/

மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த பின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி

Published Date: February 21, 2022

முதல்வர் மு..ஸ்டாலினின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,  திமுக ஆட்சியையும் தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறிவரும் அதிமுகவினர் பற்றி கேட்டபோது, ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18 பேரை நீக்கி வைத்துவிட்டு கட்சிக்கு எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்கு உள்ளே வைத்து விட்டு ஊழலுக்காக ஐந்து வருடம் ஆட்சியை நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிபெற்ற அரசை முடக்க போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது

 ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி?

 சாத்தியமில்லை, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும். ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்கிறார்கள். பத்திரப்பதிவில் மதுரையில்  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. கோவில் நிலத்திலேயே ஆக்கிரமிப்பு செய்து பதிந்த  நிகழ்வுகளும் நடைபெற்றது அப்படியிருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ள போது ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையிலுள்ள கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது?

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

 முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி வெற்றி அடையும்.

அதிமுகவினர் பணம் கொடுப்பதாக தகவல் வருகிறதே?

என்னை பொருத்தவரை வாக்கிற்கு ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் வெற்றி பெற்றவன் என்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு செயல்படுபவன்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் தங்களது உரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள்?  

ஒளிவு மறைவாக, புள்ளிவிவரம் இல்லாமல், நாளைக்கு நிரூபிக்க முடியாத கருத்தை பேசினால் இந்த மாதிரி பேசலாம். கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி என்னோட வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்தது இருக்கிறேன். இதனை பிரச்சனை ஆக்குவதாக சொன்னால் ஜிஎஸ்டி நிலை குழுவில்  என்னை ஏன் உறுப்பினராக போட்டார்கள்.

 Articles Year Wise: