மதுரை மத்திய தொகுதி செயல்பாட்டு அறிக்கை மக்களிடம் வழங்கும் நிதியமைச்சர்

Published Date: January 10, 2022

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும் இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகரா ஜன். இவர், 6 மாதத்திற்கு ஒருமுறை, தனது செயல்பாட்டு அறிக்கையை, தனது தொகுதி மக்களிடம் 2016 முதல் தொடர்ந்து சமர்ப்பித்து வருகிறார். அதேபோல், கடந்த மே முதல் நவ. 2021ம் ஆண்டுக்கான தனது செயல்பாட்டு அறிக்கையை, மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார். - அந்த அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற 2021மே மாதம் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு முதல் அலையை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு தேவையான கொரோனா மையங்கள், ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரித்தது மற்றும் தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோயின் பாதிப்பால், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கியது, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய தொகுதிக்குட்பட்ட 22 வார்டுகளிலும் தனித்தனியே சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா 3ம் அலைக்கான வாய்ப்பை குறைக்கும் அளவுக்கு முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருதல், சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பணியாளர் தேர்வு, பணி நியமனத்தில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, தமிழ்வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

 

Media: Murasoli