ஒன்றிய அரசின் நிதிக் கொள்கையே பணவீக்கத்தை அதிகரித்தது

Published Date: May 13, 2022

CATEGORY: ECONOMY

வாகன எரிபொருள் மீதான வரியினை உயர்த்தியது  உட்பட ஒன்றிய அரசின் “மோசமான நிதிக் கொள்கைகள்” மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தாமதமான பணவியல் கொள்கை நடவடிக்கை ஆகியவையே பணவீக்கத்தை அதிகரித்துள்ளன, இதன் விளைவாக  மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் எரிபொருள் வரியை குறைப்பது அண்டை மாநிலங்களுக்கு இடையே சமநிலையின்மையை உருவாக்கி, வரி வருவாயை பாதிக்கும் என்று தெரிவித்த திரு. தியாகராஜன் மாநில வருவாயை  மேம்படுத்தும்  முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை ஜூன் 2022 க்குப் பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென  தமிழ்நாடு விரும்புகிறது என்கிறார்.

 

பேட்டியின் திருத்தப்பட்ட பகுதிகள்:

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும்?

பணவீக்கம் என்பது  பெரும்பாலும் பணவியல் கொள்கை மூலமாகவும், ஓரளவிற்கு  நிதிக் கொள்கை மூலமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. நிதிக் கொள்கை மட்டத்தில், நீங்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை மட்டுமே மேற்கொள்ளமுடியும், உடனடி விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை மேற்கொள்வது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே, ஆனால் பணப்புழக்க விகிதங்கள் அல்லது ரொக்க விநியோகம் என எதுவாக இருந்தாலும், பணவியல் கொள்கை அடிப்படையிலேயே  உடனடி விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். நீங்கள் நீண்ட கால அடிப்படையில்  ஏதாவது தவறு செய்தால், அதன் விளைவுகளிலிருந்து நீங்கள் ஓரளவிற்கு  தப்பிக்கலாம், ஏனெனில் சந்தை மற்றும் (பொருளாதார) சுழற்சிகள் சில காலம்  உங்களுக்கு சாதகமான பாதையில் செல்லக்கூடும், ஆனாலும் இறுதியில் நீங்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

இப்போது நாம் பார்ப்பது, பல ஆண்டுகளாக மத்திய அரசின் கடைபிடித்துவரும் மோசமான நிதிக் கொள்கையாலும், பணவியல் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் மிக தமாதமான செல்பாடுகளாலும் மேலும் மோசமடைந்த நிலைமையேயாகும. இந்நிலைக்கு விநியோகச் சங்கிலியில் இடையூறு, நிச்சயமற்ற தன்மை மற்றும் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து  சீரற்ற மீட்சி உள்ளிட்ட நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட புறக்காரணிகள் பல  இருந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகாலமாக  இந்திய அரசு கடைப்பிடித்த  மோசமான கொள்கைகள் மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றையும் முக்கிய காரணங்களாக நான் குறிப்பிட்டாக வேண்டும் . நாம் இப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் தாமதமானது என்பது என் கருத்து.  சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கத்தின் அறிகுறிகளை முதன்முதலில் தெரியவந்த போதே எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்க வேண்டும்.

 

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?

