/

ஒரு தேசம் ஒரே தேர்தல்: கட்சிகளின் செலவை குறைக்க எதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை குலைக்க வேண்டும்?

Published Date: June 24, 2019

ஒரு தேசம் ஒரே தேர்தல்: கட்சிகளின் செலவை குறைக்க எதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை குலைக்க வேண்டும்?

மோடி2.0 அதிகாரத்திற்கு வந்த உடனேயே அதன் ரெட்டை வேஷம் மிகத் துரிதமாக வெளிப்படத் தொடங்கி விட்டது. பிரதமரின் மகத்தான நயமிக்க உரைக்குப் பின்னர் பாஜக அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது கூச்சலிடுவது, முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யதது, விசாரணைக்கு உள்ளாகியுள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பாஜகவுடன் இணைந்தது மற்றும் ஒரே தேசம் ஒரே தேர்தலுக்கான முழக்கத்திற்கு புத்துயிர் வழங்கப்படுவது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.

பதவிப்பிரமாணத்தின் போது நடைபெற்ற மதசார்பின்மைக்கும், பாராளுமன்ற ஒழுங்கிற்கும் எதிரான சம்பவங்கள், அரசியலமைப்பு வழங்கிய சமத்துவத்திற்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவில் இடம்பெற்றுள்ள தண்டனை வழங்கும் சட்ட விதிகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஒரே தேசம் ஒரே தேர்தல் என்னும் முன்மொழிவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது கூட்டாட்சி தத்துவம் என்னும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு கோட்பாட்டை முற்றிலும் மீறுவதாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த அமைப்பு ரீதியாக மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களான பலரும் எடுத்துரைத்தது

1) ஒருங்கிணைவற்ற மத்திய, மாநில அரசுகளின் ஐந்து ஆண்டு ஆட்சிக்கால வரையறைகளை எப்படி ஒருங்கிணைப்பது?(மத்திய மற்றும் மாநில அளவில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தற்போது ஆட்சியில் உள்ள பல்வேறு மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும், தற்பொழுதுள்ள அரசியலமைப்பு விதிகளின் கீழ் இதை எவ்வாறு செய்வது)

2) அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பான்மையை ஆளும் அரசு இழந்துவிட்டால் ஆட்சியை எவ்வாறு நிர்வகிப்பது?( மீதமுள்ள காலத்திற்கு புதிய அரசை தேர்ந்தெடுக்க மறுதேர்தல் வைப்பதா அல்லது பெரும்பான்மை இழந்த, எண்ணிக்கை குறைவால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாத ஆட்சியையே தொடர விடுவதா) போன்றவையாகும்.

தேர்தல் செலவுகளை குறைப்பதற்காக என்ற வாதம் ஏன் வலுவற்றதாகிறது?

இந்த வாதத்தை சில உண்மைத் தகவல்களைக் கொண்டு எளிய பகுப்பாய்வு செய்வதன் மூலமாகவே நிராகரிக்கலாம். மாநில தேர்தலை நடத்துவதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூபாய் 1 கோடி(சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் குறிப்பிடப்பட்டது), அல்லது அனைத்து மாநிலங்களையும் சேர்த்து ஐந்தாண்டிற்கு 4150 கோடி முதல் ரூபாய் 5500கோடி வரை செலவாகலாம். இது ஒரு பெரிய தொகைதான் எனினும் அனைத்து மாநிலங்களில் நிதிநிலை அறிக்கையில் ஒப்பிடுகையில் இது மிக குறைவான தொகையாகும்.

