Published Date: June 23, 2021
சென்னை: ஒன்றிய அரசு மாநில அரசுகளின் பின்னூட்டங்ககளுக்கும் கருத்துக்களுக்கும் செவி சாய்ப்பதில்லை என்றும் மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
திவ்யா சந்திரபாபு அவர்களுடன் பேசுகையில்,பொருளாதாரத்தை மேம்படுத்த நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரை கொண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள கனவு கூட்டணியை பற்றி பேசினார் .
இந்த குழு எப்படி உருவானது?
முதலமைச்சர் அவர்கள் உலகின் தலைசிறந்த நிபுணர்களை கொண்டு இந்த குழுவை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.வளர்ச்சி என்பதை தாண்டி திராவிட கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஒரு குழு உருவாக்க பட வேண்டும் என்று விரும்பினோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே எங்கள் முதன்மை குறிக்கோளாகும். அதற்கேற்ப எங்களுக்கு அறிவுரை வழங்க தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தோம். டாக்டர் சுப்ரமணியம் , டாக்டர் ராஜன் ஆகிய இருவருமே தமிழர்கள். இதுவே ஒரு இயற்கையான ஈடுபாடு உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. பேராசிரியர் டப்லோ அவர்கள் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பிருந்தே J-PAL(அப்துல் லத்தீப் வறுமை நடவடிக்கை ஆய்வகம்) மூலம் தமிழ் நாட்டில் பணி செய்து கொண்டிருந்தார்.
திரு நாராயணன் அவர்கள் பல வருடங்களாக தமிழ்நாடு அலுவலராக இருந்துள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக டெல்லியில் பணிபுரிந்து, முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஜீன் ட்ரீஸ் அவர்கள் மிக முக்கியமானவர் ஏனென்றால் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MNREGA) சார்ந்த பணிகளை மேற்கொண்டுள்ளார்.பேராசியர் டப்லோ அவர்களும், பேராசிரியர் ட்ரீஸ் அவர்களும் எல்லா வகையிலும் தமிழகத்தின் பொருளாதார நிலையை முன்னேற்ற தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். அதனால் இயல்பான முறையில் சிறந்த விளைவுகளை கொடுக்கும் வகையில் இந்த குழுவை உருவாக்கியுள்ளோம்.மிகவும் உறுதியுடன் பணியாற்றும் திறமை வாய்ந்த உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த குழு எங்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக தொடர்ந்து இருக்கும்.
இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் இரண்டு உறுப்பினர்கள் திரு ரகுராம் ராஜன் மற்றும் திரு சுப்ரமணியன் ஆகியோர் மத்திய அரசுடன் பணியாற்றியிருக்கிறார்கள். தமிழ்நாடு சார்ந்த பணிகளில் இப்போது அவர்கள் ஈடுபடுவது மாநிலத்திற்கு நன்மை விளைவிக்குமா ?
இவர்கள் அனைவருமே நாட்டின் மீது அக்கறை உடையவர்கள். அந்த பதவிகளிலிருந்து விலகியதற்கு காரணங்கள் ஒப்பந்தம் முடிவந்ததாலோ அல்லது கருத்து வேறுபாடுகளாலோ இருக்கலாம். அவர்களில் ஒருவரை அழைக்கும் போது குழுவில் இருக்கும் மற்றோருவருடன் அதை பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. எங்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. ராஜன் அவர்கள் மற்ற பெயர்களை இறுதியாக பார்த்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பன்முகத்தன்மை செறிவூட்டலுக்கு வழிவகுக்கும் என்பதை இது காட்டுகிறது.
மத்திய அரசின் நிதி கொள்கைகள் ஆர்.எஸ்.எஸ். அடிப்படைவாதத்தை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
எந்த கொள்கையோ,கோட்பாடோ,அணுகுமுறையோ பின்பற்றினாலும் இறுதியில் அதனால் விளையும் பலனே சரி எது தவறு எது என்பதை தீர்மானிக்கும். நாங்கள் கூறும் யோசனைகளை ஒன்றிய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. தேவையான அறிவுரைகளை தேவையான நேரத்தில் எங்களுக்கும் வழங்குவதில்லை. இப்போதிருக்கும் சூழலில் மூலதன முதலீடு அல்லது உள் மாநில தேவை போன்றவற்றை மட்டும் கொண்டு 100% தன்னிறைவாக செயல்பட்டு வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு அல்லது சமுதாய மேம்பாடு போன்றவற்றை அடைய முடியாது.அவர்கள் இப்போது செய்துகொண்டிருப்பது சரியல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முன்னரே நங்கள் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தோம்.
இந்நிலையில் GST மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் என்ன அறிவுரையை வழங்க விரும்புகிறீர்கள் ?
இந்த பொறுப்பிற்கு நான் வந்து வெறும் 6 வாரங்களே ஆகின்றன. நிச்சயம் அறிவுரை வழங்கும் அளவு எனக்கு அனுபவம் இல்லை. என்னுடைய முதல் GST குழு கூட்டத்தில் 12 பக்கங்கள் கொண்ட அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் நிறைந்த ஒரு ஆவணத்தை சமர்பித்தேன்.GST யின் வடிவமைப்பிலும் , செயல்படுத்ததிலிலும் நிறைய மாற்றங்கள் தேவை. ஒன்றிய அரசு-மாநில அரசுகளுடனான உறவில் தொடர் கருத்து வேறுபாடுகளால் விரிசல்கள் விழுகின்றன. மாநில அரசுகளுடனான உறவை ஒன்றிய அரசு பலப்படுத்தவேண்டும் ஏனெனில் ஒன்றிய அரசிடம்தான் அதிகாரமும், நிதியும்,வளங்களும் இருக்கின்றன. இப்போதிருக்கும் உறவை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
மத்திய அரசு தடுப்பூசி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒன்றிய அரசு இன்னும் நிறைய தடுப்பூசிகளை அங்கீகரிப்பதிலும், நாங்கள் வலியுறுத்திவரும் ஏகபோக கொள்முதல் செய்வதிலும் தன் கொள்கைகளை மாற்றியமைக்கலாம். தடடுப்பூசி உற்பத்தியாளர்கள் சிலர் மட்டும் இருக்கும் ஒலிகோபோலி (Oligopoly) சந்தை இருக்கும்போது, ஏன் அதை பலர் வெவ்வேறு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்? இது சாத்தியமற்றது. அவர்கள் இதை முறைப்படுத்தி செய்தால் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு விநியோகம் செய்ய முடியும். தமிழ்நாடு கேட்ட அளவு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்திருந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நிறைவு பெற்றிருக்கும்.
அனால் தடுப்பூசிகளுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவுகிறதே ?
மீண்டும் சொல்கிறேன். நான் இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை.ஆனால் நிச்சயமாக சில விஷயங்களை தெளிவாக நினைத்து பார்க்க வேண்டும்.நாம் எவ்வாறு இந்த நிலைமைக்கு வந்தோம்? அறிவியல் படி யோசித்தால் 100% தடுப்பூசி செலுத்துதலே நாம் பழைய நிலைமைக்கு செல்ல ஒரே வழியாகும். பொருளாதார மறுமலர்ச்சிக்கும் இது ஒன்றுதான் வழி.
எரிபொருள் விலையேற்றத்தை எவ்வாறு குறைப்பது ?
பேரின பொருளியல் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எது முக்கியம் என்பதை நாங்கள் முன்னிலை படுத்தியுள்ளோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் 3 காரணங்களுக்காக எங்களால் மாநில வரியை குறைக்க இயலாது. ஒன்றிய அரசு எரிபொருள் மீதான வரியை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு, எங்களுக்கு திருப்பி தரவேண்டிய எரிபொருள் வரியை குறைத்துக்கொண்டு இருந்தால் அதை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. இதற்காக மாநில வரியை குறைக்கவும் இயலாது.ஆட்சிக்கு வந்த அதே நாள் எரிபொருள் விலையை குறைப்போம் என்று நாங்கள் கூறவில்லை. தேய்வுவிகித வரியை குறைத்தால் அதனால் மக்களுக்கு நன்மை என்பது எங்களுக்கு தெரியும். இது உள்ளீட்டு செலவு என்பதால் பணவீக்கத்தை உண்டாகும் என்பது எங்களுக்கு தெரியும். மூன்றாவது, இப்போது எங்களிடம் இருக்கும் நிதி சூழல். 10 வருடம் நடந்த தவறுகளையும் 7 வருட வீழ்ச்சியையும் ஒரே நாளில் சரி செய்து விடமுடியாது. கொரோனா 2வது அலையின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் மதிப்பீடு படி தமிழ்நாட்டின் இந்த மோசமான நிதி நிலைமைக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
இதன் அடிப்படை காரணம் எப்படியோ நமது மாநிலம் GSDP விகிதத்தில் தனது வருமானத்தை இழக்க தொடங்கியதுதான். வருமானத்தை GSDP விகிதத்தில் கணக்கஒப்பீட்டளவில் பக்கச்சார்பற்ற, பாரபட்சம் அற்ற சுட்டிக்காட்டுதல் சாத்தியமாகும். 2003-2014ல் GSDP விகிதத்தில் 10-11.5% இருந்த மாநிலத்தில் வருமானம் பின் மெதுவாக சரிய தொடங்கியது. கோவிட் தொற்றுக்கு முன்னர் 7.5% ஆக இருந்து கோவிட் தொற்றுக்கு பின்னர் இன்னும் மோசமான நிலைக்கு சென்றது.அதனால் முக்கிய பிரச்சனை, நாம் சரியாக வருவாயை ஈட்டவில்லை. மற்றோன்று ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சரியாக வரி பணத்தை திரும்ப தராதது. தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரும் மொத வரிப்பணத்தில் 10-12% கொடுக்கிறது (மறைமுக , நேர்முக வரிகளை சேர்த்தே). நாங்கள் 20,000 கோடி வருமானத்தை ஒன்றிய அரசால் இழந்துளோம்; சுயமாக ஈட்டப்பட்டிருக்கவேண்டிய 70,000 கோடி வருமானத்தையும் இழந்துள்ளோம்.
இந்த சூழலிலிருந்து மீண்டு தமிழ் நாட்டின் வருமானத்தை பெருக்க என்ன திட்டம் வைத்துளீர்கள் ?
எங்களிடம் நிலையான திட்டமும், குறுகிய கால திட்டமும் இருக்கிறது. நிலையான திட்டத்தின் படி சில வழிகளின் மூலம் 10-15% அடைய வேண்டும் சொந்த வருமானத்தின் மூலம்.முதலில் கடந்த 10 வருடங்களில் எந்தெந்த வழிகளில் இந்த வருமானத்தை பெற்றுவந்தோம் என்று கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக எப்படி நாம் சமூக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூழ்நிலையை உருவாக்குவது என்பது. அடுத்தது இதற்கு முன் இல்லாத புதிய வழிகளில் எப்படி நாம் வருமானத்தை ஈட்டமுடியும் என்று கண்டுபிடிப்பது. பிறகு தமிழ்நாடு FRA சட்டத்தின் படி GSDPல் 3% கடனாக பெற்று வளர்ச்சியில் கவனம் செலுத்து , உட்கட்டமைப்பு வசதிகள் , தொழில் பெட்டைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்களில் முதலீடு செய்வது.
Source: HindustanTimes