும் அதனால் ஏற்படும் இடையூறுகளும் மோசமாக இல்லை. எங்களிடம் சிறந்த உள்கட்டமைப்பும், சிறந்த விநியோகச் சங்கிலியும் உள்ளன.

பற்றாகுறை குறைப்பு

மாநிலப் பற்றாக்குறையை சுமார் ரூ.7,000 கோடி குறைத்துள்ளீர்கள். மூலதனப் பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், அவ்வாறு செய்ய முடியுமா?

நிச்சயமாக. உண்மையில், நாங்கள் பற்றாக்குறையை அதை விட கீழே கொண்டு வந்துள்ளோம். இறுதிக் கணக்கு வரும்போது, ஐஏஎஸ் அதிகாரிகள் என்னை விட மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள் என்பதை உணர்வீர்கள். நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கோப்பாக பார்த்துக் கொண்டிருப்பதாலும், நாங்கள் வாராந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதாலும், பற்றாக்குறையை தற்போது மதிப்பிட்டுள்ளதை விட அதிகமாகக் குறைத்துள்ளோம் என்று நான் எப்போதும் கருதுகிறேன். முடிவுகள் இதைவிட கணிசமாக அளவிற்கு  சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சொன்னார்கள்: "நாங்கள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளைச் செய்யும்போது, குறைத்தே மதிப்பிடுவோம்."  இறுதிக் கணக்குகளை வழங்கும் கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து கிடைத்துள்ள சிமிக்னை என்னவென்றால், நான் கணித்தது சரிதான் - நாங்கள்  அறிவித்ததை விட இன்னும் சிறப்பாக முடிக்கப் போகிறோம். இது வருவாய் பற்றாக்குறை மட்டும் தான்.

நிதிப்பற்றாக்குறையில், நாங்கள் சற்று சிறப்பாக நிலையில் உள்ளோம், அதற்குக் காரணம், போதுமான அளவு நிதியினை வேகமாகச் செலவழிக்க முடியவில்லை. ஏனெனில் கோவிட் இரண்டாவது அலையின் விளைவாக மூலதனப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது, பின்னர் மழை பெய்தது.… மூலதனப் பணிகளில் கூட, எங்களுக்கு ஒரு பெரிய தடை இருந்தது. இது பண போதாமை அல்ல, அது செயல்படுத்துவதில் உள்ள போதாமை.

நிதி பற்றாக்குறை 4.6 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது-உண்மையில் இறுதிப் புள்ளி விவரங்கள் வரும்போது அது 3.5 சதவீதத்தை நெருங்கும். மூலதனம் பணிகளுக்கான செலவுகளை GSDPஇல் [மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி] 1 சதவிகிதத்தைக் கூட குறைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்தது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதில் எங்கள் கவனம் இருந்தது, அதில் நாங்கள் நன்றாகவே பணியாற்றியுள்ளோம் - அது புள்ளிவிவரங்களில்  மதிப்பிடபட்டுள்ளதைவிட சிறப்பான பணி  என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் முந்தைய ஆட்சியாளர்கள் பிப்ரவரி[2021]இல் இடைக்கால பட்ஜெட்டை முன்வைத்தபோது அவர்கள்  எதிர்பார்த்ததை விட ரூ.20,000 கோடிக்கு மேல் நாங்கள் செலவழித்தோம்.

.… இருந்தும் பற்றாக்குறை இவ்வளவு குறைக்கப்பட்டது எனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

பிரச்சனையாக உள்ள மத்திய வங்கிகள்

ஒவ்வொரு முறை ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகரிக்கும் போதும், மத்திய வங்கிகளும் அரசாங்கங்கமும் தங்கள் போருக்குப் பிந்தைய அனுபவத்தைக் கருத்தில் கொண்டு களத்தில் இறங்கி நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியை கடுமையாக மேற்கொள்கின்றன.  அவ்வாறு செயல்படக்கூடிய நிறுவன அமைப்புமுறைகள் நம்மிடம் இல்லையா அல்லது அது நிறுவன சுயாட்சி குறித்த பிரச்சனைய ?

மீண்டும் ஒரு சிக்கலான கேள்வி. ஒருபுறம்  நிதிக் கொள்கை உள்ளது மற்றொருபுறம்  பணவியல் கொள்கை உள்ளது அத்தோடு எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத உலகளாவிய மாற்றங்களின் தாக்கம் உள்ளது. பணவீக்கத்தைப் பற்றிய பாரம்பரிய வகையிலான புரிதலின் அடிப்படையில் பார்த்தோமேயானால், பணக் கொள்கையை விட நிதிக் கொள்கையானது பணவீக்கத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவை ஏற்படுத்தும். 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பணவீக்கத்திற்கு பங்களிக்கும் கூறுகளை கட்டுப்படுத்துவது பணவியல் கொள்கையாகும். பணவீக்கம் என்பது ஒரு வேடிக்கையான விஷயம். பணவீக்கம் ஏற்படும்  என்று மக்கள் நம்பினால் , அவர்கள் ஒரு வகையான மீளமுடியா சுழற்சியில் சிக்கிகொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் பணவீக்கத்தைத் தவிர்க்க பொருட்களை வாங்கத் தொடங்குகிறார்கள், அது பணவீக்கத்தை துரிதப்படுத்தும். மனித உளவியல் பணவீக்க சுழற்சியை மிக வேகமாக இயக்க முடியும்.

எனவே, பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்தின் அறிகுறிகளைக் காணத் தொடங்கும் போது அது குறித்த எச்சரிக்கை அடைவதில் தவறு செய்கின்றன, அவை மிகவும் தாமதமாக இல்லாமல் விரைவாக செயல்படுகின்றன. இந்த முறை ரிசர்வ் வங்கி  விதிவிலக்காக இருந்தது. நான் ரிசர்வ் வங்கியை மட்டும் குறை சொல்ல மாட்டேன். [அமெரிக்கா] பெடரல் ரிசர்வ் கூட மிகவும் தாமதமாகவே செயப்பட்டது.

பெடரல் ரிசர்வ் செயல்பாடுகள் பற்றிய எனது அனுபவத்திலிருந்து , அழிவுக்கான விதைகளை முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் (1987-2006) அவர்களே விதைத்தார் என்று நான் கூறுவேன்.... ஜூன் 2003ல் சந்தைகள் வெகுவாக உயர்ந்தன. அப்போது பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்குவார்கள் அல்லது , அதை தட்டையாக வைத்திருப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். பிறகு, க்ரீன்ஸ்பான் வந்து, நாம் எப்போதாவது பணவாட்டத்தைப் பெற்றால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஓர் பைத்தியக்காரத்தனமான கோட்பாட்டைக் கொடுத்தார். நான் ஒப்புக்கொள்கிறேன். பணவாட்டம் பணவீக்கத்தை விட 100 மடங்கு மோசமானது என்பது உண்மைதான். ஜப்பான் அதை அனுபவித்தது. … ஆனால் என் மனதிலும், சந்தையில் பெரும்பான்மையினர் மனதிலும் வட்டி அதிகரிப்பு அல்லது ஸ்திரத்தன்மையை எதிர்பார்த்திருந்ததால்— வட்டி விகிதம் ஏற்கனவே முன்னோடியில்லாத வகையில் மிகக் குறைந்த நிலையில் இருந்தபோது மேலும் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து. நான் பணவாட்டத்திற்கு எதிரான காப்பீடாக இவ்வாறு செய்தேன் என்றார்,  அதுவே பிரச்சனையின் ஆரம்பம். அப்போதுதான் 2008 நிதி நெருக்கடிக்கு வழிவகுத்த குமிழி உருவாகத் தொடங்கியது.

ஆக, என்ன நடந்தது என்றால், மத்திய வங்கிகள் அரசியல்வாதிகளைப் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. அவர்கள் நேசிக்கப்பட விரும்புகிறார்கள். சந்தை வீழ்ச்சியடையும் போது, அவர்கள் தங்கள் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு எடுத்துச் சென்று "நாங்கள் சந்தை சரிவுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம்" என்று கூறுகின்றனர். … ஆனால் அவர்கள் குறைந்த வட்டி விகிதத்தை நீக்கும்  நிமிடம் பணப்புழக்கத்தை அகற்றினால், சந்தைகள் வீழ்ச்சியடையும் போன்ற அறிக்கைகளால் தாக்கப்படுகிறார்கள்.

சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறது அனால் இந்த அதிகப்படியான பணப்புழக்கம் உற்பத்தி, வேலைவாய்ப்பு அல்லது ஊதியங்களுக்குச் செல்லாமல்; மாறாக அவை இது சொத்து வாங்குதலுக்கு செல்கிறது-ரியல் எஸ்டேட், திரவ சொத்துக்கள், பங்குகள், பத்திரங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு கட்டத்தில், நீங்கள் அதிகப்படியான பணப்புழக்கத்தை அகற்ற வேண்டும். தெளிவாகச் சொல்வதென்றால், இன்று இந்த கட்டத்தில், 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், $5 டிரில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகப்படியான பணப்புழக்கம் அமைப்பில் உள்ளது.

இன்னும் இயல்பான உலகிற்கு தரும்பவில்லை

அதாவது இந்த அதிகப்படியான பணப்புழக்கத்தில் 2008 முதல் இப்போது வரை மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு மட்டுமே வெளியாகியுள்ளது. பின்னர் அவர்கள் [Fed] உள்ளே வந்து, சந்தையில் இருந்து வெளியேற்றுவது போல மீண்டும் வெளியிட்டார்கள் . நீங்கள் பெடரல் ரிசர்வ் இருப்புநிலைக் குறிப்பைப் பார்த்தால், சுவிட்சர்லாந்து வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது இங்கிலாந்து வங்கியின் இருப்புநிலைக் குறிப்பைப் பார்த்தால், அவை அனைத்தும் இதுவரை செய்த பணப்புழக்க விநியோகத்தில் 90 அல்லது 95 சதவிகிதத்தமாக இருப்பதைக் காணலாம். அவர்களின் இருப்பு வரலாற்றில். நாம் இன்னும் இயல்பான உலகிற்கு தரும்பவில்லை.

இது எப்போதும் ஒரு பிரச்சனை. நீங்கள் இந்த அசாதாரணமான சூழல் உலகில் மிக நீண்ட காலம் நிலைத்தால், ஒவ்வொரு முறையும் நீங்கள் இயல்பு நிலைக்குச் செல்ல முயற்சிக்கும் போது, சந்தையில் பங்கேற்பாளர்களில் பணக்காரர்கள், பத்திர வியாபாரிகள் போன்றோர் உங்கள் தலையில் மற்றொரு துப்பாக்கியை வைத்து சொல்வார்கள்: “ஓ நீங்கள் சந்தையை நொறுக்கப் போகிறீர்கள்; நீங்கள் மந்தநிலையை உருவாக்கப் போகிறீர்கள்."

என்னுடைய பல வர்த்தக நண்பர்களுடனான உரையாடல் எனக்கு நினைவிருக்கிறது அதில் கூறப்பட்ட கருத்து, “பணக் கொள்கை மரணம் அடைவதை பார்க்கின்றோமா?” அதிக பணவீக்கம் இருக்கும் வரை, இவர்கள் மீண்டும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. நான் அக்கருத்தை இங்கு கொண்டு வருவதற்குக் காரணம், பணக் கொள்கை ஓர் நெம்புகோல் என்றால், உங்களிடம் இருக்கும் மாற்று நெம்புகோல்கள் எவை?

பொருளாதாரம் மீண்டு வரும்போது நிதிக் கொள்கையானது வளர்ச்சியைத் தூண்ட உதவக்கூடும். ஏனெனில் அதன் மூலம் வேலைகளை உருவாக்கலாம், கட்டிடங்கள், அணைகள் போன்றவற்றைக் கட்டலாம். ஆனால் நிதி கொள்கையை  செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு செயல்படுத்தும் திறன் தேவை-அடிப்படையில் நீங்கள் சொல்வதைச் செய்து முடிப்பதற்கான நிர்வாகத் திறன் வேண்டும். நிதிக் கொள்கையால் அதை மட்டுமே செய்ய முடியும், அது வளர்ச்சியை தூண்டக்கூடும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பணக் கொள்கையால் தான் செய்யமுடியும் அது மிகவும் முக்கியமானது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசால் என்ன செய்ய முடியம்? நாங்கள் மக்களுக்கு அவ்வளவு பணம் கொடுப்பதில்லை. உதாரணமாக, விதவைகள் மற்றும் குறிப்பிட்ட ஓய்வூதியதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்குகிறோம். இதை நிறுத்த முடியுமா? எங்களால் முடியாது. அது மிக அபத்தமாக இருக்கும். எனவே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியின் பெரும்பகுதி குறுகிய காலக் கொள்கைகளாக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் நாங்களும் இருக்கிறோம், அவை RBI கொள்கைகளேயாகும். அனால் அவர்கள் அனைவரும் இதில்  பின் தங்கிவிட்டார்கள் என்று நான் கவலைப்படுகிறேன். குறைந்த பட்சம், கடந்த 15 வருட நிகழ்வுகள் பணவியல் கொள்கை இறந்துவிட்டதாக நமக்குக் காட்டியுள்ளது.

எனது பார்வையில் கோவிட் உண்மையில் முக்கிய புள்ளியாக இருந்தது. ஏனெனில், திடீரென்று ஒவ்வொரு அரசாங்கமும் பணத்தை வாரி இறைத்தது போல், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பற்றாக்குறை செலவினங்கள் செய்தன . அதாவது அமெரிக்காவில் உள்ள அனைத்து வகையான சீரற்ற நபர்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் காசோலைகள் அனுப்பப்பட்டன. மறுபுறம், பணவியல் கொள்கை மிகவும் தளர்வானதாக இருந்தது. பணவியல் கொள்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் தளர்வானதாகவும், நிதிக் கொள்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசடியாகவும் இருப்பது மிகவும் அரிது. நெருக்கடியின் பொருளாதார விளைவுகள் பெரிய அளவில் தணிக்கப்பட்டது என்பது நல்ல செய்தி என்று நான் நினைக்கிறேன். மோசமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு இப்போது கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மறுக்கிறீர்கள், நான் நினைக்கிறேன்.… இதை இப்படிச் கேட்கிறேன்: RBI வட்டி விகிதங்களை உயர்த்தியது. மத்திய வங்கி விகிதங்களை உயர்த்தினால் என்ன ஆகும்?

மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை என்றால் நான் அதிர்ச்சியடைவேன். என்னைப்பொறுத்தவரை , மத்திய வங்கி பிந்தங்கிவிட்டர்கள், அது  அவர்களுக்குத் தெரியும். இதில் பல எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது. பாருங்கள், பணவீக்கம் பற்றிய முழு விஷயம் இதுதான். பணவீக்கம் இருக்கும் என்று சந்தை நம்பினால், நீங்கள் ஏற்கனவே  தோற்றுவிட்டீர்கள் என்று பொருள் . பணவியல் கொள்கை போதுமான அளவு வேகமாக செயல்படப் போவதில்லை என்று சந்தை நம்புவதால் , பணவீக்கம் இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள், எனவே அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள்.

எனவே, நீங்கள் சந்தைக்கு சமிக்ஞை செய்ய வேண்டும். கிரீன்ஸ்பான்ஸ் மற்றும் பெர்னாங்கேஸ் [முன்னாள் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் பென் பெர்னான்கே] சந்தைக்கு சமிக்ஞை செய்வது பற்றிப் பேசியதைப் போலவே, "நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம், பொருளாதாரத்தை நாங்கள் ஒருபோதும் சிதைக்க விடமாட்டோம், திவால் நிலையை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை ” என கூறலாம், அது விவேகமானது என்று  அப்போது நாங்கள் நினைக்கவில்லை. தற்போது திரும்பிப் பார்க்கும்போது, அநேகமாக  இல்லை என்பதே விடை.

அதனால் எஞ்சியவர்களுக்கு என்ன நடக்கும்...

மீதமுள்ள வங்கிகளுக்கா? எஞ்சியவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களும்  உயர்த்தியாக  வேண்டும். அவர்களால்  தவிர்க்கமுடியும்  என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்தியாவில் நாம் எப்படி பாதிக்கப்படுவோம்?

அது தான் பிரச்சனையே. அதைக்குறித்தே நான் தொடர்ந்து பேச முயற்சிக்கிறேன். 100 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்தால் பலனடைகிறோம், கருணையுள்ள சமுதாயம் இருக்கிறோம் என்று சொன்னால், இந்த 12 மாதங்களில் சிறப்பான செயல்களைச் செய்துவிட்டோம் என்பதால் இந்த பெருமையில் பெரிய பங்கினை உரிமைக்கோர முடியாது , நாங்கள் கடந்த காலங்களில் சரியாக செயல்பட்ட முன்னோடிகளின் தோளில் ஏறி பயணிக்கிறோம்.