எங்களால் முடிந்ததைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே அரசின் கருத்து. இருப்பினும், தனிப்பட்ட முறையில், மாநில அரசிடம் இவ்வாறு ஒன்றிய அரசு  வலியுறுத்துவது கொடூரமானது மற்றும் ஒன்றிய - மாநில உறவில் ஒரு உணர்ச்சிகரமான அச்சுறுத்தலுக்கு சமமானது எனக் கருதுகிறேன். பெட்ரோல் மீதான வரியை ஐந்து முதல் ஆறு மடங்கும், டீசல் மீதான வரியை 10 மடங்கும் உயர்த்தியது ஒன்றிய அரசு .  2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது  தற்போது பெட்ரோல் விலை 200%, டீசல் விலை 500% உயர்ந்துவிட்ட நிலையல் அவர்களில் செயல்களின் விளைவுகளை எதிர்த்துப் போராட ஆரம்பித்தவுடன், வரியை சிறிது  குறைத்து அதேபோல அனைத்து மாநிலங்களும் வரியைக் குறைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இது கேலிக்குரியது என்று நான் நினைக்கிறேன். அனைத்து வரி உயர்வுகளையும் ஒன்றிய அரசு செய்துவிட்டு, தற்போது அனைத்து வரி  குறைப்புகளையும் மாநில அரசுகளை அது செய்யச் சொல்கிறது. 90% அதிகாரம் ஒன்றிய அரசிடமும் 10% அதிகாரம் மட்டும் மாநிலங்களிடம் இருப்பது ஜனநாயகத்தையும்,  தர்க்கத்தையும் கேலிக்கூத்தாக்குகிறது. கடைசியாக, தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மாநிலமும் வரியைக் குறைக்காவிட்டால் விலை வேறுபாடு வர்த்தகத்திற்கு அது வழிவகுக்கும்.

 

ஜிஎஸ்டி வசூல் அளவு புதிய சாதனையை படைத்துள்ள நிலையில் , இழப்பீட்டுத் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க தமிழ்நாடு இன்னும் அழுத்தம் கொடுக்குமா?

நீங்கள் ஜிஎஸ்டி புள்ளிவிவரங்களின் பருவகாலத்தை எடுத்துக் கொண்டால், ஜிஎஸ்டி வசூல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய சாதனையைப் படைக்க வேண்டும். பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்தால், உங்கள் GST வருவாய் குறைந்தது 8% அல்லது அதற்கும் அதிகமாக வளர வேண்டும். எனவே ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய சாதனை படைக்க வேண்டும். பெருந்தொற்று ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளை ஈடுகட்ட மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். இழப்பீட்டுத் தொகையை நீட்டிப்பது  மாநிலங்கள் தங்கள் தேவைக்கு மீறி பலன்பெறுகிற நிலையை உருவாக்கும் என்று ஒன்றிய அரசு  கூறுகிறது. மாநிலங்கள் தங்கள் வரி ஈட்டலை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை இது பறிக்கிறது என்பது என் வாதம். ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஆதரவாக மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிட்டது என்பதே எங்கள் கருத்து. எங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஒன்றியத்தின் கடமையாகும், ஏனெனில் அவர்கள் வரிவருவாயை அதிகரிக்கும் எங்களது கடைமையை மேற்கொள்வதற்கான போதுமான சாதனங்களையும், சுதந்திரத்தையும்  அளிக்கவில்லை.

 

தவறான நிதிக் கொள்கை என்றால் என்ன?

ஒன்று, வரிவிதிப்பை பொறுத்தவரையில் , பெட்ரோல் மற்றும் டீசல் வரிவிதிப்பு என்பது முற்போக்கான நேரடி வரிகளில் இருந்து விலகிச் செல்லும் ஓர் பரந்த நகர்வின் குறியீடு என்றே கருதுகிறேன் . இத்தகைய வரிகள் எப்போதும் ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்ககளை பெரிதும் பாதிக்கின்றன, அதேசமயம் இதற்கு மாறாக நேரடி வரிவிதிப்பு அடிப்படையிலேயே முற்போக்கானது.  இரண்டாவதாக, ஒன்றிய அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் காட்டும் வேகம் அதனை செயல்படுத்துவதில் முற்றிலும் இல்லை. அதில் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளும் அடங்கும் . அவர்களின் அணுகுமுறை முழுவதுமே குழப்பமானதாக உள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்பீடுகளுக்கே வழிவகுத்தது, இதனால் நல்ல விளைவுகளை உருவாக்குவதன் அடையாளமான சிறந்து செயல்படுத்தும் திறன் உருவாகவில்லை.

Media: Live Mint