/

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டுமா? நிச்சயமாக! ஆனால் அதை எவ்வாறு செய்கிறோம் என்பது மிக முக்கியம்.

Published Date: April 8, 2020

ஏப்ரல் 7ம் தேதி அன்று இரவு இந்தியா டுடே தொலைக்காட்சியில் நான் தோன்றியதில் இருந்து, சிலர் நான் முன்வைத்த திட்டங்கள் சாத்தியமாவது குறித்த கேள்விகளையும், சிலர் அதை விரிவாக விவரிக்க வேண்டியும் கேட்டுள்ளனர். இந்த கட்டுரை மூலமாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, அதை எப்படி சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் கூற முனைகிறேன்.

மறுக்க முடியாத சில உண்மைகளை முன்வைத்து தொடங்குகிறேன்:

1.      ஒரு நெருக்கடி உள்ளதை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட தாமதித்தால் (உதாரணமாக - பெரும் அபாயங்கள் உள்ள ஒரு தொற்று நோய் பரவுவதை குறைத்தல்) மிக கடுமையான கொள்கை முடிவுகள் (உதாரணமாக – ஊரடங்கு, 144 தடை உத்தரவு)

2.      இந்தியா போன்ற ஒரு நாட்டில்  குறைந்த இடையூறுகளை கொண்ட மிகச்சிறந்த திட்டங்கள் கூட 100% வெற்றியை எட்ட முடியாத நிலையில், மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமற்றது.

3.      இருந்தாலும், விரிவான அளவில் (ஒரு மாநிலம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும்) கடுமையான திட்டத்தை (144 தடை உத்தரவு அல்லாமல் ஊரடங்கு) கொண்ட கொள்கையை பலரும் பின்பற்றினால் மட்டுமே வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

4.      மேற்கூறிய விஷயங்களை சரிவர செய்யாத பட்சத்தில், அதன் கூட்டு விளைவுகளாக...

       a)     எதிர்பார்த்த முடிவுகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு (உதாரணமாக அனைவரும் தாமாக முன்வந்து கட்டுப்படுவது – மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது? என்பது தெளிவாக தெரியவில்லை)

       b)     எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேர்வது (கடைகளில் அலைமோதும் மக்கள், தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக் குவிப்பது, பேருந்து நிலையங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மொத்தமாக குவிவது, தத்தமது ஊர்களுக்கு நினைத்து பார்க்க இயலாத நெடுந்தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை)

பலரும், பரவலாக பார்த்த இந்த காட்சிகளும் (மறைப்பதும், தவறாக அர்த்தம் கொள்வதும் மிகக்கடினம்) செய்தி அறிக்கைகளும் (மறைப்பதும், மாற்றியமைப்பதும் எளிது) விவாதங்களுக்கு இடமளிக்காமல் இவற்றை ஊர்ஜிதம் செய்துள்ளன.

மேலும் ஆய்வுகளின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிக்கும் செயல்பாடுகளினால் ஏற்படும் செலவுகள் (மானுடப் பேரிடராக மட்டுமல்லாமல், பொருளாதார பின்விளைவுகளை மேலும் மோசமடையச் செய்யும்) ரத்து செய்யும் செயல்பாடுகள் (பரந்து விரிந்த மருத்துவ நெருக்கடியை வலுவடைய செய்யும் வாய்ப்புகள் உள்ளன) ஆகியவற்றை நாம் மின்னணு (கருப்பு அல்லது வெள்ளை) தளத்தில் மட்டுமல்லாமல், பண்பட்ட தளத்தில் (எதிர்மறை கருத்துகள் உட்பட), விவாதிக்க, நாம் பின்வரும் செயல்களில் ஈடுபட வேண்டும்

 

1. முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக (சமுதாய அளவிலோ பொருளாதார அளவிலோ) பூஜ்ஜியத்தில் இருந்து 100 (முழுமையான ஊரடங்கில் இருந்து 100% சகஜ நிலை) என உடனடியாக ஒரு செயல்பாட்டை நிறுத்தி வைப்பது எந்த அளவுக்கு தோல்வியில் முடியுமோ அதே அளவுக்கு  அபாயம் நிறைந்த செயல்பாடுகள் மூலமாகவும் (100% சகஜ நிலையில் இருந்து முழுமையான ஊரடங்கு) வெற்றி பெற சாத்தியமில்லை.