நிச்சயமாக, மத்திய அரசு இதற்கு நேர்மாறான நிலைபாட்டில் உள்ளது. அவர்கள் கடந்த ஐந்து, ஏழு ஆண்டுகளாக தவறான காரியத்தைச் செய்திருக்கிறார்கள், மேலும் பணவீக்கத்தைத் தூண்டும் விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள், வரிச்சுமையை முற்போக்கான வரிவிதிப்பிலிருந்து சுரண்டல் வரிவிதிப்புக்கு மாற்றுகிறார்கள்; நேரடி வரிகளை மறைமுக வரிகளாக, விற்பனை வரியாக, எரிசக்தி வரிகளாக மாற்றியுள்ளார்கள் இப்படி  பலவற்றின் உச்சமாக  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது ஓராண்டுக்கு முன்பாக இருக்கலாம் ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் 18 அல்லது 20 சதவீதம் பெட்ரோலில், டீசல் மற்றும் எரிவாயு மூலமாக வருகிறது.

கொள்கை அளவிலான தோல்வி 

இப்போது நீங்கள் ஒரு பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டீர்கள். அடிப்படைப் பொருட்களின் விலைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது உலகளாவிய காரணிகளால் வடிவமைக்கப்பட்டுவது. உங்கள் நுகர்வு முறையை பொறுத்த வரியில் அதனை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வரிகளைக் குறைத்தால், அது பட்ஜெட் மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் ஒரு பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும், மேலும் நீங்கள் நிறைய ஆஃப் பேலன்ஸ் ஷீட் கடன் வாங்க வேண்டியிருக்கும், இது முதலீட்டு தரத்தை பாதிக்கும்.

நாம் மிகவும், மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம், அது ஒன்றிய அரசே உருவாக்கிக்கொண்டது. எட்டு வருடமாக கடைபிடிக்கப்பட்ட  கொள்கைகள் தன்னாலே தோல்வியடைந்துள்ளது. அதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். நீங்கள் ஐந்து - ஏழு வருடங்கள் தவறான காரியங்களை, தவறான அறிவுரை வழங்கப்பட்ட காரியங்களை செய்துவிட்டு தர்போது அதன் விளைவுகள் தெரியத் தொடங்கியவுடன் ஒரே மந்திரகோளில் அவற்றை சரி செய்துவிடமுடியும் என எதிர்பார்க்கமுடியாது.

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும்போது, கடன் தரத்தை சேதப்படுத்தாத குறுகிய கால தீர்வுகள் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை  என்பது எனது கருத்து. உண்மையில் ஒன்றிய நிதித் துறை இப்போது அவசரவாமாக தானே முன்வந்து மாநிலங்களின் கடன்கள் தொடர்பாக  அதிகம் தலையிடுவதை  நீங்கள் காணலாம். கடன் வாங்கும் வரம்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் தலையிடுகிறார்கள்,. “ஏன் மத்திய அரசு திடீரென்று இதைப் பற்றிக் கவலைப்படுகிறது?” என்ற கேள்வி எழலாம்.

ரேட்டிங் ஏஜென்சிகள் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்தக் கடனையே கணக்கில்கொள்கின்றன என்பதே தர்க்கரீதியான பதிலாக இருக்கும். ஏனெனில் ஒன்றிய அரசு ஏற்கனவே பெரிய அளவுக்கு  கடன் வாங்கி, இந்த வருடத்தில் 7 சதவிகிதம் அளவுக்கு மோசமான பற்றாக்குறையைக் கொண்டிருப்பதன் மூலம் சந்தையில் முதலீடுகளை குறைத்துவிட்டது. இதன் காரணமாக மாநிலங்கள் வேறு வழியில் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பொதுவாக, எந்த மாநிலமும் கடன் அளவை குறைப்பதில்லை.. பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தின் அளவு காரணமாக முழுமையான எண்கள் உயரும்.  எனவே இப்போது ஒன்றிய அரசு மாநிலங்கள்  கடன் பெறுவதை குறைக்க  குறைக்க கட்டாயப்படுத்துகிறது.

என்னால் இந்த  தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் திடீரென்று விவேகமுள்ளவர்களாக மாற முடியாது. நடைமுறைக் கருத்தில் மற்ற அணைத்து தளங்களிலும் அவர்கள் கடைபிடிப்பது போலவே "எனக்கு ஒரு விதி, உங்களுக்கு மற்றொரு விதி" என்பதே இங்கும் செய்கிறார்கள். அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாள், துப்பாக்கியை வேறொருவரின் தலையில் வைத்து, தங்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்கிறார்கள்.

நான் இந்தியாவையும் இலங்கையையும் ஒப்பிடவில்லை. ஆனால் நாட்டை  இயங்கியவர்களான அஜித் கப்ரால்- மத்திய வங்கி ஆளுநர் அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்றவர்களைப் பார்க்கும்போது, இந்தியாவிலும்  இன்று நாட்டை இயக்குபவர்களின் மீதான நம்பிக்கை பிரச்சினைக்குள்ளாகி உள்ளதா?

ராஜபக்ச பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அவர்கள் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே அவர்கள் தங்களுக்குத் தகுதியான ஆட்சியைப் பெற்றுள்ளார்கள். இங்கேயும் அப்படித்தான். டெல்லி அரசாங்கத்தின் தன்மை பற்றி நான் என்ன சொன்னாலும், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று வாதிட முடியாது. அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து எல்லாவற்றையும் வெள்ளையடிக்கிறார்கள், சாமர்த்தியசாலிகள், பிரச்சாரகர்கள் என்று சொல்லலாம் ஆனால் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

நான் சற்று வேறு வழியில் செல்கிறேன்.… அவர்கள் திறமையான செய்தி தொடர்பாளர்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் அரசியல்லில் மேதமை பெற்றுள்ளனர். ஆனால் தேர்தல் வெற்றியின் அடிப்படையில்  மட்டுமே மேதை நிலைக்கு  அருகில் உள்ளனர். ஆனால் உண்மையான நிர்வாகத் திறன்  அடிப்படையில் மிக மிக பலவீனமானவர்கள். ஒருவேளை குஜராத் மாடல் வேலை அங்கு செய்திருக்கலாம், ஆனால் இந்தியா முழுமைக்கும் அந்த மாதிரியை செயல்படுத்த முடியாது. நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியதால் இரண்டு அல்லது மூன்று பேருக்கான  வல்லாதிக்க முதலாளித்துவ மாதிரியை செயல்படுத்த முடியாது.

எனவே, இப்போது எனது பெரிய கவலை என்னவென்றால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளிதான். ஒவ்வொரு முறையும் இடைவெளி அதிகரிக்க  தொடங்கும் போது, எப்போதாவது ஒரு தீர்வு ஏற்பட்டுவிடாத என்று நாம் கொள்வோம் .… ஆனால் இன்று அரசியல் மேதைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் கைகளில் அதிகாரத்தைத் திரட்டி வருவதை நாம் காண்கிறோம். அணைத்து சுயாதீன நிறுவனங்களும் அவர்கள் கட்டுபாட்டில் சென்றுவிட்டது, எனவே இப்போது  கேள்விக்குட்படுத்தப்படாத மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத அதிகாரம் அவர்களிடம் உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் கூறுய ஆரோக்கியமானது என குறிப்பிட்ட அளவை இவர்களின் அதிகார குவிப்பு கடந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், அதுவும் மிகக் குறைவான செயல் திறன்களுடன். மீண்டும்,  ஒரு இடைவெளியைக் புலப்பட  தொடங்கியுள்ளது, ஒருபுறம் அமைப்பின் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருவதும் மறுபுறம் விளைவுகளும் மக்களின் வாழ்க்கைத் தரமும்  குறைந்து கொண்டே செல்வதையும் பார்க்க முடிகிறது. இத்தகைய போக்கு மோசமான முடிவையே பெரும்.

பிரச்சனையின் ஒரு பகுதி என்னவென்றால், நீங்கள் அந்த அளவிலான வலிமையை பெற்றபிறகு , உணமையான பின்னூட்டங்களை பெற மாட்டீர்கள். உங்களுக்குத்  அனைத்தும் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் யாரும் உங்களுக்கு கெட்ட செய்திகளை கொண்டுவர விரும்பவில்லை.

உங்கள் குணத்தில் உள்ள பலவீனத்தை மற்றவர்கள் உணர்ந்தவுடன், நீங்கள் கேட்க விரும்புவதை மட்டுமே அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். நீங்கள் உண்மையைக் கேட்கப் போவதில்லை. உங்கள் அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், அப்படி இல்லை.

Media: The Hindu