மக்கள் பணியில் 6 மாதங்கள்

/

மக்கள் பணியில் 6 மாதங்கள்

May 2016 - Oct 2016

மதுரை மத்திய தொகுதி சட்டமமன்ற உறுப்பினராக செயலாற்றிய பணிகளின் தொகுப்பு.

*அன்பிற்கினிய மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு வணக்கம்!

என் மீதும் நான் கடந்து வந்துள்ள அரசியல் பாரம்பரி்யங்கள் மீதும் நம்பிக்கை வைத்து என்னை மதுரை மத்திய .தொகுதி சட்டமன்ற உறுப்பினராககிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சொல்வதைச் செய்கின்ற என் தந்தையார் பண்பாளர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்களின் வழியில் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட நான் தலைவர் கலைஞர், தளபதியார் மு,க ஸ்டாலின் ஆகியோரது வழிகாட்டுதல்களோடு பேரறிஞர் அண்ணாவின் ’மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்கலிடமிருந்து கற்றுக்கொள், மக்களுக்கு தேவையானவற்றை அங்கு இருந்து கொண்டே செய் என்ற மாண்பிற்கிணங்க கடந்த 6 மாத காலம் சட்டமன்ற உறுப்பினராக எனது பணியினை ஆற்றி வருகிறேன்.

நான் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டபடி இந்த 5 வருடங்களில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை நான் செயலாற்றிய பணிகள் குறித்தும், செயலாக்கத்தில் உள்ள பனிகள் குறித்தும் அறிக்கையாக உங்கல் முன் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் முதற்கட்டமாக கடந்த 6 மாதங்களில் உங்களது ஆலோசனைகலயும், புகார்களையும் மனதில் பதித்து நான் செய்த பனிகள் உங்களது பார்வைக்கு...

சமூக நலத்துறை சார்ந்த பணிகள்

நமது தொகுதிக்குட்பட்ட மக்களின் சமூக நலத்துறை சார்ந்த முக்கிய கோரிக்கையான முதியோர் உதவித்தொகை சம்பந்தமாக நமது தொகுதியின் வார்டுகளுக்கு உட்பட்ட (8,9,10,15,16,17,ல்19,78,82,86) 55 பயனாளிகளிடம் பெறப்பட்டு அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்துள்ளேன்.

சமூக நலத்துறையின் மற்றொரு முக்கிய அங்கமான விதவை உதவித்தொகை சம்பந்தமாக நமது தொகுதியின் வார்டுகளுக்கு உட்பட்ட (8,10,14,16,17,65,79,81,82,86,87) 43 பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு விதவை உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்துள்ளேன்.

சட்டமன்ற உருப்பினர் மேம்பட்டு நிதியில் இருந்து தொகுதி மேம்பாட்டிற்காக 2 கோடியே 1 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள பணிகளின் தொகுப்பு

தண்ணீர் பிரச்சனை நீக்கிட 2 லட்சம் புதிய போர்வெல் அமைத்திடும் பணிகள் 18 லட்சம் மதிப்பீட்டில் கீழ்க்காணும் வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

/

 

சமுதாயக்கூடம்:

*நமது தொகுதிக்குட்பட்ட வார்டு 78ல் திடீர்நகர் பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

/

 

பொதுக்கழிப்பறை அமைத்தல்:

/

 

அங்கன்வாடி புதுப்பித்தல்:

/

 

எல்.இ.டி விளக்குகல் அமைத்திடும் பணி:

22 வார்டுகளில் எல்.இ.டி விளக்குகள் அமைத்திடும் பணிக்காக 18 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்ந்த பணிகள்

பொதுமக்களிடமிருந்து மாநகராட்சி சார்ந்த பணிகளுக்காக பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டதோடு அது குறித்த தகவல்கல் புகார்தாரருக்கு தெரிவிக்கப்பட்டது.

1. உப்புதண்ணீர் பிரச்சனை

2. நல்லதண்ணீர் பிரச்சனை

நன்றி.