/

COVID-19 மருத்துவ நெருக்கடியை கடந்து பொருளாதார நெருக்கடி குறித்து சிந்திக்க வேண்டிய கட்டம் இது, ஏன்?

Published Date: April 3, 2020

COVID-19 மருத்துவ நெருக்கடியை கடந்து பொருளாதார நெருக்கடி குறித்து சிந்திக்க வேண்டிய கட்டம் இது, ஏன்?

உலகமெங்கும் பரவியுள்ள கொரோன நோய் பொருளாதார மற்றும் சுகாதாரப் நெருக்கடியாக மட்டுமல்லாதுமானுட நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. உலக அரசுகள் அனைத்தின் முன்பும் இன்று நிலைக்கும் அடிப்படை கொள்கைசார் கேள்வி,

1. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு/சமூக தனிமைப்படுத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக தற்போது நம்வசம் உள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளின் அளவை காட்டிலும் நோய் தொற்றினால் உருவாகும் புதிய தேவைகள் மிகாத வண்ணம் பார்த்துக் கொள்வது. அதன் நீட்சியாக, மரணங்களின் எண்ணிக்கை குறைவது. அல்லது

2. ஊரடங்கை தவிர்ப்பது அல்லது தளர்த்தி முற்றிலுமாக ரத்து செய்வதன் மூலமாக அதுவிளைவிக்கும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை குறைப்பது. ஏற்கனவே உலக அளவில் உருவாகப்போகும் பொருளாதார மந்த நிலையை தவிர்க்க இயலாத சூழலில் உள்ளோம். பரவலான பொருளாதார பாதுகாப்பின்மை நிலவும் சூழலில், ஏழை எளியவர்களும், தினக்கூலிகளும் தான் மிக மோசமான பாதிப்புகளை சந்திப்பார்கள்.

/

 

வேறு வகையில் சொல்லவேண்டுமானால்,நோய் பாதிப்பா அல்லது பொருளாதார பேரிழப்பா என்ற கடினமான தேர்வுநிலையில் உள்ளோம். நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் கொள்கைசார் விவாதங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய சூழ்நிலை "சரியாக கணிக்க முடியாத எதையும் சரியாக புரிந்துகொள்ளவும், நிர்வகிக்கவும் முடியாது" என்ற பழமொழியை கடுமையான வகையில் உண்மையாகியுள்ளது. துல்லியமான தகவல்கள், அதிநவீன மாதிரிகள் மற்றும் அனுபவங்கள் நம் சொந்த படிப்பினைகளையும் தாண்டி பிறரது அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளும் பண்பு போன்றவை நல்ல காலகட்டங்களின் போது கூட சிறந்த கொள்கை முடிவை வகுப்பதற்கு இன்றியமையாதவை. நெருக்கடி நிறைந்த இக்காலகட்டத்தில்இந்த அடிப்படைகள்அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

நம்மிடம் சரியான தரவுகள் உள்ளதா?

கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு மிகப்பெரிய தடைகளாக இருப்பது இத்தொற்று நோயை மூன்று பரிமாணங்களில் தடங்காணுதலில் உள்ளது. அவற்றின் ஒவ்வொன்றின் தன்மைகள் மற்றும் துல்லியமாக கணக்கிடுவதற்கு தடையாக இருக்கும் சிக்கல்கள் பற்றியும் கீழ்காணும் அட்டவணையில் விவரித்துள்ளேன்.

எண்ணிக்கை விளக்கம் துல்லியமாக அறிவதில் உள்ள சிக்கல்கள் கருத்துரை
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் குறுகிய கால அளவில், தொற்று நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக பரவியுள்ளது என்பதற்கான குறியீடு. அனால் நீண்ட கால அளவில்,. நீண்டகால அளவை பொறுத்தமட்டில் இவ்வெண்ணிக்கை மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் என்ற அளவில் கருத்தில் கொண்டால் மக்களிடம் உள்ள குழு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எஞ்சியுள்ள ஆபத்தை கணக்கிட முடியும். நோய்கண்டறியும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தகவல்கள் மற்றும்மாதிரிகளின் மதிப்பு அதிகரிக்கும். மிகக் குறைவான அளவிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால்இத்தகவல்கள் எந்தப் முழுமையானபயனையும் அளிக்காது. இந்தியாவில்பத்து லட்சம் மக்களில் 33 நபர்களின்மாதிரிகள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பத்து லட்சத்துக்கு 40 மாதிரிகள் என்ற அளவில் சற்று மேம்பட்டுள்ளது.ஆனால்இவ்விரண்டுமே உலகளவில் மிகக் குறைவானஎண்ணிக்கையே.இந்தியாவிலேயே அதிகபட்சமாககேரளாவில் 10 லட்சம் மக்களில் 150 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் (கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான பதிலி(proxy) பரிசோதனையில்வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களி நோயின் தீவிரம் காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப் படவேண்டிய நிலையில் உள்ளவர்கள். முன்னர்கிடைத்த எண்ணிக்கைகளை விட மருத்துவமனை அனுமதி குறித்து பதிவாகும் எண்ணிக்கைமிகவும் துல்லியமானது. ஆனால் பொருளாதார மற்றும் போக்குவரத்து இடர்பாடுகளால்சிலரால் மருத்துவமனையை அணுக முடிவதில்லை. மொத்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கைகள்தற்போதைய தாங்கும் திறன் போன்றவற்றுடன்கணக்கிடுவதன் மூலமாக கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான முக்கிய குறியீடுகள். அனால்களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள்COVID-19தொற்றுக்கள்வேறு நோய்களாக தவறாக கணிக்கபடுகிறது (போதிய அளவு பரிசோதனை உபகரணங்கள் இல்லாமை மற்றும் தெரிந்தே மறைக்கபடுகிறது)
கொரோனா தோற்றால்உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களில்மிகச்சிறிய அளவினரே (சில மாதிரிகளில் 0.005%ல் இருந்து – சிலவற்றுள் 3% வரை)அதுவும்ஏற்கனவே உடல் ரீதியானபாதிப்புகள் உள்ளவர்களே நோய்த் தொற்றால் மரணமடைகிறார்கள். மூன்றில் இதுவே மிகவும் துல்லியமான குறியீடு.. இழப்புகளை மூடி மறைப்பது கடினம் ஆனால் தவறான வகைப்பாடுகள் அல்லது மறைப்பதர்க்கான வாய்ப்புகள் உண்டு. சாதாரணகாய்ச்சல் பாதிப்பு கூட 1% இறப்பைஉருவாக்குகிறது.

 

இந்த மூன்று வகைப்பாடுகளில் கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் 100% துல்லியமானதாக இருக்க முடியாது என இந்த அட்டவணை (இரு நாட்களுக்கு முந்தைய தரவுகள்) தெளிவுபடுத்துகிறது.

அத்துடன் உலக அளவில் பல்வேறு நாடுகள், அதிலும் நம்மை விட பல மடங்கு நம்பகத்தன்மை மிக்க தகவல் சேகரிப்பு வழிமுறை உள்ள நாடுகளிலிருந்து கிடைக்கப்படும் தகவல்கள் கூட இந்த எண்ணிக்கையில் பெறும் வேறுபாடுகளை காண்பிக்கின்றன, அவற்றைக் கொண்டு இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பொது முன்னறிவிப்பு மாதிரியை உருவாக்க முடியாது எனத் தெளிவாகின்றது.

சில நாடுகளில் சீதோஷ்ண நிலை அல்லது அதன் மக்கள் தொகையின் நோய் எதிர்ப்புச் சக்தியின் தன்மைகள் இந்த கொள்ளைநோயின் பாதிப்புகளை பெருமளவு மாற்றக்கூடும்.ஆனால் இதனை உறுதியாக கூறிவிட முடியாது.

பல நாடுகளில் இருந்து கிடைக்கபெற்ற தரவுகளை ஆராய்ந்து, அதன் முடிவில் இரு முக்கிய கூறுகளில் நிலைத்தன்மையை காணமுடிந்தது. முதலாவது பரிசோதனையின் விகிதம் அதிகரித்தால் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விகிதம் பொதுவாக குறைகிறது. வேறொரு கோணத்தில் பார்ப்போமேயானால், பரிசோதனை செய்வதற்கான திறன் அதிகமாக உள்ள நாடுகளில் அறிகுறி காண்பிக்காதவர்களை கூட பரிசோதனை செய்ய முடியும். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது எனில் அதனால் அறிகுறிகள் ஏதுமில்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களை கண்டுபிடிக்க முடியும், விளைவாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் பார்வைக்கு வராத நோய் தோற்று பரவலை குறைக்கமுடியும். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறியக் கூடிய திறன் பெற்றிருப்பதனால் உண்டாகும் ஆதாயம் யாதெனில் இவற்றை பெற்றுள்ள நாடுகளில் குறைந்த இறப்பு விகிதத்தை காணமுடிகிறது. இந்த நாடுகளில் நம்மை விட குறைவான கட்டுப்பாடுகளை கொண்ட ஊரடங்கு நடவடிக்கைகளே (சிங்கப்பூர், தென் கொரியா) கடைபிடிக்கப்படுகிறது.

/

குறிப்பு: WHO, உலக வங்கி உட்பட பல தளங்களில் இருந்து பல கால அளவுகளில் (மார்ச் 26ம் நாள் தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை) திரட்டப்பட்ட தரவுகள். ஒப்பிட மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதுவே இந்தியாவில் மிக அதிக அளவில் அடையாலமிடுதல் (பாதிப்புக்குள்ளாக கூடியவர்களை கண்டறிதல்), தடம் அறிதல் (அவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல்) மற்றும் பரிசோதனை (அடையாளமிடபட்டவர்கள் மற்றும் தடம் அறியப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருக்கிறதோ இல்லையோ பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும்) பல வாரங்களுக்கு முன்பாகவே மேற்கொண்டிருக்க வேண்டும். எந்த அளவிற்கு இவற்றை திறம்பட செய்கிறோமோ அந்த அளவிற்கு நோய் பரவலை பற்றியும், அது ஏற்படுத்தக்கூடிய உடல் நல பாதிப்புகள் குறித்தும் மிகுதியாக புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் கொள்கைகளை வகுக்க முடியும்.

ஆனால் அடையாளமிடுதல், தடமறிதல் மற்றும் பரிசோதனை போன்றவற்றில் நமது செயல்பாடுகள் குறுகியகால அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பிக்க முடியாத அளவிற்கு குறைவாக உள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளரிடம் இருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மார்ச் 27, 2020 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்தியாவிற்கு வந்த சர்வதேச பயணிகளில் 15 லட்சம் பேர் முறையாக அடையாளப் படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதே இதற்கான மிகச் சிறந்த உதாரணம்.

இதனை நாம் மற்றொரு கோணத்தில் பார்ப்போம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2020 அன்று ஒரே நாளில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 என இரட்டிப்பானது. நான் மேலே உள்ள அட்டவணையிள் குறிப்பிட்டிருப்பது போல குறுகிய கால அளவில் பார்ப்போமேயானால் இந்த எண்ணிக்கை சற்று பயன்படக்கூடியது ஆனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையான 7.5 கோடியுடன் ஒப்பிட்டால் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் 0.00016 %லிருந்து 0.0003% ஆகும் - இது நீண்டகால நோக்கில் கணக்கில் கொண்டால் அதுவும் 100 கோடி மக்களில் வெறும் 300 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் நிலையில் இந்த எண்ணிக்கை அர்த்தமற்றுப் போகிறது. தடமறிதல் மற்றும் மாதிரிகள் சேகரிப்பில் ஏற்படக்கூடிய பிழைகள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை வழங்கும் பயனை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

தற்போது உள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பரிசோதனைகளின் விகிதத்தை சீனாவின் அளவிற்கு 10 மடங்காகவோ அல்லது தென்கொரிய அளவிற்கு 300 மடங்காகவோ உயர்த்தி தெளிவான கொள்கை முடிவுகளை வகுப்பது சாத்தியமற்றது. நாம் எவ்வாறு பாதிப்பை மதிப்பீடு செய்யும் திறனை மேம்படுத்தி கொள்கைகளை வகுப்பது?

சரியான தரவுகள் இல்லாத பட்சத்தில், என்ன செய்ய வேண்டும்?

எந்த ஒரு பிரச்சனையையும் நேரடியாக தீர்க்க மிகவும் சிக்கலானதாக இருக்கும்போது, நிலைமையைப் பற்றி குறைந்தபட்சம் நன்கு புரிந்துகொள்ள வழிகள் உள்ளன என்பதே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பணி ஆய்வுகள் குறித்த எனது பட்டப்படிப்பை நான் கற்றுக்கொண்ட பாடம். அந்த அணுகுமுறையில் கொள்கை முடிவுகளை நான் இவ்வாறு வரையறுக்கிறேன்:

1. நோய்த்தொற்றை பொருத்தவரை இந்த நெருக்கடியின் இறுதிக்கட்டம் எவ்வாறு இருக்கும்?

2. தற்போதுள்ள நிலையில் இருந்து இறுதிக்கட்டத்தை அடைவதற்கான குறைந்தபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பாதையை தெரிவு செய்வதற்கு உதவக்கூடிய கணக்குகள் யாவை?

இந்த வகையான கொள்ளைநோய்கள் கீழ்காணும் இரண்டு வகையான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும். அவை நோயை முற்றிலும் ஒழிப்பது அல்லது மக்கள் தொகையில் குழு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது. COVID-19ஐ ஒழிப்பதற்கானஉடனடி சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிகள் உதவியுடன் குழு எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அதன்மூலம் நோய்த்தொற்று ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகளை SARS அல்லது H1V1 வைரஸ் பாதிப்புகளின் அளவிற்கு மட்டுப்படுத்துவதே இந்தநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வழி என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியதுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் பாதையை தெரிவு செய்ய வேண்டியது என்பதே இந்த நிலையில் நாம் எடுக்க வேண்டிய கொள்கை முடிவின் கட்டாயமாகியுள்ளது.

சாதாரணமான சூழலில் மக்கள்தொகையில் அறிகுறிகளுடனான அல்லது அறிகுறிகள் காண்பிக்காத நோய்த் தொற்றின் வளர்ச்சியைக் கொண்டு குழு எதிர்ப்பு சக்தி அளவிடப்படும். ஆனால் நம் வசம் தற்போது உள்ள பரிசோதனை வசதிகள் மற்றும் தரவுகளை கருத்தில் கொண்டால் அது சாத்தியமில்லை.

நோய்த்தொற்றை பற்றிய தகவல்கள் சரிவர இல்லாத பட்சத்தில், எளிதில் கண்டறியக்கூடிய 2 அளவுகளைக் கொண்டு சிறந்த கொள்கை முடிவுகளை எடுக்க முடியும் என்று நான் கருதுகிறேன் அவை: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதன் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் - அவற்றை அதற்கான காரணங்கள் மற்றும் பகுதிகள் மற்றும் நோய் ஏற்பட்ட காலகட்டத்தை கடந்த ஆண்டுகள் உடனான ஒப்பீடு ஆகிய அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.

முதலாவதாக நடைமுறையிலுள்ள ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அதன் பிறகு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும் அல்லது தளர்த்தப்படும். ஏப்ரல் 14 க்குப் பின்னர் ஊரடங்கு எந்த அளவிற்கு தளர்த்தப்படலாம்?

நோய் பரவலை தடுப்பதற்கான சில முக்கியமான கட்டுப்பாடுகளை மீறாமல் நாம் இந்த ஊரடங்கு எவ்வளவு வேண்டுமானாலும் தளர்த்தலாம்.

1. தோற்றுப் பரவல் உச்சத்தை எட்டியுள்ள சமயத்தில் மருத்துவ வசதிக்கான தேர்வுகள் தற்போது கையிருப்பில் உள்ள மருத்துவமனை படுக்கைகள் மற்றும் உபகரணங்களில் அளவைவிட அதிகரித்து விடக்கூடாது.

2. மரணங்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் (சராசரி காய்ச்சலை இறப்பு விகிதத்தை தொடக்கப்புள்ளியாக வைத்துக்கொண்டாள் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே மரணங்கள் ஏற்படவேண்டும்)

தற்போது உள்ள சூழலில் இவ்விரண்டு பற்றிய முழுமையான தகவல்களை நாம் அறிய முடியாது எனினும் ஏற்கனவே நம்மிடம் கடந்த கால மருத்துவமனை அனுமதி மற்றும் மரணங்கள் குறித்த எண்ணிக்கை குறைந்தது மாவட்ட அளவிலாவது இருக்கும். ஒவ்வொரு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விகிதம் பல்வேறு பரிமாணங்களில் வேறுபடும் என அனுமானிக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் மாவட்ட அதிகாரிகளிடம் இருக்கும் அல்லது அவர்களால் எளிதில் சேகரித்து விட முடியும் என்று நான் எதிர்நோக்குகிறேன்.

நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தாண்டு ஒரு மாதத்தில் மொத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை கடந்த ஆண்டுகளில் அதே மாதங்களுடன் ஒப்பிட்டால் இந்த 21 நாள் ஊரடங்கு நிறைவடைவதற்குள் இனிமேல் ஏற்பட உள்ள ஆபத்து குறித்து ஒரு தெளிவான புரிதலை உண்டாக்கி கொள்ள முடியும். இந்த தகவல்கள் உடல்நலக்குறைவு/ நோய்களின் வகைகள் அத்துடன் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றுடன் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த அளவிலான தகவலும் பயன்படும். அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கையில் 3 வார ஊரடங்கிற்கு பிறகும் எண்ணிக்கையில் பெருத்த வேறுபாடு எதுவும் கடந்த காலங்களுடன் ஏற்படவில்லை என்றால், அதுவம் தவறான திட்டமிடல் காரணமாக பெரும் தொற்றுக்கான ஆபத்தை உருவாக்கும் வகையில் சென்ற வாரம் பல்லாயிரம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி சென்ற போதிலும் அவ்வாறு பெரிய வேறுபாடு காணப்படவில்லையெனில் நாம் ஒவ்வொரு மாவட்டமாக ஊரடங்கு விரைவாக தளர்த்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.

கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய மற்றும்மொரு புள்ளிவிவரம் அசல் இறப்பு விகிதம் (Crude Death Rate). இது ஓராண்டிற்கு சராசரியாக 1000 நபரில் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதை குறிக்கும் புள்ளிவிவரம் ஆகும். சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியாவில் சராசரியாக 1000 நபர்களில் இறப்பு விகிதம் 25 தற்போது நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக இறப்பு விகிதம் 7ஆக குறைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவும் வட மாநிலங்கள் போல வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் குழந்தை இறப்பு போன்ற மேலும் பல குறியீடுகள் காரணமாக இறப்பு விகித மிகுதியாக காணப்படும். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் உள்ள அதிகாரிகளிடம் மேலும் நுணுக்கமான அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கான CDR தகவல்கள் இருக்கும்.

தொற்றுநோய்க்கு பிறகான தற்போதைய CDR எண்ணிக்கையை கடந்த ஆண்டுகளில் இதே வாரங்கள் உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் ஆழமான தகவல்கள் வெளிப்படும். இந்த எண்ணிக்கை உருவாக்கும் கண்ணோட்டம் யாதெனில் இந்திய அளவில் CDR 7 என்றால் ஒரு ஆண்டுக்கு 90 லட்சம், சராசரியாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் மக்கள் பல்வேறு காரணங்களினால் மரணமடைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு CDR 6.5 என அனுமானித்தல் 2019ஆம் ஆண்டு 4.75 லட்சம் மக்கள், நாளொன்றுக்கு சராசரியாக 1340 பேர் மரணிக்கிறார்கள்.

இந்த அடிப்படைத் தகவல்களை மனதில் கொண்டு முதல் நோய்த்தொற்று ஏற்பட்ட ஜனவரி 30 ஆம் நாளை தொடர்ந்து 60 நாட்களுக்குப் பின்னர் அரசு அதிகாரபூர்வமாக வழங்கிய கொரோனா தோற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையான 50(இந்திய அளவில்) மற்றும் 1(தமிழ்நாட்டில் மட்டும்) என்ற எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதிகாரப்பூர்வமான தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக நான் கருதவில்லை உண்மையான தகவல்கள் 10 அல்லது 100 மடங்கு குறைத்து வெளியிடப்பட்டு இருக்கலாம்,எனவே அதனை இந்த காலகட்டத்தில் புள்ளிவிபர ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட 15.6 லட்சம் (இந்திய அளவில்) மற்றும் 80000(தமிழ்நாட்டு அளவில்) இறப்புகளுடன் ஒப்பிட வேண்டும்.

பொருளாதார உருகுலைவுக்கான அறிகுறிகள்: மேலும் எவ்வளவு மோசமைடையும்?

கடந்த சில நாட்களாக நாம் கண்டு வரும் காட்சிகளும், நிகழ்ச்சிகளும் ஊரடங்கின் காரணமாக மிகப்பெரிய பொருளாதார தடையை ஏற்படுத்தியுள்ளது என தெரிகிறது, அனால் எந்த அளவிற்கு என்பது கணிக்க முடியாதது. இதை கண்டறிய நம்மிடம் தேவையான அளவிற்கு நிகழ்கால தரவுகள் இல்லை. நம் பொருளாதாரத்தில் கணிசமான அளவு முறைசாரா தொழில்கள் என்பதால், பாதிப்பின் அளவை துல்லியமாகவோ உடனடியாகவோ (பணமதிப்பிழப்பின் பாதிப்பை போலவே) கணிக்க முடியாது. முதலீட்டு வங்கி செயல்பாட்டில், ஒப்பிடுகளை கொண்டு மதிப்பீடு அல்லது துல்லியமாக கணிக்க முடியாத அளவுகளின் மதிபீட்டை கொண்டு ஊர்ஜிதம் செய்வோம். அந்த வழிமுறையை கையாண்டால்,

• உலக அளவில், பாதிப்புகள் சந்தை பொருளாதரத்தை மையமாக கொண்ட உலக பொருளாதார நெருக்கடி 2008ஐ காட்டிலும் மோசமடையும். அதை உறுதிபடுத்தும் ஒரு தரவுப் புள்ளியாக, அமெரிக்காவில் வாரந்திர வேலையின்மை கூற்றுகள் அந்த காலகட்டத்தில் 6.5 லட்சமாக இருந்தது. இது சென்ற வாரம் 66 லட்சமாக உள்ளது. சென்ற வாரம் இது 34 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

• பணமதிப்பிழப்பு வரலாறு காணாத வகையில் நாட்டின் பணப்புழக்கத்தை முடக்கியது. அதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் (விவசாயம் தொடங்கி உற்பத்தி, சேவைகள் என) பெருமளவு பாதிக்கப்பட்டன. தொற்று மற்றும் இறப்புகள், அதை சார்ந்த செலவுகள் போன்றவற்றை கணக்கில் கொண்டால் குறைந்தது 2% அளவிற்கு (பணமதிப்பிழப்பு சார்ந்த குறைந்தபட்ச மதிப்பீடு) நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பாதிக்கும்.

• அடிப்படையாக, இந்த 2% இழப்பை சமாளிக்க முடியாத அளவிற்கு நாம் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளோம். 7% என்ற அளவில் இருந்த நம் வளர்ச்சி விகிதம் ஊரடங்கு நடவடிக்கைக்கு முன்பாக 5%க்கும் குறைவாக இருந்தது. நமது வங்கிகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளன. நமது நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவ்வளவு நெருக்கடிகள் உள்ள பட்சத்தில் நாம் விரைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் – எந்த அளவிற்கு வேகமாக நாம் பொருளாதார தடைகளை அகற்றி செயல்படுகிறோமோ, அந்த அளவிற்கு பாதிப்புகளும் குறைந்து, நம் செயல்பாடுகள் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில்,பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி, சமீப காலத்தின் மிக மோசமானாக மந்த நிலையின் விளைவுகளில் இருந்து விடுபட, நாம் ஊரடங்கு நடவடிக்கையை சிந்தனையுடன், முறையாக தளர்த்துவதின் மீது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். சிந்திக்ககூடிய எவரும் அடையாளப்படுத்துதல், தடமறிதல் மற்றும் சோதனைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை நாம் அதிகப்படுத்த வேண்டும் என்பதை மறுக்க மாட்டார்கள். குறிகிய கால கொள்கைகளை கொண்டு நாம் மேற்கொள்ளும் பரிசோதனைகளை கொண்டு நாம் முழுமையான தரவுகளை பெறமுடியாது. கடந்தகால, மாவட்ட (அல்லது ஒன்றிய, கிராம) அளவிலான மருத்துவமனை சேர்க்கை மற்றும் இறப்பு விகித விவரங்களை ஆராய்ந்து எவ்வளவு விரைவாக நாம் எங்கெங்கு ஊரடங்கை தளர்த்த முடியும் என்று கண்டறிய வேண்டும்.

தொற்று நோய் பரவலை குறைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எந்த அளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்கும் பொறுப்பும் கொள்கைசார் அறிஞர்களுக்கு நிச்சியம் உள்ளது

 

English Version: The NEWS Minute



 Articles Year Wise: