/

மோடியின் வரிக் கொள்கை அரசாங்கத்தின் பற்றாக்குறையை அதிகரித்துள்ளதா? ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் அவ்வாறு கருதுகிறார்

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துக்கள் அரசு அதன் முக்கிய செலவுத் திட்டங்களுக்கு நிதியளிக்க பணம் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் எழுப்பப்பட்டுள்ளன.

Published Date: September 15, 2020

நேரடி வரியை முற்போக்கானது என்றும், மறைமுகமான வரி பின்னடைவானது என்றும் கூறும் அவர், "2013-14 ஆம் ஆண்டில் இந்தியா அந்த தரத்திற்காக பாடுபட்டது, நேரடி வரி வருவாய் ஒட்டுமொத்த வரி வசூலில் 53-54 சதவீதமாக இருந்தது, மீதமுள்ளவை மறைமுக வரி வருவாயிலிருந்து வந்தன" என்று கூறியுள்ளார்.

பணக்காரர்களின் நேரடி வரிச்சுமையைக் குறைத்து, ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) போன்ற மறைமுக வரி வசூலை அதிகப்படுத்திய மோடி அரசின் திட்டம், கொரோனா பெருந்தொற்றின் போது அதன் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதா? முன்னாள் சர்வதேச வங்கியாளரான ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் இதை உறுதியாக நம்புகிறார். "பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர், இதில் ஒரு சிறிய சதவீதத்தை கூட (நேரடி) வரியாக அரசாங்கத்திற்கு அவர்கள் செலுத்துவதில்லை, அதே நேரத்தில் ஏழைகள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுகின்றனர், அவர்கள் செலவு செய்ய முடியாத (மறைமுக வரி செலுத்த வேண்டிய) அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்," என்று சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் முன்னாள் எம்.டி., எஃப்.எம் (விற்பனை) ஆன மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார்.

அரசு அதன் முக்கிய செலவுத் திட்டங்களுக்கு நிதியளிக்க பணம் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசாங்கம் அதன் செலவுகளைக் குறைக்கவும் கடன் வாங்குவதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

வரிவிதிப்பின் நியாயம் - 60:40 விகிதம், அதாவது அரசாங்கத்தின் வரி வருவாயில் 60 சதவீதம் நேரடி வரிவிதிப்பாக இருப்பது - என்ற OECD வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்திய இந்தியாவின் முடிவு தான் இந்த நெருக்கடியை ஆழப்படுத்தியது என்று பிசினஸ் டுடே உடனான ஒரு உரையாடலில் தியாகராஜன் கூறியுள்ளார்.

நேரடி வரியை முற்போக்கானது என்றும், மறைமுகமான வரி பின்னடைவானது என்றும் கூறும் அவர், "2013-14 ஆம் ஆண்டில் இந்தியா அந்த தரத்திற்காக பாடுபட்டது, நேரடி வரி வருவாய் ஒட்டுமொத்த வரி வசூலில் 53-54 சதவீதமாக இருந்தது, மீதமுள்ளவை மறைமுக வரி வருவாயிலிருந்து வந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

"இந்த அரசாங்கத்தின் கீழ் இந்த விகிதம் மாறிக்கொண்டே இருக்கிறது, இன்று அரசாங்கத்தின் வரி வருவாயில் 60 சதவிகிதம்பிற்ப்போக்கானமறைமுக வரிகளிலிருந்து வருகிறது. இத்தகைய மறைமுக வரிகளைச் சார்ந்திருப்பது தான், பெருந்தொற்று காரணமான பொருளாதார முடக்கத்தின் போது அரசாங்கத்தின் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நேரடி வரி ஏன் சிறந்தது என்றால் நீங்கள் பணம் சம்பாதிக்கும் ஒரு நபருக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு வரி விதிக்கிறீர்கள். இரண்டாவதாக, பணக்காரர்கள் எப்போதும் ஏழைகளை விட குறைவாகவே பாதிக்கப்படுவார்கள், எனவே, நேரடி வரி வசூலின் வருவாய் பிற்ப்போக்கான மறைமுக வரி வருவாய் அளவிற்கு குறையாது" என்று தியாகராஜன் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, "கச்சா எண்ணெயின் குறைந்த விலையும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக சில்லறை விலையும் இல்லாவிட்டால், அரசாங்கத்தின் நிதி நிலைமை தற்போது முற்றிலும் சரிந்திருக்கும்."

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு முன்னெடுத்த பல கொள்கைகளை தியாகராஜன் கடுமையாக விமர்சிக்கிறார். “பணமதிப்பிழப்பு எனும் மிகப்பெரிய பேரழிவிலிருந்து தொடங்கி, சமீபத்திய பட்ஜெட்டில் இயற்றப்பட்ட வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு வரிவிதிப்பு முன்மொழிவுகளின் பின்னடைவு வரை, அரசு விநியோக பக்க பொருளாதாரம் பற்றிய அரைகுறை புரிதலோடும், தேவை பக்கத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், முழு நாடும் நெருக்கடியில் உள்ளபோதும் கூட, பணக்கார நிறுவனங்கள் மேலும் மேலும் உள்கட்டமைப்பு சொத்துக்களின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் தங்கள் சந்தைப் பங்குகளை அதிகரித்து வருகின்றன. முன்னில்லாத அளவு தற்போது இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டின் பயன்கள் நாட்டின் மிகப்பெரிய வணிகக் குழுக்களின் டிஜிட்டல் வணிகங்களுக்கேச் செல்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

இந்த பெருந்தொற்று, பிற உள்பரவிய அதிர்ச்சிகளைப் போலவே உள்ளார்ந்த முறையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது என்று தியாகராஜன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் "அரசு அதன் கொடையாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதை அதிகப்படுத்துகிறது" என்று கருதுகிறார்.

அரசு பங்குகளை, சொத்துக்களை விற்பனை செய்வது (disinvestment) என்பது குறுகிய காலத்தில் வளங்களை திரட்டுவதற்கான ஒரு வழி என்று அவர் கூறுகிறார், ஆனால் அது 'நேர்மையான விற்பனை’ ஆக இருக்க விரும்புகிறார்.

"இது பொதுத்துறை நிறுவனங்களில் (மக்களின் குடும்பச் சொத்துகள்) திறந்த, வெளிப்படையான செயல்முறைகள் மூலம் பங்குகளை விற்பனை செய்வதையும், அரசு தரப்பு பயனாளிகளுக்கு விலைகளை மலிவாக கூறாமல் இருப்பதையும் குறிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

இந்த நேரத்தில் இந்தியாவை பாதித்து வரும் மோசமான பொருளாதார மந்தநிலை மற்றும் உலகிலேயே அதிகமான கோவிட் நோய்த்தொற்று விகிதங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு அரசியல் தந்திரமாக, சமூகம் தொடர்ச்சியான மோதல்களுக்கு உட்படுத்தப்படாமல் இருந்தால் அரசின் கடன் செலவு குறையும் என்று தியாகராஜன் நம்புகிறார். "அதிகாரத்தையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை நேரடியான, அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசு தனது சர்வாதிகார பாணியை மாற்றி, அமைதியான, இணக்கமான சமுதாயத்தை நோக்கி செயல்பட்டு, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, மேலும் நேரடி வரியின் (பணக்காரர்களுக்கான வரி) பங்கை அதிகரித்து செயல்படாவிட்டால், வேறு என்ன செய்தாலும், அவர்களால் இந்த வீழ்ச்சியை ஒருபோதும் நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது," என்று எச்சரிக்கிறார்.

Translated from:Source

 Articles Year Wise: