/

முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் நிதிநிலை மீதான சட்டமன்ற உரை

Published Date: July 25, 2016

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதலில் இந்த அவையில் என் கன்னிப் பேச்சைப் பேச வாய்ப்பளித்த எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் தளபதியாருக்கும், உங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1920-ம் ஆண்டில் Montagu-Chelmsford Reforms அடிப்படையில் முதலில் அமைக்கப்பட்ட மெட்ராஸ் ராஜ்தானி சட்ட மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும். 1952-ம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட முதல் மெட்ராஸ் மாநில சட்டப் பேரவையின் தற்காலிகப் பேரவைத் தலைவராகவும் இருந்து. அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்த எனது தாத்தா தமிழவேள் திரு. பி.டி. ராஜன் அவர்களின் வழியிலும், 1967-ம் ஆண்டு தேனி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், 1996-லிருந்து 2001 வரை இச்சட்டப் பேரவையின் தலைவராகவும் பணியாற்றிய என் தந்தையார் திரு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் வழியிலும், 30 ஆண்டுகளாக பல வெளிநாடுகளில் மாணவர், விரிவுரையாளர், ஆலோசகர், வங்கியாளர் என்று பல துறைகளில் அனுபவம் பெற்ற எனக்கு பொதுவாழ்க்கைக்கு வர மகத்தான வாய்ப்பை அளித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், அருமை அண்ணன் தளபதி அவர்களுக்கும், மேசையைத் தட்டும் போது கட்சித் தொண்டர்களுக்கும், வாக்களித்து, வெற்றி பெற வைத்த மதுரை (மத்திய) தொகுதி வாக்காளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்…

எனது தாத்தாவும், தந்தையாரும் பொது வாழ்க்கையிலிருந்த சுமார் ஒரு நூற்றாண்டில் ஒரு பாரம்பரியத்தை நிலைநாட்டினார்கள். கொள்கைக்கும், பொதுப்பணிக்கும் மட்டுமே அரசியலில் ஈடுபாடு, அந்த அரசியலில் விதிமுறைகளுக்குட்பட்டே செயல்பாடு,….

ஜாதி, மதம், கட்சி வேறுபாடின்றி எல்லோருக்கும் மரியாதை, எல்லோருடனும் நட்பு. அந்த பாரம்பரியத்திற்கு எற்றவகையில் இவ் வகையில் பேசும்போது, எனது அருமை அண்ணன், சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அண்ணன் அவர்கள் கூறியது ‘நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம், எதிரிக் கட்சியாக அல்ல…

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற குறளுக்கேற்ப இத்தகைய குடும்பத்திற்கு வாரிசாகவும், எனது தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பாடாகவும் இருக்கும் நான் இனைற்கும், என்றைக்கும் அவர்களது வழியிலேயே நடைபெறுவதுதான் எனது செய்ந்நன்றியும், சிறப்பு உருவாமாகும் எனக் கருதுகிறேன்…

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என் உரையை தற்போது ஆங்கிலத்தில் தொடர்கிறேன் – ஒரு வகையில் தொழில்நுட்ப விடயங்களை ஆங்கிலத்தில் விவரிப்பது எனக்கு எளிது என்பதாலும், நான் முன்வைக்கும் கருத்துக்களை ஊடகங்கள் துல்லியமாக பிரசுரிக்க வேண்டும் என்பதற்காகவும், இதனை மேற்கொள்கிறேன். அதே வேளையில், மாண்புமிகு முதல்வரின் ஆங்கில புலமையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதையும் நான் நன்கு அறிவேன்.

கன்னி பேச்சு பாரம்பரியங்களுக்கு உட்பட்டு, உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவிலை உள்ளடக்கிய என் மதுரை மத்திய தொகுதி சார்ந்த முக்கிய பிரச்சனைகள் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன். எனினும், என் பேச்சு நிதிநிலை அறிக்கை மீதாக இருக்க வேண்டும் என்பதாலும் அவையின் கவனத்தை முறையின்றி ஈர்க்ககூடாது என்பதாலும், மூன்று முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து என் உரையை மேற்கொள்ள விரும்புகிறேன்,அதனுடன் நான் 8 முக்கிய பிரச்சனைகளை எழுத்து வடிவிலும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன், அதையும் என் பசின் ஓர் பகுதியாக கருத வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

முதலாக, நாங்கள் நெடுநாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மூன்றாவது வைகை குடிநீர் திட்டத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. என் தொகுதியில் உள்ள பல பகுதிகளுக்கு போதிய குடிநீர் வசதிகள் இல்லாததால், அதனை உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.

இரண்டாவதாக, நிதிநிலை அறிக்கையில் வைகை ஆற்றை (நொய்யல் ஆற்றுடன் சேர்த்து) புதுப்பிக்கும் திட்டம் 24.58 கோடி ரூபாயில் செயல்படுதப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதி வைகை ஆற்றுக்கு கூட பத்தாது எனும் நிலையில் நொய்யல் ஆற்றுக்கும் சேர்த்து எப்படி போதுமானதாக இருக்கும் எனும் சந்தேகம் எழுகிறது. இருப்பினும், புதுபிக்கும் பணிகளை தொடங்கும் முன் ஆற்றுபடுக்கையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அதன் பின்னர் முழுமையாக தூர் வார வேண்டும். இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட வேண்டும். மேலும், இந்த திட்டத்தினை கொண்டு அனுப்பனடி மற்றும் கிருதுமால் கால்வாய்களை தூர்வாரி அவை வெள்ள நீர் வடிகால்களாக மீண்டும் செயல்படும் வகையில் புதுபிக்க வேண்டும்.

மூன்றாவதாக, முழுமையான ஒரு போக்குவரத்து ஆய்வை மேற்கொண்டு எவ்வகையில் தற்போது உள்ள சாலை வழித்தடங்களை சீரமைத்து எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு மேம்படுத்த முடியும் என தீர்மானிக்க வேண்டும். 2000 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை மாநகரில் தொலைதூர திட்டங்கள் இன்றி போக்குவரத்து இன்னல்களை சீர் செய்ய முடியாது. சென்னை மெட்ரோ போல மதுரையிலும் அமைத்து பல ப்ருச்செல்ஸ், காப்பேன் ஹகேன், முனிச் மற்றும் ரோம் போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல வாகனங்கள் இல்லா இடங்களை நிர்ணயிக்க வேண்டும்.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்கனவே அளவுமீறி உள்ளதால், அது மேலும் மோசமடையும் முன்னரே இந்த ஆய்வை மேற்கொள்ள தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி அதனை செயல்படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என் எல்லா கோரிக்கைகளையும் ஒன்றுபடுத்தி தமிழக முதல்வரின் Vision 2023 ஆவணத்தில் குறிபிட்டுள்ளது போல உலகின் தலைசிறந்த 10 நகரங்களில் ஒன்றாக மதுரையை மேம்படுத்த வேண்டும் ஒரே கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

தற்பொழுது, மாண்புமிகு நிதி அமைச்சர் கடந்த ஜூலை 21, வியாழன் அன்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையின் மீது நம் கவனத்தை செலுத்துவோம். சுயமரியாதை இயக்கத்தின் வழிதோன்றல்கள் எனும் வகையில் ஆளும் அரசிற்கும் எதிர் கட்சிக்கும்கொள்கை அளவிலோ மக்கள் நல திட்டங்களின் மீதோ பெரும் அளவில் விவாதங்கள் ஏதும் இருக்காது. இருந்தும் நிதிநிலை அறிக்கையில் உள்ள சில குறைபாடுகளை தங்கள் முன்வைக்கிறேன்

1. சமீபத்தில் ஏற்பட்டுள்ள ஒரு இயலாமையாக, முக்கியமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநிலத்தின் மொத்த வரி வருவாய் அரசின் நிதிநிலை மதிப்பீடுகளில் இருந்து மிகவும் மாறுபட்டுள்ளது, மாநிலத்தின் சொந்த வரியில்ல வருவாய் மற்றும் மத்திய அரசின் பங்கீடுகள் மிகவும் துல்லியமாக அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2. மாநிலத்தின் மொத்த வரி வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உற்பத்தியை மந்தம் அடைய செய்துள்ளது

3. உண்மையில், மாநிலத்தின் செலவினம் வளர்ச்சி விகிதத்தையும் வருவாயையும் விட அதீதமாக உள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது வருவாய் பற்றாக்குறை 10% மேலாக உள்ளதற்கு இதுவே காரணம்

4. நிதி பற்றாக்குறை வரும் ஆண்டில் 2.96% ஆக இருக்கும் என மதிபிடப்படுள்ளது. இது நிதி பொறுப்பு நிர்ணயித்த 3%க்கு மிகவும் அருகே உள்ளது. ஆனால் இந்த மதிப்பீடுகளை நாம் அடுத்த ஆண்டு மீறுவோம் என்றே எதிர்கால மதிப்பீடுகள் எடுத்து காட்டுகின்றன

5. ஏப்ரல் 1 2014 முதல் மாநிலத்தின் மொத்த கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது மிகவும் வேதனைக்குரியது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் மாண்புமிகு உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்…

திரு. பழனிவேல் தியாகராஜன்: மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, நான் பல நாடுகளில் பல அதிசயங்களைப் பார்த்திருக்கிறேன். இதுவரை கண்ணிப் பேச்சு பேசுகிற எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுங்கட்சி உறுப்பினர் Clarification கேட்கிற அளவிற்கு நாள் இதுவரையிலும் பார்த்ததில்லை. சரி, ஏதோ, எனக்கு ஒரு நம்பிக்கை, மாண்புமிகு முதலமைச்சருக்கு எல்லா மொழிகளும் தெரியும், எல்லா கருத்துகளும், தெரியும், அதனால் அவர்கள் இந்த அவைக் குறிப்பைப் படிக்கும்போது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துபோகும். நான் சொன்ன Point-க்கும், நாள் கேட்ட Clarification-க்கும் சம்பந்தம் இல்லாமல் பேசியிருப்பது அவர்களுக்கத் தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) அவர்களுக்கு அவ்வளவு ஞானம் இருக்கிறது. சரி. (மேசையைத் தட்டும் ஒலி) எனக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான நேரத்தில் என்னால் இரண்டு விஷயங்களை விரிவாக எடுத்துரைக்க முடியும். நான் ஒருசார்பான நிலையை எடுத்து பேசவில்லை...

நான் மூன்று நிமிடங்களுக்குப் பேசியிருக்கிறேன். எங்களுடைய குடும்பப் பாரம்பரியம் என்ன? நான் யார்மேலும் குற்றச்சாட்டு சொல்ல வரவில்லை. நான் வெறும் கணக்கை எடுத்துச் சொல்வதற்கு வந்திருக்கிறேன். என்று சொல்கிறேன். என்னையே இந்தமாதிரி நீங்கள் பேச விடவில்லையென்றால் எப்படி சார் இந்த சபை நடக்கிறது?

 தொடர்ச்சியாக நம் வருவாயின் ஒரு பெரும் பகுதியை தொடர்ந்து, 11% முதல் 14% வரை ஏறிக்கொண்டே போகும் வட்டியை செலுத்துவதில் செலவழித்து வருகிறோம். Vision 2023 கூறப்பட்டதற்கு நேர் மார்க்க முதலீடுகளில் நாம் செலவிடும் பங்கு வருவாய் செலவினத்தை விடவும் மிகவும் குறைந்து உள்ளது. ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் மாநில வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்வதாக ஒதுக்கப்படும் நிதியை அரசு தொடர்ந்து கைவிட்டு வருகிறது. அதாவது முதலீடு செய்யபோவதாக சொன்ன பணத்திற்கும் முதலீடு செய்யப்பட்ட பணத்தை விடவும் அதிகமாக உள்ளது. கடைசியாக, ஆனால் முக்கியமாக 2016-2017ம் ஆண்டு கணக்குகளில் சில முரண்பாடுகள் உள்ளன... (குறுக்கீடு)

 மாநில நிதிநிலை அறிக்கையின் மீதான ஒரு எளிதான ஆய்வு ஒன்று என்னிடம் உள்ளது. ஒரு எக்ஸ்செல் அவானத்தில் கடந்த 6 வருட நிதிநிலை அறிக்கைகளை சேகரித்துள்ளேன். அந்த கணக்குகளின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்து அவற்றை என் பேச்சின் ஒரு அங்கமாக வைக்கும்படி கேட்டுகொள்கிறேன். இந்த கணக்குகள் ஒரு தெளிவான சேதியை நமக்கு சொல்கின்றன. முதல் மூன்று அண்டுகளுக்கு மிகுந்த நிதி பொறுப்புடன் செயல்பட்ட இந்த அரசாங்கம், கடந்த இரு ஆண்டுகளாக ஏனோதானோ என்று செயல்படுவதால் வருவாய் பட்ற்றக்குறை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. நிதிநிலை அறிக்கை கூறுவது யாதெனில் மாநில செலவினங்களை மாநில வருவாயை கொண்டு சமாளிப்போம் என்பது. ஆனால் ஏற்கனவே என் சக உறுப்பினர் குறிப்பிட்டதை போல வரியிலிருந்து கிடைக்க பெரும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 20% வீழ்ச்சியை கண்டுள்ளது. இது 2011-12., 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டுகளில் இதே ஆட்சி அரசாங்கம் இருந்த பொழுது ஏற்படவில்லை. அப்பொழுது மதிப்பீடுகளை சரியாக மேற்கொள்ள முடிந்த இதே அரசாங்கத்தால் தற்போது என் மேற்கொள்ள முடியவில்லை? (குறுக்கீடு)

 திரு.பழனிவேல் தியாகராஜன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய native place தேனியிலிருந்து வரும் நிதியமைச்சர் அவர்கள் என் குடும்பத்திற்கு வேண்டியவர். எனக்கு அவர்மேல் எந்தக் குறையும் இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் கேட்கிற கேள்விக்கும், அவர் சொல்கிற பதிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. State revenue drop ஆகிறது என்று நான் சொல்லவே இல்லை. நான் என்ன சொன்னேன் என்றால், 2015-2016 Budget-ல் Present செய்த number-க்கும், வந்த number-க்கும் 20 குறையாது என்று நான் சொல்லவில்லை, Overall number குறைந்தது என்று நான் சொல்லவில்லை. Overall number increase ஆகியிருக்கிறது என்று சொல்கிறேன். நான் என்ன சொன்னேன். Revenue Increase ஆகிறதோடு செலவும் அதிகமாகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். நான் அரசியல்வாதி என்ற விதத்தில் பேசவில்லை. நான் கணக்கு போட்டிருக்கிறேன். 234 பேரும் ஒரே கட்சியாக இருந்தாலும், கணக்கு கணக்குதான். நீங்கள் கணக்கை மாற்றிவிட முடியாது. நான் இதுவரைக்கும் எந்தத் தவறையும் சொல்லவில்லை. கணக்கை நான் சொல்லியிருக்கிறேன். யாருக்கெல்லாம் படிக்கத் தெரியுமோ, கணக்கு போடத் தெரியுமோ அதெல்லாம் உண்மைதான். அதெல்லாம் மாற்ற முடியாது. (மேசையைத் தட்டும் ஒலி) நான் எதையுமே தவறாகச் சொல்லவில்லை. ஒரெயொரு குறள் சொல்கிறேன்.

ஆகாறு அளவிட்டி தாயனுங் கேடில்லை

இந்த வழியில் நான் வேறு எந்தத் தவறும் சொல்லாமல் சொல்கிறேன். இப்போது ரூபாய் 2 இலட்சத்து 52 ஆயிரத்து சொச்சம் கோடி கடன் வைத்திருக்கிறோம்.

7.2 கோடி மக்கள் உள்ள நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 35.000 ரூபாய் கடன் உள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை 15.000 ரூபாயாக இருந்தது. நான் கடன் என்பதே தவறான ஒரு விஷயம் என்று கூறவில்லை. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் கடனின் பங்கு முக்கியம். தவறு எங்குள்ளது என்றால் நாம் இதைக்கொண்டு வட்டியை செலுத்துகிறோமே தவிர முதலீடுகள் செய்வதில்லை. மாநிலத்தின் நிதிநிலை அறிக்கைகள் 2015-2016 என்ற ஒரு அறிக்கையை நான் அவைக்குறிப்பில் வைக்க விரும்புகிறேன். இதில் நம் மாநிலத்தை குறித்தான பல நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் மிகவும் தெளிவாக யத்தில் சொல்லபடுவது என்னவெனில், “பொருளாதார விதிகளுக்கு உட்பட்டு, மாநில வருவாயினை முதலீடுகளில் அதிகம் செலவழிக்காமல் வட்டி செலுத்த அதிகமாக செலவழிக்கும் மாநிலத்தின் வளர்ச்சி குன்றும் என்பதே”. என் கவலை என்னவெனில், நாம் ஒருகாலத்தில் இந்த இரண்டு பிரச்சனைகள் இல்லாத மாநிலமாக இருந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் நாம் இந்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை அசாதரணமான சந்தர்ப்பங்கள் என்பது எனக்கு புரிகிறது. உலகப் பொருளாதராம் மந்த நிலையில் உள்ளது. ஆனால், நான் பணிபுரிந்த லெஹ்மான் குழுமம் திவால் ஆன 2008-2009ம் ஆண்டு இருந்த உலகப் பொருளாதார நெருக்கடியை விட தற்போதைய நிலை தீவிரமானது அல்ல. இதை நாம் இப்போதே சீர் செய்யாமல் விட்டால் நாம் நம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய கடனை விட்டு செல்லும் அபாயம் உள்ளது. நான் பல விழயங்களை கூற விரும்பினேன் பேரவைத்தலைவர் அவர்களே. திராவிட அரசியலின் பாரம்பரியம் உட்பட பல விஷயங்கள். ஆனால் ஆளும் அரசுக்கு நான் பேசுவது பிடிக்கவில்லை. எனவே நான் பல கருத்துக்களை முன்வைக்காமல் விட்டுவிடுகிறேன். பலரால் இலவசங்கள் என விமர்சிக்கப்படும் முதல்வரின் பல மக்கள் நல திட்டங்கள் குறித்தும் பேச நினைத்தேன். அவை உண்மையில் வளர்ச்சி திட்டங்களே. நான் சொல்ல வருவதை எல்லாம் நிராகரித்து குறுக்கீடு செய்ய முற்பட்டால் நான் இந்த ஒரேயொரு கருத்துடன் முடித்து கொள்கிறேன். ஒரே நாளில் பல முறை இந்த அரசு 32 ஆண்டுகள் கழித்து எப்படிதொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சி அமைத்தது என்பதை நாம் இங்கே கேட்கமுடிகிறது. அது உண்மை. உது உண்மை என்பதால் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க தேவையில்லை. நம் அனைவருக்கும் அந்த உண்மை புரியும். ஒரு அரசாங்கம்   தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியில் இருப்பது எப்பேர்பட்ட பாக்கியம் என்பது  நமக்கு தெரியும், இல்லையெனில் ஐந்தாண்டுக்கு இருமுறை வரும் தேர்தல்களை மனதில் கொண்டே திட்டங்களை வகுக்கிறோம். நான் இங்கு பத்தாண்டுகள் இருக்கபோகிறேன் என்று கூறக்கூடிய பாக்கியம் உங்களுக்கு உள்ளது. தைரியமான பல முடிவுகளை எடுக்க கூடிய இடத்தில உள்ளீர்கள். எனவே மாண்புமிகு முதல்வரை மக்கள் அவருக்கு வழங்கிய இந்த அரிய வாய்ப்பினை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி எது நல்லது என்பதை தீர்மானித்து கடன்சுமையை குறைத்து, இந்த பிரச்சனைகள் மேலும் தீவிரம் அடையா வண்ணம்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

 தொலைநோக்கு பார்வை உடைய தலைவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்கள் தற்போது என்ன நினைகிறார்கள் என்பதோடு நில்லாமல் எதிர்கால சந்ததிகள் அவர்களை குறித்தும் அவர்கள் திட்டங்கள் குறித்தும் எப்படி பார்ப்பார்கள் என்பதையும் நினைக்க வேண்டும்

 மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, உறுப்பினர்களே இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

எனது தொகுதி கோரிக்கைகளை தங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவற்றை நடவடிக்கைக் குறிப்புகளில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் சமீப காலமாக குடிதண்ணீருடன் சாக்கடை கலந்து வருகிறது. இதனால், மஞ்சள் காமாலையும், காய்ச்சலும் வந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலப்பதைத் தடை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மதுரையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அங்குள்ள பெரிய கண்மாய்களான வண்டியூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய், செல்லூர் கண்மாய் போன்ற கண்மாய்களை ஆழப்படுத்தி, வருடம் முழுவதும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

மதுரையில் டி.வி.எஸ். நகர், பழங்காநத்தம் மற்றும் வெங்கடாசலபுரம் பி.பி. ரோட்டில் இணைப்புப் பாலப் பணிகள் 2009 –ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, பாலத்தின் இரு பகுதிகளிலுள்ள பணிகள் முடிவடைந்தன. இதர பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்படி பணிகளை உடனே தொடர்ந்து அந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மற்றும் கோவையிலுள்ள கூட்டமைப்புகளின் சந்திப்புக் கூட்டங்கள் போல, மதுரையில் சந்திப்புக் கூட்டங்கள் நடத்திட, போதுமான வாகன நிறுத்தம் வசதியுடன் ••••••••••••• அமைப்பு போல ஓர் அமைப்பை மதுரை நகரில் ஏற்படுத்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை நகரில், 4,5 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலிருக்கும் அருள்தாஸ்புரம், நேரு நகர், அபிமன்னார் சந்து, திடீர் நகர், விவேகானந்தர் ரோடு ஆகிய இடங்களிலுள்ள சமுதாயக் கூடங்களை பழுது பார்த்து, பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மதுரையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள கோரிப்பாளையம் தேவர்சிலைப் பகுதியிலும், காளவாசல் பகுதியிலும் மேம்பாலங்கள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை நகரில் கடந்த 4,5 ஆண்டுகளாக மக்கள் பெருக்கம் மிகுந்த குறுக்குச் சாலைகள் பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, மேற்படி அனைத்து சாலைகளையும் முழுமையாகத் தோண்டி  எடுத்துவிட்டு, சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள துணை கோள் நகரத்தினை (Satellite City) மதுரையில் விரைவில் அமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள் மாண்புமிகு உறுப்பினர் திரு.பழனிவேல் தியாகராஜன், என்ன சொல்லுங்கள்.

 திரு. பழனிவேல் தியாகராஜன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு விளக்கத்தை அளிக்கிறேன். ஊதியங்கள் மற்றும் ஓயுவூதியங்கள் மீதான செலவினம் 55%இலிருந்து 60% அக உயர்ந்துள்ளது. ஆனால் மானியங்கள் மீதான செலவினம் 130% உயர்ந்துள்ளது. எனவே, அதீத செலவினங்களுக்கான காரணம் ஊதியங்கள் மற்றும் ஓயுவூதியங்கள் என்பதை ஏற்க இயலாது.

 திரு. பழனிவேல் தியாகராஜன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ஒரு மணிநேரத்திற்கு முன், மாண்புமிகு நிதி அமைச்சர்  அவர்கள் 7-வது Pay Commission-க்கு இதுவரை குழுவே அமைக்கவில்லை, எப்படி நிதியை ஒதுக்க முடியும் என்று கூறினார். பின் வரிசையில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் சொல்கிறார். ஏற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்று, எது உண்மை என்பதை சொல்ல சொல்லுங்கள் (குறுக்கீடுகள்)…

 Articles Year Wise: