42 மாத செயல்பாட்டு அறிக்கை

/

42 மாத செயல்பாட்டு அறிக்கை

May 2019 - Oct 2019

மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உங்களின் பேராதரவோடு பொறுப்பேற்று 42 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதிகளில் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் முதன்மை வகித்திடும் தொகுதிகளில் ஒன்றாக மதுரை மத்தியம் திகழ்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மூன்றரை ஆண்டுகளில் சராசரியாக ஆண்டிற்கு 30 திட்டங்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றி தந்துள்ளேன். அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் தொகுதி சார்ந்து மேற்கொண்ட திட்டப்பணிகள் குறித்த விரிவான அறிக்கையை தொகுதி மக்களான தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். உங்களின் ஆலோசனைகளுக்கும் நான் இன்னும் சிறப்பாக பணியாற்றிட நீங்கள் அளித்து வரும் உத்வேகத்திற்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

புகார்கள் மீதான நடவடிக்கை

”மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து” என்றார் பேரறிஞர் அண்ணா.

நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் நீங்கள் என்னை எளிமையாக தொடர்பு கொள்வதற்கும், உங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து அதை செயல்படுத்தியும் உள்ளேன்.

அதன் ஒரு பகுதியாக மத்திய தொகுதியில் உள்ள 22 வார்டுகளில் 25 புகார் பெட்டிகளை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெறும் புகார் மற்றும் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறேன். மேலும் மக்கள் தொடர்பு மைய தொலைபேசி எண் 7305519999 வழியாகவும், வாட்சப் எண்ணிலும், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com மூலமாகவும், தொகுதி அலுவலகம் மற்றும் இல்ல அலுவலகத்தில் நேரடியாக பெறப்படும் புகார்கள் மீதும் துறை சார்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

 

 

புகார் வகை மற்றும் எண்ணிக்கை
தண்ணீர் பிரச்சனை 422 பூங்கா ஆக்கிரமிப்பு 1
பாதாள சாக்கடை பிரச்சனை 241 போக்குவரத்து வசதி 6
கழிவுநீர் பிரச்சனை 70 போக்குவரத்து தொழிலாளர்கள் 2
குப்பை அகற்றுதல் தொடர்பாக 91 பட்டா பிரச்சனை 60
சமூக ஒழுங்கு மற்றும் காவல் 8 வேலைவாய்ப்பு குறித்து 51
கழிப்பறை வசதி வேண்டி 48 வேகத்தடை அமைத்தல் 5
முதியோர் உதவித்தொகை 217 வீட்டு வரி குறைத்தல் 3
சாலை பிரச்சனை 144 வீட்டு வசதி 5
மின்சாரம் & தெருவிளக்கு குறித்து 103 விளையாட்டு மைதானம் 1
துப்புரவு பணியாளர்கள் சங்கம் 4 விதவை உதவித்தொகை 139
மழைநீர் தேங்கல் குறித்து 55 வரி பிரச்சனை 6
மருத்துவ உதவி வேண்டி 54 வாடகை பிரச்சனை குறித்து 2
கோயில் & அறநிலையத்துறை 13 நியாய விலைக்கடை சம்பந்தமாக 3
அங்கன்வாடி வசதி வேண்டி 12 திருமண உதவித்தொகை வேண்டி 9
கிருதுமால் நதி தூர்வாருதல் 2 இலவச வீட்டு மனை வேண்டி 3
கேபிள் டிவி பிரச்சனை 1 இறப்பு உதவித்தொகை வேண்டி 4
சத்துணவுக்கூடம் வசதி 11 உதவி கோரிக்கை 12
சமுதாயக்கூடம் வசதி 22 ஊனமுற்றோர் உதவித்தொகை 125
நாய் தொல்லை 11 கல்வி உதவித்தொகை 12
நூலகம் வேண்டி 2 பரிந்துரை கடிதம் 22
மதுக்கடை பிரச்சனை 9 பொது பிரச்சனை 75
பள்ளிக்கூட வசதி 32 மற்றவை 191
மொத்தம் 2309

• பேச்சியம்மன் படித்துறை சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடியாத நிலையில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க ஆணையரிடம் வலியுறுத்தினேன். பணிகள் முடிந்த பின் தற்போது 15.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்து தந்துள்ளேன்.

• 2016 பொதுதேர்தல் பிரச்சாரத்தின் போது வார்டு 8 CAS காலனி பொதுமக்களிடம் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்து தந்துள்ளேன்.

• வார்டு 8 தீக்கதிர் அலுவலகம் எதிரில் உள்ள திருவள்ளுவர் தெரு பொதுமக்கள் பைபாஸ் சாலையை கடந்து சென்று தங்களுக்கு தேவையான தண்ணீரை பிடிக்க வேண்டியதிருந்தது. அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அப்பகுதியில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளது.

தொகுதி மேம்பாட்டு பணிகள்

ஜூன் 2019 - நவம்பர் 2019

மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மேலாண்மை

எனது தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் மக்களின் தேவையை உணர்ந்து எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் ஆங்காங்கே புதிய போர்வெல்கள் அமைத்து தந்துள்ளேன்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் 19 புதிய போர்வெல்கள் அமைத்து தந்துள்ளேன்.

சாலை மேம்பாடு:

சாலை வசதியில்லாத பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 6 புதிய தார்சாலைகள் மற்றும் ஃபேவர் ப்ளாக் சாலைகளை அமைத்து தந்துள்ளேன்.

அரசு பள்ளிகள் மேல் தனிக்கவனம்:

எனது தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றித் தருகிறேன். பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியினை செலவிடுகிறேன்.

வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ம் வகுப்புகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து தந்துள்ளேன்.

அவ்வை மாநகராட்சி அங்கன்வாடி பள்ளிக்கு புதிய கட்டிடங்களை ரூபாய் 7 லட்சம் மதிப்பிட்டில் அமைத்து தந்துள்ளேன்.

தொழில்நுட்பத்தில் முதன்மை:

தொழில் நுட்பத்தை முன்னெடுத்து மக்களுக்கு பயன் தரும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக சூரியசக்தி நிழற்குடையை நம் தொகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்கிற சிம்மக்கல் பேருந்து நிலையத்தில் அமைத்திருக்கிறேன். சூரியசக்தியில் இயங்கும் விளக்கு, விசிறி, சார்ஜர் உடன் காவல்துறைக்கு நேரடி காட்சிகளை வழங்கும் CCTV வசதியுடன் அந்நிழற்கொடை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் சாய்வுதளமும் அதில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை பொறுத்து தொகுதியின் பல்வேறு இடங்களிலும் இதுபோல் அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

திட்டப்பணிகளில் புதுமை:

தொகுதிக்குள் நிறைவேற்றப்படும் திட்டப்பணிகள் ஒவ்வொன்றிலும் புதுமையை கையாள வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக குழந்தைகள் ஆரம்ப கல்வி பயிலும் அங்கன்வாடி மையங்கள் ஒவ்வொன்றும் அமைக்கப்படும் பொழுது அவர்களை கவரும் வகையில் கண்கவர் ஓவியங்கள் வரையப்படுகிறது. வள்ளுவரின் பெருமை சொல்லும் ஓவியங்கள், கீழடி மற்றும் வைகை கரை நாகரீகத்தை பறைசாற்றும் காட்சிகள் என குழந்தைகளின் அறிவாற்றல் பெறுகும் வண்ணம் அங்கன்வாடி கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

மீனாட்சியம்மன் கோவில் புனரமைப்பு:

கடந்த 2018ம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு பலமுறை நான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். கோவிலில் மேற்கொள்ளப்படவேண்டிய விபத்து மேலாண்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அதனை ஊடகங்களில் வெளியிட்டேன்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்திலும் உரையாற்றினேன். தற்போது தீவிபத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதனை விரைவில் செயல்படுத்திட தொடர்ந்து முயற்சிப்பேன்.

தூங்கா நகரில் சுத்தம் பேணும் பூங்காநகர்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி முன்னெடுத்தாலும் கூட மக்களின் ஒத்தழைப்பும் ஆதரவும் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. முக்கியமாக சுகாதாரம், தூய்மைப் பணிகளில் மக்களின் சுய ஒழுக்கமும், தன் முனைப்பும் மிகவும் அவசியம். இந்த பண்பு தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் வளரும்போது சமூகம் முழுக்க அதனை பின்பற்றி நடைபோடும்.

என் தொகுதியில் உள்ள வார்டு 14 பூங்கா நகர் பகுதி மக்கள் தங்கள் வாழுமிடத்தை ஒரு முன்னுதாரணமான பகுதியாக சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்திருப்பதை நான் தொகுதி ஆய்வின் போது நேரில் கண்டேன். அவர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பாராட்ட எண்ணினேன். என் சார்பாக அங்குள்ள 76 வீடுகளுக்கும் நான் என் குடும்பத்தினருடன் நேரில் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பாராட்டி, பரிசுகளும், இனிப்பும் வழங்கி மகிழ்ந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினேன்.

தொடர்கிறேன்...