மாநிலங்களை நகராட்சிகளாக ஒன்றிய அரசு திறம்பட மாற்றியுள்ளது: தமிழக நிதியமைச்சர்

Published Date: May 13, 2022

CATEGORY: POLITICS

கடந்த இரண்டு வாரங்களாக, எரிபொருள் விலை உயர்வு, மின்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எரிபொருளின் மீதான VAT அல்லது மதிப்புக்கூட்டு வரிகளை குறைக்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆனால் இது ஒரு "நியாயமற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான யோசனை" என  தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சுனேத்ரா சௌத்ரி மற்றும் ரோஷன் கிஷோர் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் கூறினார். PTR என பொதுவாக அறியப்படும் அவர்,  மத்திய-மாநில உறவுகளில் மற்றொரு முறிவு ஏற்படக்கூடிய வகையில் GST அமைப்பு எவ்வாறு தோல்வியடைகிறது என்பதையும்  பற்றியும் விளக்கினார். பேட்டியின் திருத்தப்பட்ட பகுதிகள்:

 

எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக, மாநிலங்கள் தங்கள் VAT வரியை குறைக்க வேண்டும் என்று ஒருபுறம் ஒன்றிய அரசு கூறுகிறது, மற்றொருபுறம் 2014 க்கு முந்திய வரிவிதிப்பை முறைக்கு திரும்ப வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள், இதற்கு தீர்வு என்ன?

ஒன்றிய ஆட்சியாளர்கள் குழப்புவதிலும், உண்மையை மறைப்பதிலும் வல்லுநர்கள். அவர்கள் கூறும் தர்க்கம் பைத்தியக்காரத்தனமானது. ஒன்றிய அரசு 2013 முதல் 2022 வரை பெட்ரோல் மீதான வரியை மூன்று மடங்கும், டீசல் மீதான வரியை பத்து மடங்கும் உயர்த்தியது. இதுகுறித்து மாநிலங்களை அழைத்து ஆலோசனை செய்தார்களா? அவர்கள் ஒத்திசைவை எதிர்பார்த்தார்களா? மாறாக தங்கள்  தேர்ந்தெடுக்கும் எதையும் செய்ய தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், அதையே செய்தார்கள். எங்களுக்கு முந்தைய அதிமுக (2014-2021) அரசு இதே காலகட்டத்தில் 20-30% மட்டுமே விலையை உயர்த்தியது. எனவே, இப்போது திடீரென ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு, `நீங்கள் வரிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வது ஒழுக்கக்கேடானது, நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. என்ன செய்ய வேண்டும் என மற்றவர்களுக்கு ஆணையிடும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் கூட்டாட்சி அடிபடியில் ஒன்றிய அரசாங்கத்தை நடத்த மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனரே தவிர அரசாங்கத்தை நடத்த தேர்ந்தெடுக்கப்படவில்லை அல்லவா? தமிழ்நாடு  என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? இது எனக்குள்ள ஆழமான கேள்வியாகும்.

 

எரிபொருள் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையில் உங்கள் கருத்து என்ன?

கட்டமைப்பு ரீதியாக, இது மிகவும் தெளிவாக புரிகிறது. மாநிலங்களில் இருந்து வரிவிதிப்புக்கான அனைத்து வழிமுறைகளையும்  நீக்கி, அவற்றை ஜிஎஸ்டி தொகுப்பின் கீழ் கொண்டுவந்தால், மாநிலங்கள் தங்கள் வருவாய்க் கொள்கையை தீர்மானிக்க இடம் உள்ளதா? மாநிலங்களை நகராட்சிகளாக மாற்றியுள்ளனர். மாண்புமிகு பிரதமர் முன்னர் குஜராத்தின் மாண்புமிகு முதலமைச்சராக இருந்தபோது எடுத்த நிலைபாட்டுடன் ஒப்பிட்டால், மாநில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இன்று நான் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் மிக மென்மையான நிலைப்பாடாகத்தான் இருக்கும். நாற்காலி மாறும்போது கொள்கையையும் மாற்றிக் கொள்வது அவரது வழக்கமாக இருக்கலாம் ஆனால் அப்போது அவர் பேசிய பதிவுகள் உள்ளது. அனைத்து நேரடி வரிவிதிப்புகளும் ஒன்றியத்திடம் இருந்து, மறைமுக வரிவிதிப்பு மட்டுமே மாநிலங்களுக்கு எஞ்சி இருந்த நிலையில்  - இப்போது நீங்கள் மாநிலங்களிலிருந்து மறைமுக வரிவிதிப்பு உரிமைகளில் பெரும்பகுதியையும் ஒற்றைதன்மைப்படுதுவாதாக பறித்துக்கொண்டால், அதன் பின்னர் மாநிலங்களுக்கு வருவாய் நிர்வாகத்தில் எந்த உரிமையும் அளிக்காத உலகின் ஒரே பெரிய நாடு இதுதான் என்ற நிலை ஏற்படும். அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரம் மாநிலங்களுக்கு ஏன் இருக்கக்கூடாது?

 

இந்த ஒன்றிய அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, ஏழைகளுக்கு எதிரான அரசாக உள்ளது. மொத்த அரசு வரி வருவாயில் நேரடி வரிவிதிப்பு வருவாயின் பங்கு 7-8% குறைந்துள்ளது. நேரடி வரி  ஒரு முற்போக்கான வரியாகும் ஏனெனில் நீங்கள் வரியினை உயர்த்தினால், நீங்கள் யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மறைமுக வரிவிதிப்பு சுரண்டல் தன்மைகொண்டது, ஏனெனில் நீங்கள் யாரிடம் இருந்து வரி பெறுகிறீர்கள், யார் எவ்வளவு பெட்ரோலை வாங்குகிறார்கள் என்பது தெரியாது. எனவே, இதன்மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்து, பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு சலுகை அளிக்கும் ஒன்றிய நிர்வாகத்தின் தத்துவத்தை அவர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை; நாங்கள் ஒரு முற்போக்கான அரசாங்கமாக இருக்க விரும்புகிறோம், மேலும் பணம் படைத்தவர்களுகளுக்கு கூடுதல் வரி விதிக்க விரும்புகிறோம், ஆனால் அதற்கான கருவிகள் எங்களிடம் இல்லை. ஜிஎஸ்டி உண்மையில் கூட்டாட்சி தன்மைகொண்டது றன அவர்கள் குழப்புவார்கள், ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது? 10 அல்லது 11 மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்தும் ஒரு முடிவை ஒப்புக்கொண்டாலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றில் இதுவரை அது வாக்களிப்புக்கு வந்ததில்லை, ஏனெனில் வாக்கெடுப்புக்கு வருவதற்கு மத்திய அரசு அனுமதிக்காது. ஒன்றிய  அரசாங்கம் அவர்கள் விரும்பும் எதையும் நிறுத்திவைக்க முடியும், அதே சமயம் அவர்களும் , 10 - 11 மாநிலங்கள் மட்டும் விரும்பினால் எதையும் நிறைவேற்றலாம் ஏன்டா வகையில் வடிவமைப்பு உள்ளது. இந்த 10 -11 மாநிலங்கள் எவை? அவை தமது பட்ஜெட்டில் 90% மானியங்கள் மூலமாக பெறுகிற சிறிய வடகிழக்கு மாநிலங்களாகும்.  அவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? எனவே  மாநில உரிமைகள் இவ்வாறு பறிக்கப்பட வேண்டும் என்பது நமது நாட்டை வடிவமைத்த சிற்பிகளால் கற்பனை செய்த ஜனநாயக கருத்தாக்கத்தில் இல்லை. அனைத்து வரிவிதிப்பு அதிகாரங்களையும் வைத்துகொண்டு அனைத்து முடிவுகளையும்  நீங்களே எடுப்பீர்கள், அதையும் பிற்போக்கான வழியில் செய்வீர்கள் எனில், நாங்கள் ஏன் அதை ஒப்புக்கொள்ளவேண்டும்? அனைத்து செஸ்களும் நீக்கப்பட்டால், பெட்ரோல்/டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். செஸ் வரி மூலமாக லிட்டருக்கு 20 ரூபாயும், கலால் வரியில் 1 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவும் எடுக்கின்றனர். பிறகு, `ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவோம்’ என்கிறார்கள், அவர்கள் 1 ரூபாய் இழக்கிறார்கள் எனில், நாங்கள் வரிவிதிப்பில் 100% இழக்கிறோம், இது எப்படி நியாயமாகும்?

 

நிதி கூட்டாட்சி முறைக்கு ஜிஎஸ்டி பாதகமானதாக அமைந்துவிட்டதா? தற்போது ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலம் முடிவடையும் நிலையில், தமிழக நிதியமைச்சராக உள்ள நீங்கள் இழப்பீடு கால நீட்டிப்புக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

ஜிஎஸ்டி மிகவும் மோசமானது,ஆனால் கருத்தளவில் இல்லை. ஜிஎஸ்டியின் வடிவமைப்பிலும், செயல்படுத்துவதிலும் நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். எல்லாத் தளங்களிலும் தோல்வியே நிலவுகிறது-- கடந்த எட்டு ஆண்டுகளாக தனிநபர் வருமானம், வேலை இழப்புகள், ஜிடிபி வளர்ச்சி என் அரசாங்கத்தின் பொருளாதார புள்ளிவிவரங்கள் அனைத்தும் தோல்வியையே வெளிப்படுத்துகின்றன - எனில் தீர்வுக்கான உத்தி என்ன? அது  எண்களைப் பற்றிப் பேசாதபடி, அனைவரையும் அமைதியின்றி வைத்து புதிய குழப்பங்களை உண்டாக்கி வாய்ச்சண்டை வளர்ப்பதாகவே உள்ளது. தற்போது, ​​செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளது, இதை ஜிஎஸ்டி கவுன்சிலில் பலமுறை கொண்டு வந்துள்ளேன். கேமிங் தொடர்பான அமைச்சர்களின் குழு ஆறு மாதங்களில் ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கடந்த மே மாதம் உருவாக்கப்பட்டது, மேலும். அதில்  இருந்த குஜராத்  மாநில அமைச்சர் ஒருவர் அம்மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் தனது பதவியை இழந்ததால், டிசம்பர் வரை (ஆறு மாதங்களுக்குப் பிறகு) அதை மறுசீரமைக்க யாரும் கவலைப்படாத நிலையில் அந்த அமைச்சர்களின் குழு(GOM) செயலிழந்தது. பிப்ரவரியில்  சீரமைப்பு முடிந்தது, ஏப்ரல் மாதத்தில்தான் முதல் முறையாகச் சந்தித்தது, இப்போது அவர்கள் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அவசரப்படுத்த விரும்புகிறார்கள். எனவே நான் சொல்கிறேன், நீங்கள் எதுவும் செய்யவில்லை, பூஜ்யம் தான். வரி விகித சீரமைப்பு குழுவிற்கும் இதே நிலைதான் ஒரே ஒரு முறையே இதுவரை கூடியுள்ளது... சீர்திருத்தங்களுக்கான நிலைக்குழுவும் இதே நிலையில் உள்ளது. எனவே இந்த அமைப்பு இப்படியே போனால் தோல்வியை சந்திக்க நேரிடும்.

 

திராவிடக் கட்சிகள் மக்கள் நல அரசியலில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள்.ஆனால் சமீபத்திய தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக இந்துத்துவாவுடன் மக்கள் நல அரசியலையும் வெற்றிகரமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளதே?

இந்தி மொழி பேசப்படும் பகுதிகளில் பிஜேபி அரசுகள் எப்படி மீண்டும் தேர்ந்தெடுக்கபடுவதை பார்ப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. கல்வியின்மையா?, வாய்ப்பின்மையா?, நம்பிக்கையின்மையா? என்று என்னில் ஒரு பகுதி வியப்படைகிறது. இங்கு வேறுபாடு என்னவென்றால், தென் மாநிலங்களில் வளர்ச்சி குறித்தும் அதில்  மக்களின் பங்குகள் அதிகரிப்பது குறித்தும் நாம் பேசுகிறோம், ஆனால் வடநாட்டில், வளர்ச்சி ஏற்படாது என கருதப்படுகிறது, யாருக்கு என்ன கிடைக்கும் என்கிற சண்டை ஏற்படுகிறது, அதனால்தான் சமூகத்தை பிளவுபடுத்துவது, மதவாதம், வெறுப்புப் பிரச்சாரம் அங்கு முக்கிய வகிக்கிறதோ?. மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், அம் மாநில மக்கள், இவர்களின் ஆட்சியைவிட எதிர்க்கட்சிகள் மோசமாக இருக்கும் என்று உணர்கிறார்கள் அல்லது நம்புகிறார்கள், எனவே அவர்களுக்கு உள்ள இரண்டு மோசமான தேர்வுகளில், தீமை குறைவானது என கருதுவதை தேர்வு செய்கிறார்கள். என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது. வேறு வழியில் சொல்லவேண்டுமென்றால், மக்கள் நல திட்டங்களுக்கான முதன்மைக் காரணம், அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. இரக்கமும் நல்லாட்சியும் கொண்ட அரசாக இருப்பதன் விளைவே மக்கள்நல திட்டங்கள். நீங்கள் அதை இலவசம் என்று அழைக்கலாம், நான் வளத்தை சமன்படுத்துதல் அல்லது சமூகத்தை முன்னோக்கி நகர்த்துதல் என்று அழைக்கிறேன். விழுமியங்கள் மிக முக்கியமானவை, யாரும் பார்க்காத போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்களது குணம், என்பது போல தேர்தல் வராதபோது ஒரு அரசு என்ன செய்கிறது என்பதுதான் அதன் உண்மையான முகம் என நான் கருதுகிறேன்.

 

2024ல் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

அரசியலில் ஒரு வாரம்தான் வாழ்நாள். சில வாரங்களுக்கு முன்பு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி இரண்டு வருதங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள தேர்தல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பது பாஜக கட்டமைக்க விரும்பும் கதையாடல். எனது நண்பர் பிரசாந்த் கிஷோர் மிக உறுதியாக கூறுவார், ஒரு தேர்தல் என்பது அந்தத் தேர்தலைப் பற்றியது மட்டுமே, வேறு எந்தத் தேர்தலையும் பற்றியது அல்ல. ஒவ்வொரு தேர்தலும் புதிதாகத்தான் தொடங்குகின்றன. சந்தைகளில் இருந்து நான் எடுத்துக்காட்டும் அடுத்த புள்ளி என்னவென்றால், அவை எவ்வளவு காலம் பின்தங்கியதாக இருக்குமோ, அந்த அளவுக்கு கடுமையாகத் திருத்தப்படுகின்றன, மேலும் கணிக்க முடியாத மற்றும் உடனடி திருத்தமாக அது அமையும். எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நடந்த இந்தத் தேர்தல்கள் 2024 க்கு முன்னோடியாக இருக்கும் என்ற கருத்து ஒரு தவறான கருத்து.

 

Media: Hindustan Times