உதாரணமாக தமிழ் நாட்டை எடுத்துக் கொள்வோம் இங்கு 234 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் எனவே ரூபாய் 250 கோடி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த செலவாகும் என்று அனுமானிக்கலாம். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் தேர்தல் என்னும் முக்கியமான செயல்முறைக்கான செலவை 5 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், அதாவது குறைத்து மதிப்பிட்டால் கூட நடப்பிலுள்ள பதினைந்தாவது சட்டமன்றத்தின் பட்ஜெட் தொகை ரூபாய் 13 லட்சம் கோடி எனலாம். அல்லது ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகின்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2.50 கோடி மொத்தத்தில் ரூபாய் 2925 கோடி(பட்ஜெட்டில் 0.23%) இத்துடன் தேர்தல் செலவை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

இந்தக் கணக்கை இப்படியும் புரிந்து கொள்ளலாம் அதாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான செலவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படும் மாநில பட்ஜெட்டில் மொத்த தொகையில் 0.02% மட்டுமே, அதுபோல உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளில் வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் 8% மட்டுமே. எனவே செலவு குறித்த வாதங்கள் இத்துடன் அடிப்படையற்றதாகிறது.

அதே சமயத்தில் ஒருபுறம் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆயிரம் ஆயிரம் கோடிகளை சிலை வைப்பது, விளம்பரம் செய்வது போன்ற கேள்விக்குரிய வகைகளில் மிகப் பெரிய தொகைகளை செலவு செய்வதும், மறுபுறம் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட தொகையை திட்டமிட்ட வகையில் பயன்படுத்த இயலாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படாமலேயே நிலுவையில் உள்ளது உதாரணமாக 2016இல் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையின்படி கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள கூடுதல் வரி (cess) ரூபாய்130000 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைமுறையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கான செலவை பகுத்துக் கணக்கிட்டாள் ஒற்றை தேர்தல் முறையின் மூலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கான தொகையை சேமிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில் தேர்தல் ஆணையம் மிகச் சிறிய அளவிலேயே முழு நேர ஊழியர்களை கொண்டுள்ளது. பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்திற்கான தேர்தல் அதிகாரியாக பணியாற்றுவது, உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்களை வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வைப்பது போன்ற பதவி சார் அல்லது கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்ட பணியாளர்களையே நம்பியுள்ளது. அடுத்ததாக ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் தற்போது உள்ள அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு தேவைப்படும் அதற்கான செலவுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்ள மின்னணு வாக்கு எந்திரங்களைக் கொண்டு இரண்டு வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடத்துவது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே தற்பொழுதுள்ள தேர்தல் முறையில் நிலையான மற்றும் மாறும் செலவினங்கள் உடன் ஒப்பிடுகையில் செலவினங்கள் குறைப்பை காரணம் காட்டி ஒரே தேசம் ஒரே தேர்தல் முறைக்கு நகர்வது எந்த நற்பலனையும் விளைவிக்கப் போவதில்லை.

ஏன் தேர்தலுக்கு நாம் மிகுதியாக செலவழிக்க வேண்டும்?

பொது சொத்தை வீண் விரயம் செய்யாது கட்டுப்படுத்துவது இன்னும் காரணம் மட்டுமே ஒரே தேசம் ஒரே தேர்தல் முறைக்கு நியாயம் கற்பித்துவிடாது. ஆம் இந்த தேர்தல் முறை அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை குறைக்கும், ஆனால் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை அரசியல் கட்சிகளில் செலவுகளை குறைப்பதற்காக மீறுவது என்பது ஒருவனின் கையை கட்டிவிட்டு மரமேறச் சொல்வது போல முற்றிலும் பொருத்தமற்ற காரியமாகும்.

ஒரு வேட்பாளராக தேர்தலில் பங்கேற்றவன் என்ற முறையிலும், எங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராக எனது அவதானிப்புகளை கொண்டும் ஜனநாயகத்தை உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு நாம் மேலும் செலவுகளை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்க வேண்டியதில்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.

நமது தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன வாக்காளர் பட்டியலில் பிழையான உள்ளீடு மற்றும் விடுபட்டு போதல் எனும் சிக்கலில் இருந்து அதை தொடங்கலாம். தவறான வாக்காளர் சேர்க்கைக்கு 2017 இல் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தவிர வேறு சிறந்த உதாரணம் இல்லை, அந்த சமயத்தில் மாநில தேர்தல் ஆணையம் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியில் 2017 ஏப்ரல் முதல் அதே ஆண்டு டிசம்பர் மதங்களுக்கிடையே இரண்டு கட்டமாக கிட்டத்தட்ட 47000திற்கும் மேலான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

அதன் பின்னர் பட்டியலை ஆராய்ந்து பார்க்கையில் அப்பொழுதும் பலநூறு போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர் இதற்கு தீர்வு காண தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் இந்த பிரச்சனையை கொண்டு சென்றோம். கொதிப்படையச் செய்யும் செய்தி என்னவென்றால் ஒரே ஒரு வாக்காளர் அட்டை ஆறு முறை, ஐந்து வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடி செல்லும் அனுபவம் பெற்றவர்கள் அனைவருக்கும் பிற சிக்கல்கள் என்னவென்று புரிந்திருக்கும். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளோ, வேட்பாளர்களின் முகவர்ககளோ மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோளாறுகள் போன்ற கவனக்குறைவினால் ஏற்படும் பிரச்சினைகளாலும் தேர்தல் தடைப்படும் சூழலை கையாள்வதற்கு சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகள் வேட்பாளர்களின் முகவர்கள் இடம் 17C(பதிவான வாக்குகளில் இறுதி எண்ணிக்கையை வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அறிவிப்பதற்கான) படிவத்தில் எந்த தகவல்களும் நிரப்பப்படாமலேயே கையெழுத்தை பெறுவதைக் காணலாம்.

தேர்தல் நடைமுறையில் பல்வேறு நிலைகளில் தேர்தல் ஆணையம் வெளியிடும் வெவ்வேறு அதிகாரபூர்வ பட்டியலிலேயே பெரிய அளவில் முரண்பாடுகள் காணப்படுகின்றன . சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட 17C படிவத்தில் உள்ள மொத்த வாக்குகள் எண்ணிக்கைக்கும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுப்பில் (summary sheet) வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல சமயங்களில் இந்த வேறுபாடுகள் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும் ஆனால் சில சமயங்களில் பல நூறு ஓட்டுகள் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. நல்வாய்ப்பாக எங்களது எம்பி க்கள் வாக்கு எண்ணிக்கைக்கும் முன்னதாகவே பெரிய அளவில் இருந்த மாறுபாடுகளை கண்டறிந்து சரி செய்துவிட்டனர் - குளறுபடிகளுக்கு பெரும்பாலும் தட்டச்சுப் பிழை அல்லது கணக்குப் பிழை என்ற காரணங்களே சொல்லப்பட்டது.

அனைத்தையும் விட மோசமாக ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் 17C படிவத்தின் மூலமாக பெற்ற வாக்குச்சாவடி அளவிலான தகவல்களுக்கும் , வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வாக்குச்சாவடி வாரியாக கணக்கிடப்படும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு பெரிய அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் எண்ணப்படு, பதிவான வாக்குகளை விட எனப்படும் வாக்குகள் குறைவது போன்ற இரு வைகளில் பிழைகள் ஏற்படுகின்றன.

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமான சிக்கல்கள் என்று விளக்கம் அளிக்கப்படும் இந்த முறைகேடுகளுக்கு பின்னால் ஏதோ சதி வேலை உள்ளதாக நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால் வாக்குச்சாவடி அளவில் எண்ணப்படுகின்ற வாக்குகளிலேயே எண்ணிக்கையில் தொடர்ச்சியாக குளறுபடிகள் காணப்படுவது இந்த முறையை மேம்படுத்த பல மற்றங்களுக்கான தேவையை உணர்த்துகிறது. கூடுதல் நீதி மற்றும் மனிதவளத்தை முதலீடு செய்யாமல் எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க இயலாது.

எனவே இந்த புனிதமான ஜனநாயக செயல்முறை மேலும் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் சிறப்பாக செயல்பட தேர்தலுக்கு நாம் மென்மேலும் செலவிட வேண்டும்.

 

Source : TheNewsMinute

 

 Articles Year Wise: