விவசாயிகளுக்கு விரைவில் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published Date: January 6, 2022

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

விவசாயிகளுக்கு விரைவில் வெள்ள பாதிப்பு  நிவாரண நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சட்டப்பேரவை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி கே. பழனிசாமி பேசியது:

நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் நெற்பயிர் களில் வெள்ளநீர் சூழ்ந்தது. நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். வேளாண்

அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு, எங்கெல்லாம் பயிர்கள் சேதமடைந்துள்ளன எனக் கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அரசும் நிவாரணத் தொகை எவ்வளவு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.

மத்திய அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்க்காமல் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தே தமிழக அரசே விரைந்து கொடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்றும் விவசாயிகள் கருதுகின்றனர். அதை உயர்த்தித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு கூறியது:

 

விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசுக்காகக் காத்திருக்கவில்லை. ஆனால், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கிய நிதியெல்லாம் ஏற்கெனவே செலவிடப்பட்டுவிட்டது. கூடுதல் நிதிக்கு வெள்ளிக்கிழமை துணை நிதிநிலை அறிக்கையில் உத்தரவு வாங்க உள்ளோம். அதைத் தொடர்ந்து மத்திய அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.

 

Media: Dinamani