தமிழக வங்கிகளில் உள்ளவர்கள் நன்கு தமிழ் அறிந்திருக்க வேண்டும்.."நிதி அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

Published Date: January 24, 2022

CATEGORY: GOVERNANCE

சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் இன்று நிதியமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் 2022-23 ஆண்டின் பட்ஜெட்டிற்காகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் தலைமையில் இன்று (24-01-2022) தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, நிதி அமைச்சர் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தினார்.

 

 

 

2024 தேர்தல்.. எதிர்கட்சிகள் இதை பண்ணலைனா.. பாஜக ரிப்பீட்டு! ஐடியாக்களை அள்ளி வீசிய பிரசாந்த் கிஷோர்

 

வங்கி வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், குறிப்பாக வன மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வங்கி வசதிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். முதல் முறையாக, வரும் 2022-23 ஆம் நிதியாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Media: tamil.oneindia.com