2. ஊரடங்ககை தளர்த்தும் முடிவுகளை (தேவை இருந்தாலும் இல்லை என்றாலும்) சிறிய அளவுகளில் இருந்து, அதாவது மாவட்ட அளவில், உண்மையில் சிறுநகர அல்லது கிராம அளவுகளில் எடுக்க வேண்டும். குறைந்தபட்சமாக மாநில அளவில் எடுக்க வேண்டும் (ஊரடங்கு நடவடிக்கையை தேசிய அளவில் காலவரையின்றி நீட்டிக்க முடியாது).

3. நம் வசம் உள்ள தரவுகளை கொண்டு தளர்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான முடிவுகளை (ஒவ்வொரு அளவிலும் அல்லாமல் நீர்வீழ்ச்சி போன்ற வழிமுறையை கையாண்டு) எடுக்க வேண்டும்:

     i. நோய்த்தொற்று மற்றும் அதன் விளைவுகள் குறித்து தேவையான அளவிற்கு தரவுகள் இருக்கும் பட்சத்தில் (போதிய அளவில் பரிசோதனைகளை மேற்கொண்டு தரவுகளின் அடிப்படையில், உள்ளூர் மக்கள் தொகையில் இருக்கும் நிலை நீடிக்கும் என்ற எண்ணத்தில்) ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் அளவிற்கு தொற்று அபாயம் குறைவாக உள்ளதா என்று கண்டறிய வேண்டும். 

     ii. மேற்கூறிய தகவல் தற்போதைக்கு அடையமுடியாத ஒரு இலக்கு. ஏனெனில் நம் வசம் போதுமான அளவிற்கு பரிசோதனை கருவிகளும் இல்லை. அதனால்  பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த முடியாது. பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தாமல் உள்ளூர் மக்கள்தொகையில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என்ற நிலையை அடைய முடியாது. ஏற்கனவே உள்ளூர் மக்கள் தொகையில் ஒரு பகுதி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு இருக்கலாம். இது Herd Immunity (குழு நோய் எதிர்ப்பு சக்தியை) அடைந்துள்ள நிலையை குறிக்கும். இந்த அடிப்படையில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

   iii.  முதலிரண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாதபட்சத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பின்வரும் தகவல்களை கிராம சிறு நகர வார்டு அளவுகளில் திரட்டி நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகளை கண்டறியலாம்

      iv.

நோய்க்கான அறிகுறி மருத்துவ சேர்க்கைகளிலோ அல்லது இறப்பு விகிதத்திலோ தென்படாத பட்சத்தில் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தலாம்.

      v. மேற்கூறிய எதுவுமே ஊரடங்கு உத்தரவை தளர்த்த பயன்படாத பட்சத்தில் அந்தந்த பகுதிகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும். ஆனால் தகவல் தொடர்பு மற்றும் அமல்படுத்தும் முறை போன்றவை பன்மடங்கு பெருகி திறன்பட இருக்கவேண்டும்.

கீழே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது..

தொலைக்காட்சி விவாதத்தின்போது, தற்போதைய மத்திய அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தகவல்களை திரட்டி வருகிறது என்ற கருத்தை நான் முன்வைத்தேன். ஒரு வகையில், இது இயற்கையில் இயல்பாக நடந்த ஒன்றாகவும் (மக்கள்தொகையில் PAN மற்றும் AADHAR உள்ள நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது), மற்றொரு வகையில் இது விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் உள்ளது. பாஜக அரசு தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது மேலும் தற்போதைய தலைமை அனைத்து தகவல்களையும் எப்படியாவது தெரிந்து கொண்டு அதை தன்வசப்படுத்த வேண்டும் என்ற அதீத எண்ணம் உடையதாக இருக்கிறது (NPR, NRC போன்ற நடவடிக்கைகள் சிறந்த உதாரணம்). மேலும் நான் எங்கெல்லாம் ஊரடங்கு உத்தரவை தளர்த்த முடியவில்லையோ? அங்கெல்லாம் அரசாங்கம் தங்களிடமுள்ள மலைபோன்ற தரவுதளத்தை கொண்டு சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும்  தகுந்த நிதி ஆதாரங்களையும் உணவுப் பொருட்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். 

 

சிலர் இதுபோன்ற ஒரு நெருக்கடியின் போது, உதவி என்பது துல்லியமாக அல்லாமல் அனைவருக்குமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை தேவைப்படும் பணத்தை அச்சடிக்கும் திறனும், நிதியை கருத்தில் கொள்ளாமல் செலவினங்களை அதிகரிக்கும் வாய்ப்பும் கிடையாது என்பது என் ஐயம். அதற்கான காரணங்கள்,

●   எந்த மதிப்பீட்டை கணக்கில் கொண்டாலும் நமது நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. நம்முடைய பற்றாக்குறை 3 சதவீதத்தை தாண்டிவிட்டது சிலர் அதை 6% என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

●ஏற்கனவே பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நமது பொருளாதாரம் மிகவும் மந்தமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக அரசாங்கத்தின் வரவுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை கண்டிப்பாக அடைந்திருக்க முடியாது. அதன் விளைவாக நிதிநிலையில் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையை விட அதிகமாகவே பற்றாக்குறை இருந்திருக்கும். 

●  அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட எண்களை விடவும் நம்முடைய சந்தை மதிப்பீடு மேலும் மோசமடையும் அதன் விளைவாக அரசாங்க பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் மேலும் உயரும். வட்டி விகித உயர்வின் காரணமாக ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மத்திய, மாநில அரசாங்கங்கள் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்படும்.

●   உலக அளவில் அபாயங்களை ஏற்றுக்கொண்டு கையாளும் திறன்  குறைந்து கொண்டே வருகிறது. ஏனெனில், அனைத்து சந்தைகளும் முன் இல்லாத அளவிற்கு, அமெரிக்க Great Depression காலத்தை விடவும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனவே, அரசு கடன்களை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். அதன் காரணமாக மேற்கூறிய பிரச்சனைகள் மேலும் மோசமடையும். 

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டால், அரசாங்கம் அறிவித்துள்ள நிதியை போல மூன்றிலிருந்து ஐந்து மடங்கு செலவு செய்ய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் அதை மீறி செலவு செய்ய நிதிநிலை இடமளிக்காது. எனவே செலவு செய்யப்படும் தொகை மூலமாக பொருளாதாரம் புத்துயிர் பெற வேண்டுமெனில், நிதி விளிம்புநிலை மக்களுக்கும், நடுத்தர வர்க்க மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் வெளிப்படைத்தன்மையுடன் துல்லியமாக செயல்பட வேண்டும். இது குறித்து விரிவாக நான் மற்றொரு கட்டுரையில் சொல்கிறேன். ஆனால் தற்போதைக்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் எங்கெல்லாம் ஊரடங்கு தொடர்கிறதோ, அங்கெல்லாம் அரசாங்கம் உடனடியாக நிதி ஆதாரங்களையும் உணவுப்பொருட்களையும், ஏற்கனவே அவர்களிடம் உள்ள தரவுகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும். ஏற்கனவே இந்த விஷயத்தில் பல நாட்கள் தாமதம் அடைந்து விட்டோம். மேலும் தாமதிக்க கூடாது. 

இப்போது நான் தொலைக்காட்சியில் கூறியதை தாண்டி சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒரு கொள்கையை பொறுத்தவரை மிகவும் கடினமான பகுதி அதை அமல்படுத்துவது தான். பரந்த கொள்கை முடிவுகளை குறிப்பிட்ட நடவடிக்கைகளின் மூலமாக செயல்படுத்த வேண்டும். நான் மேற்கூறிய நடவடிக்கைகளை அமல்படுத்த உறுதியான இலக்குகளை கொண்டு செயல்பட வேண்டும் (உதாரணமாக மருத்துவமனை சேர்க்கை எந்த அளவுக்கு  அதிகரித்தால் செயல்பாட்டை துரிதமாக்க வேண்டும் போன்றவை).

பல மாநிலங்கள் (முக்கியமாக கேரளம்) ஏற்கனவே நிலவரத்தைப் பொறுத்து படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவது குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். பொதுவாக நோய்த்தொற்றின் பரப்பளவு, தங்கள் வசம் உள்ள மருத்துவ வசதிகள், சிக்கல்களில் இருந்து மீளத் தேவையான கட்டமைப்பு, நிதி ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநிலம் அவரவர் தேவைக்கு ஏற்ப கொள்கைகளையும், இலக்குகளையும் வடிவமைக்க வேண்டும். மத்திய அரசுக்கென  தெளிவான ஒரு பொறுப்பு இருப்பதை என்னால் காண முடிகிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். ஏனெனில், மத்திய அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டது என்பதே என் கருத்து. ஆனால் இந்த சூழ்நிலையில் அவர்களுடைய பொறுப்பானது மாநிலங்களுக்கு விதிமுறைகளை அளித்து அவர்களுடன் இணைந்து செயல்பட்டு மாநில எல்லைகள் மற்றும் பரிமாற்றங்கள் சார்ந்த கொள்கைகளை வகுப்பதாகும். 

பின்வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தனி கட்டுரையாக எழுத முடியும். இருந்தாலும், தேசிய அளவிலான செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளேன்:

1.      நெருக்கடி மேலாண்மை குழு (காணொளி மூலமாக சந்திக்கும் வகையில்) நியமித்து அதன் தலைமையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். அதன் உறுப்பினர்களாக மத்திய மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தும் பொறுப்பை இக்குழு ஏற்க வேண்டும்.

2.  அனைத்து மாநிலங்களையும் தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க அறிவுறுத்த வேண்டும். அந்த கால அவகாசத்தை கொண்டு குழுவை நிர்ணயிப்பது, தரவுகளை சேகரிப்பது, விதிமுறைகளை வடிவமைப்பது மற்றும் தகவல் தொடர்பு என தற்போது படிப்படியாக என்னென்ன செய்ய வேண்டும், ஊரடங்கு முடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும்

3.   தரவுகளை சேகரிப்பதில் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான திட்டத்தை கடைபிடிக்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும், அதன் பின்விளைவுகள், குழு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது போன்றவற்றுக்கு தகுந்த குறியீடுகளைக் கொண்டு விதிமுறைகளை வடிவமைத்து, அதை மாநில அரசாங்கங்களிடம் அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக ஒரே மாதிரியான தகவல்களை சேகரிப்பதற்கும், தெரியப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முறைபடுத்த வேண்டும்

4.  அபாயங்கள் குறித்து படிநிலைகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக ஐந்து படிநிலைகளை உருவாக்கலாம். மிகவும் குறைவு முதல் மிகவும் அதிகம் வரையிலான ஐந்து படிநிலைகளை வெவ்வேறு நிறங்களை கொண்டு உருவாக்க வேண்டும். அவை நோய்த்தொற்றின் அளவு, மருத்துவமனை சேர்க்கை, இறப்பு விகிதம், குழு நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல தளங்களில் இருக்கவேண்டும். நெருக்கடி முடியும் வரை, வரம் ஒருமுறை  ஒவ்வொரு பகுதியும் இந்த அபாய மதிப்பீட்டை தெரியப்படுத்த வேண்டும். 

5.    ஊரடங்கு உத்தரவை பொருத்தவரை தெளிவான விதிமுறைகளை 0 முதல் 5 என்ற நிலைகளாக வரையறுக்க வேண்டும். உதாரணமாக தற்போதைய ஊரடங்கு உத்தரவு 5 என்ற நிலையில் இருந்தால் (அதன் மூலமாக கடந்த மூன்று வாரங்களில் நாம் பெற்ற படிப்பினைகள் என்ன என்பதை ஆவணப்படுத்தி) 0 என்ற நிலையில் ஊரடங்கு கிடையாது என்று இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் கடுகளவு கிடைக்கும் விவரங்களை கூட தெளிவாக சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். விவசாயம், விநியோக சங்கிலி, கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பொது நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் எவை அனுமதிக்கப்பட்டவை, எவை அனுமதிக்கப்படாதவை என்ற தெளிவான திட்டங்கள்  இருக்க வேண்டும். உதாரணமாக முதல் அளவில், 50 நபர்களுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை வணிக வளாகங்களிலும், திரையரங்குகளிலும் பொது விழாக்களிலும் நடத்தக்கூடாது என்றும் பள்ளிகளில் பொதுக்கூட்டம் இருக்ககூடாது, ஆனால் வகுப்புகள் நடத்தப்படலாம் என்றும் இருக்க வேண்டும்.

6.      எந்த நிலையிலான ஊரடங்கு உத்தரவு எந்த அளவிலான அபாயத்திற்கு பொருந்தும் என்று தீர்மானித்து, ஊரடங்கு அளவை அபாயத்திற்கு ஏற்றவாறு மேலும், கீழுமாக மாற்றி அமைக்கலாம்

7.      நிதி ஆதாரங்களை வழங்குவதில் ஒரு ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக ஏழ்மை நிலைக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தர வேண்டிய சிறப்பு நிதி, ஒப்பந்த அடிப்படையிலான நிதிகள், சிறு குறு தொழில்களுக்கு சிறப்பு சலுகைகள் போன்றவை ஊரடங்கு உத்தரவின் ஐந்து நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். 0 என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது. இதற்கு தேவையான நிதிகளை மத்திய அரசு  தகுந்த நேரத்தில் வழங்க வேண்டும்.

8.      மக்களையும், பொருட்களையும் கொண்டு சேர்க்கும் விதத்தில் மாநிலத்திற்கு இடையேயான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  போக்குவரத்து வசதிகளை, கொள்கைகளை அந்தந்த பகுதியின் அபாயத் தளத்தை பொறுத்து வரையறுக்க வேண்டும். அபாயத் தளத்தின் அருகே உள்ள  இடங்களைப் பொறுத்தும் முக்கியமாக இரு மாநிலங்களுக்கு இடையே இருந்தாலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

9.      ஒருங்கிணைந்த கொள்முதல் மற்றும் பகிர்ந்தளித்தல் திட்டத்தை வகுக்க வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  கொள்கைளை மட்டுமல்லாமல் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற  கொள்கைகளையும் வகுக்க வேண்டும். அதன் மூலமாக அத்தியாவசிய சாதனங்கள், PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை உபகரணங்கள் உட்பட மருந்துகள், வென்டிலேட்டர் என இறுதியில் தடுப்பூசிகள் வரை ஏற்கனவே மாநிலங்களுக்கு வகுக்கப்பட்ட வாங்கும் திட்டங்களுக்கு எவ்வித இடையூறும், தடையும் இல்லாத வண்ணம் செயல்படுத்த வேண்டும். மேற்கூறிய ஐந்து அபாய நிலைகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு கொள்கையின் தரத்தை உயர்த்தவோ, செயல்படுத்தவோ வேண்டும். 

10.  விரிவான தகவல் தொடர்பு கொள்கைகளை அனைத்து மொழிகளிலும் தயார் செய்து அதை மக்களுக்குப் புரியும் வண்ணத்தில், என்ன கையிருப்பு உள்ளது, யாருக்கு எவ்வளவு பணம் தரப்படும் என விதிகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு புரிய வைக்க வேண்டும். அதில் அபாய தளம், ஊரடங்கு நிலை, அதற்கு ஏற்றார்போல் வழங்கப்படும் நிதி ஆதாரம் ஆகியவற்றை நாடு முழுவதும் அனைவருக்கும் தெளிவான, முழுமையான, சமமான புரிதல் இருக்கும் வண்ணம் தெரிவிக்க வேண்டும்.

இந்த பணியை பொருத்தவரை, பொதுவாக மத்திய அரசுக்கும்  தனிப்பட்ட வகையில் பிரதமர் அவர்களுக்கும் மிகப்பெரிய மேடைகளும், அதீதமான ஒழி எழுப்பக்கூடிய ஒலிப்பெருக்கிகளும் உள்ளன. எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளும், தகவல்களும் அனைவரையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. பொதுவாக, வெற்றிகரமான அமலுக்கு புரிதலின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்த நெருக்கடியை பொருத்தமட்டில், இதை நாம் சமாளிக்க நல்ல நிர்வாகம், சிந்தனை, தரவுகள், மாதிரி அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் தேவை. குறைந்த அளவிலான சேதங்களை ஏற்படுத்தும் வண்ணம் செதுக்கி, நாம் நம்முடைய இலக்குகளை அடைய வேண்டும். அதற்கு நாம் உளியை பயன்படுத்த வேண்டுமே அன்றி சுத்தியலை கொண்டு பெரும் சேதங்களை விளைவித்து, அதன் மூலம் இலக்குகளை எட்ட முயற்சிக்கக்கூடாது. 

மாநில சுயாட்சிக்கு என்னைவிட கடுமையாக ஆதரவளிக்கும் நபரை கண்டறிவது கடினம். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும், சிறு அளவிலும் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். ஆனால் இந்த நெருக்கடியை பொறுத்தமட்டில் மத்திய அரசின் பங்கு மிகப்பெரியது. மாநிலங்களுக்கு அறிவுறுத்தவும், ஒருங்கிணைப்பாளராக செயல்படவும் தகுந்த நேரம் இது. ஒருங்கிணைந்த ஒரு செயல்பாட்டை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். சர்வாதிகார மனப்பான்மையுடன் “ஒரே சட்டம், அனைவருக்கும் பொருந்தும்” என்ற கூர்மையற்ற வகையில் அவர்கள் செயல்படக்கூடாது. 

தற்போதைய மத்திய அரசாங்கம் செய்யும் எந்த செயல்பாட்டிற்கும் நான்‌ எதிர்ப்பு தெரிவித்து வருபவன் என்பது ஊரறிந்த விஷயம். சிறிய அளவிலான எண்ணிக்கையில் இருந்தாலும் அனைத்து அதிகாரங்களும் இருவரிடம் மட்டுமே உள்ளன. பன்முகத்தன்மையுள்ள ஒரு ஜனநாயகத்தில் இரு நபர்களிடம் மட்டும் அதிகாரங்கள் குவிந்து உள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நான் தெரிவிக்கும் எதிர்ப்பு எனது பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடன் நான் கொண்டுள்ள கொள்கை வேறுபாடுகளையும் கடந்தது. அனால்,  பிரதமர் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமும், உள்துறை அமைச்சருக்கு உள்ள ஒருங்கிணைப்பு திறமையையும் யாராலும் குறைத்து மதிப்பிட  முடியாது. அவற்றை, மக்களுக்கு பயன்படும் வகையில் அரசியல் லாபங்களை கடந்து அவர்கள் இருவரும் முன்னெடுத்தால் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.

 Articles Year Wise: