மக்கள் பணியில் 36 மாதங்கள்

/

மக்கள் பணியில் 36 மாதங்கள்

Nov 2018 - Apr 2019

ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் தவறாமல் மக்கள் மன்றத்தில் எனது செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறேன். என் பணிகளுக்கு கிடைத்த உங்களின் பெரு ஆதரவாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மத்திய தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கான உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

/

 

மக்கள் பணிகளில் தமிழக எம்.எல்.ஏ-க்களில் முன்னுதாரணமாக, சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜூனியர் விகடன் இதழ் என்னை பாராட்டியதை இந்த தருணத்தில் என்னை தேர்ந்தெடுத்த மக்களான உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் தீவிரமாக பணியாற்ற நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

செயல்படாத EPS & OPS அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தராத நிலையில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தருணத்தில், கடந்த ஆறு மாத காலம் சட்டமன்ற உறுப்பினராக நான் ஆற்றிய பணிகளை இங்கே உங்கள் முன் பட்டியலிடுவதை என் கடமையாக கருதுகிறேன்.

முன்னர் நான் குறிப்பிட்டு சொன்னது போல கையாலாகாத இந்த அரசால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்காமல் திண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.

தொகுதி முழுவதும் ஆங்காங்கே என்னால் நிறுவப்பட்டுள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும், மக்கள் தொடர்பு மைய தொலைபேசி (7305519999) வழியாகவும், வாட்சப் எண்ணிலும் பெறப்படும் புகார்கள், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com மூலமாகவும் தொகுதி அலுவலகம் மற்றும் இல்ல அலுவலகத்தில் நேரடியாக பெறப்படும் புகார்கள் மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

/

 

தொகுதி மேம்பாட்டு பணிகள்

மதுரை மத்திய தொகுதி மேம்பாட்டுப்பணிகளை விரைந்து நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நான் கடந்த 6 மாதங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்ர்த்தி செய்யும் வகையில் பல முக்கிய பணிகளை நிறைவு செய்து அவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நீர் மேலாண்மை பணிகள்

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின் மெத்தனமே காரணம். சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இது குறித்து தொடர்ந்து கடிதங்கள் மூலம் நான் வலியுறுத்தியுள்ளேன். நீர் மேலாண்மை, நீராதாரங்களை தூர் வாருதல், தண்ணீர் திருட்டு முதலியவற்றில் இந்த அரசின் கவனக்குறைவை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே திருடப்படுவதால் மதுரை நகருக்கு தேவையான தண்ணீர் முறையாக வருவதில்லை. சட்டமன்ற உறுப்பினராக 2016ல் நான் பதவியேற்றது முதல் இது குறித்து ஆராய ஒரு சிறப்பு குழு அமைத்து விரிவான அறிக்கையை பொதுப்பணித்துற்றை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்தும் உள்ளேன்.

ஆனாலும் அரசின் நடவடிக்கைக்கு காத்திராமல் என் தொகுதியில், மதுரை நகரின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு என் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் வார்டு வாரியாக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் குடிநீர் ஆர்.ஓ ப்ளாண்டும் நிறுவப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் கீழ்க்கண்ட பகுதிகளில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளது.

/

 

/

 

/

 

இது தவிர தற்போது 16 புதிய போர்வெல் பணிகள் என் தொகுதியில் முடிவடையும் தருவாயில் உள்ளது. பணிகள் முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு இவையணைத்தும் திறந்து வைக்கப்படும்.

சாலைப் மேம்பாட்டுப் பணிகள்

மேலவாசல் முழுக்க தார் சாலை

மதுரை மாநகர் முழுவதும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் விளிம்புநிலையில் உள்ள எளிய மனிதர்கள் வாழும் மேலவாசல் பகுதி முன்பு சேரும் சகதியாகவும், சாலைகள் குப்பைகள் நிறைந்தும் காட்சியளித்தது. அப்பகுதி முழுக்க தார்சாலை அமைக்க ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு தற்போது மேலவாசல் பகுதி முழுவதும் மக்கள் பயன்பெறும் வண்ணம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல நாட்களாக நிறைவேறாமல் இருந்த அவர்களது கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

/

 

கோமஸ்பாளையம் பகுதியில் பேவர் ப்ளாக் சாலை

மிகவும் பின்தங்கிய கோமஸ்பாளையம் பகுதியில் தொடர்ந்து கவனம் செலுத்தி பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறேன். தற்போது அப்பகுதியில் முக்கிய சாலை உள்ளிட்ட 11 சந்துகளுக்கும் பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டுள்ளது.

/

 

டோபி காலனியில் பேவர் ப்ளாக் சாலை

சலவை தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான டோபி காலனியில் அங்கு வசிக்கும் அனைவருக்கும் இலவசமாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கியபின் தற்போது புதிய் பேவர் ப்ளாக் சாலை அங்கு போடப்பட்டுள்ளது.

வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி (நாடார் சந்து)

குறுகியதாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் வாழும் மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகினர். தற்போது அங்கு புதிய பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டுள்ளது.

/

 

புதிய அங்கன்வாடி மையங்கள்

சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களின் குழந்தைகள் தங்கள் பள்ளிக்கல்வியை தொடங்குவதற்கான முதல் வாய்ப்பாக அரசு அங்கன்வாடி மையங்களை நாடுகிறார்கள். ஆனால் நகரில் முக்கிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் இல்லாத நிலையும், இருக்கிற அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையிலும், உள்ளது.

எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கடந்த 6 மாதங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள்.

1. 78வது வார்டு மேலவாசல் குடிசை மாற்று வாரியம் 7.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடிகட்டிடம்.

2. 82வது வார்டு தைக்கால் 4வது தெருவில்ரூ. 7.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்.

புதிய சமுதாயக்கூடம்

ஏழை. எளிய, நடுத்தர மக்களின் பயன்பாட்டுக்காக என் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ஆங்காங்கே சமுதாயக் கூடங்களை அமைத்து தந்துள்ளேன். அந்த வகையில் கடந்த 6 மாத இடைவெளியில் வார்டு 17 எல்லீஸ் நகர் ஸ்டேடியம் குடியிருப்பு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் அமைத்து தந்துள்ளேன். போடி லைன் வாழ் பொதுமக்களும், அடுக்கக வீடுகளில் வாழும் நடுத்தர மக்களும் இதனால் பயனடைவார்கள்.

/

 

"மக்களிடம் செல், அவர்களை மேம்படுத்து"

தொகுதி மக்களை நான் சந்திப்பதை அவர்களின் குறைகளை கேட்க மட்டும் என்று இல்லாமல் பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் வழிகாட்டியாக இருந்து நமக்கு சொன்னதை போல அவர்களோடு கலந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை நம்மால் அறிந்து கொள்ள இயலும்.

/

 

மக்களை தொடர்பு கொள்ளும் வழிகள் அனைத்திலும் அவர்களோடு நான் தொடர்பில் இருக்கிறேன்.

தொகுதி மக்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

எனது குடும்பத்தினருடன் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து தொகுதி மக்களுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டேன். என் மனைவி, இரு மகன்களோடு, தொகுதியில் உள்ள குழந்தைகள்மற்றும் இளைஞர்கள் சூழ கேக் வெட்டி பொதுமக்களோடு இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிந்தேன்.

/

 

சமத்துவ பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று எளிய மக்கள் வாழும் மேல்வாசல் பகுதியில் சமத்துவ பொங்கள் கொண்டாடினேன். கோலப்போட்டி, உரியடித்தல், சிறுவர் விளையாட்டு என பொதுமக்களில் ஒருவனாக என் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.

கிராம சபை கூட்டங்கள்

தலைவர் மு.க,ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க தமிழ்கம் மூழுக்க ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களிடம் நேரடியாக சென்று அவர்களது குறைகள் குறித்து கேட்டறிந்தோம். கையலாக இந்த அடிமை அரசு மக்களுக்குகுடிநீர், சுகாதாரம், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாத சூழ்நிலையில் பொதுமக்களை நேரில் சந்தித்ததன் மூலம் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக திமுக மட்டுமே இருக்கிறது என்பதை உறுதி செய்தோம்.

நான் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் ஒன்றியங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்கிருந்த தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்களோடு உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கடிதங்கள் மூலம் வலியுறுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை நிரைவேற்றி தந்தது மனதுக்கு நிறைவை தந்தது.

/

 

மக்களோடு தொடர்பில் உள்ள பல்வேறு நிகழ்வுகள்

அனுதினமும் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறேன். சமூக செயல்பாட்டாளர்கள் நடத்தும் கருத்தரங்கங்கள், கல்லூரி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்கள், பேட்டிகள் என கடந்த 6 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களோடு என்றும் தொடர்பில் இருந்து வருகிறேன்.

/

 

மக்கள் பிரச்சனையில் உடனுக்குடனான நடவடிக்கை

1. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்தாண்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் விபத்து மேலாண்மை குறித்து சட்டசபையில் எனது கருத்தை முன்வைத்ததோடு, இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கோவிலில் நிரந்தரமாக தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தியிருந்தேன். தற்போது அங்கு நிரந்தரமாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

/

 

2. மதுரை மாநகரில் நடந்து வரும் SmartCity திட்டப்பணிகளால் பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஆணையருக்கு நான் கடிதம் எழுதியுள்ள நிலையில், திட்டப்பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஜூனியர்விகடனில் வெளிவந்த கட்டுரை.

3. மீனாட்சியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ்வரும் சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள முறைகேட்டில் மதுரை மாவட்ட வருவாய் துறை செய்த தவறுகளை உடனடியாக பொதுக்கணக்குக்குழு தலைவர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு இதனை ஆய்வு செய்திட வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளேன்.

4. SmartCity திட்டத்தின் கீழ் போதிய பாதுகாப்பின்றி மேற்கொள்ளப்படும் பன்னடுக்கு வாகன காப்பக பணிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதை பலமுறை எடுத்துக்கூறியும் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டி ஆணையருக்கு கடிதம் எழுதியதன் பயனாக தற்போது முறையாக தடுப்பு வேலிகள் அமைத்து பணி நடைபெறுகிறது.

ஒரே ஒரு ட்வீட்.. ஒரே வாரத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை

/

 

/

 

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த எனது ஆய்வு

தமிழகத்தின் நிதி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, அது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நான் வருடம் தோறும் அரசு சட்டசபையில் வெளியிடும் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களில் பங்கேற்று தேவையான பரிந்துரைகளை எடுத்து கூறியிருக்கிறேன். நிதி மேலாண்மையில் அரசின் தவறான செயல்பாடுகள் குறித்து மக்கள் மன்றத்தில் விமர்சனங்களை முன்வைத்ததோடு அதற்கான தீர்வையும் தொடர்ந்து சமர்ப்பித்துள்ளேன்.

பொதுக்கணக்கு குழு

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொடர்ந்து 3வது வருடமும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் இடம் பெற செய்ததை கிடைத்ததற்கறிய ஒரு நல்வாய்ப்பாக கருதி அதன் மூலம் அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேல் ஆய்வு செய்திடவும், தமிழகம் முழுக்க நடைபெறும் அரசின் பணிகளை கண்காணிக்கவும் நம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக கொண்டு வரவும் முடிகிறது.

பொதுக்கணக்கு குழு

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொடர்ந்து 3வது வருடமும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் இடம் பெற செய்ததை கிடைத்ததற்கறிய ஒரு நல்வாய்ப்பாக கருதி அதன் மூலம் அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேல் ஆய்வு செய்திடவும், தமிழகம் முழுக்க நடைபெறும் அரசின் பணிகளை கண்காணிக்கவும் நம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக கொண்டு வரவும் முடிகிறது.

2019 தேர்தலில் தகவல் தொழில் நுட்ப அணியின் பங்கு

சட்டமன்ற உறுப்பினராக நான் எனது கடமையை நிறைவேற்றிவரும் அதேவேளையில் திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் இயக்கத்தின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாலராகவும் நான் செயல்பட்டு வருவதால் தேர்தல் காலங்களில் பல்வேறு பணிகளில் எனது பங்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்தது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் எண்ணம் ஈடேறும் வண்ணம் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு தேவையான பணிகளை முன்னெடுத்தேன்.

மக்களின் எண்ணத்திற்கேற்ப இன்று கழகம் வெற்றி பெற்று மக்களவையில் தமிழகத்தின் குரல் ஒலித்திட நானும் எனது அணியினரும் பங்காற்றியதை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு குன்றத்தில் கழக கொடி பறக்க துணை நின்ற தகவல் தொழில் நுட்ப அணியின் பணிகள் குறிப்பிட்த்தக்கவை. ஐந்து தேர்தலுக்கு பிறகு, திருப்பரங்குன்றம் தொகுதியில் 1.06% வித்தியாசத்தில் (2396 வாக்குகளில், அதாவது சராசரி ஒவ்வொரு பூத்திலும் 8 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும்) திமுக வெற்றி பெற்றதில், திமுக தகவல் நுட்ப அணியின் முக்கிய பங்கு இருப்பதாக நம்புகிறேன்.

நேர்மையான மக்கள் தீர்ப்பு

நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்வதில் மதுரை மத்திய தொகுதி மக்களின் பங்கு மகத்தானது என்பதை மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் மதுரை பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை மக்களவை தொகுதியில் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக கிடைத்த வாக்கு சதவீத அடிப்படையில், மதுரை மத்திய தொகுதிக்கே முதலிடம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். உலகத்தின் தலைசிறந்த வங்கிகளில் பணியாற்றிய வங்கியாளனான நானும், பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த தோழர் சு.வெங்கடேசன் அவர்களும் பணம் எதுவும் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொண்டோம். எங்களை தங்களது பிரதிநிதிகளாக தேர்வு செய்த தொகுதி வாக்காளப் பெருமக்களுக்களான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொடர்கிறேன்...

'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம் என்ற தலைவர் கலைஞரின் பொன்மொழிக்கேற்ப கழகத்தின் தலைவர் தளபதியாரின் வழியில் தொகுதி மக்களாகிய உங்களின் விருப்பத்திற்கேற்ப எனது பணிகளை நன்றி உணர்வோடு தொடர்கிறேன்.

நன்றி.