கடந்த ஆட்சியின் போது மாமன்றமே இல்லாத மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டிதிட்டத்தில் 1000 கோடி கொள்ளை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

Published Date: February 10, 2022

CATEGORY: POLITICS

மதுரை, பிப். 12: கடந்த ஆண்டுகளில் மாமன்றமே இல்லாத மாநகராட்சியில் ஊழலுக்காகவே உருவாக்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டனர் என மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டி பேசினார்.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று பேசியதாவது

கடைசி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக முக்கியமான தேர்தல் நடந்து வருகிறது. ஒரு நாட்டிற்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல உள்ளாட்சி அமைப்புகள் மிகமுக்கியம். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மக்கள் வாழ்க்கைக்கு மிக முக்கியமான  ஒன்று. காரணம் இத்தேர்தல் மக்க ளின் அடிப்படை தேவையான  நல்ல குடிநீர், பாதாளச்சாக் கடை மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வழி வகை செய்யும்.

5 மாமன்றத்தின் மூலம் - மட்டுமே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும். வார்டு மறுவ ரையறையின் போது மத்திய தொகுதியில் இருந்த 22 வார்டுகளை கடந்த அரசு 16 வார்டுகளாக குறைத்து விட்டது. ஜன - நாயக படுகொலை செய்து ஊழலுடன் வாழ்ந்த -ஆட்சியாளர்கள். உள்ளாட்சித்தேர்தலை நடத்தவே இல்லை. தற்போது - அதனை திருத்தும் வகையிலான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள் ளது. மதுரைக்கு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. வரும் நிதியின் மூலம் திட்டங் களை செயல்ப டுத்துவது மாமன்றம் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கடமை. கடந்த 5 ஆண்டுகளில் மாமன்றமோ, மாமன்ற உறுப்பினர்களோ இல்லாமல் ஸ்மார்ட் சிட்டி என்று ஊழலுக்கான ஒரு திட்டம் நடத்தப்பட்டது.

 

அத்திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாக காட்டி விட்டு முழுமையாக கொள்ளையடித்து விட்டு கடந்த ஆட்சியாளர்கள் சென்று விட்டனர். இனி இதுமாதிரி நடக்கவே நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Media: Dinakaran