/

செயல்திறன் மிக்க, சக்திவாய்ந்த ஓர் ஒன்றிய அரசாங்கத்திற்கான தேவை நிச்சயமாக உள்ளது… ஆனால் டெல்லியில் இருந்துகொண்டு எந்த பள்ளிக்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்பதை அதனால் தீர்மானிக்க முடியாது. பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன்

Published Date: August 16, 2021

எம்ஐடியில் உள்ள ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் இருந்து எம்.பி.ஏ. பட்டம் உட்பட உள்நாட்டிலும், அமெரிக்காவிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டங்கள் பெற்ற திரு  தியாகராஜன் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டார்.

"மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு " என்று ஜிஎஸ்டி கவுன்சிலை சாடுகிறார் திரு தியாகராஜன். தரவுகளின் பற்றாக்குறை நிர்வாகத்தை எவ்வகையில் தடுக்கிறது என்பதை விளக்குகிறார். ஜக்கி வாசுதேவ் மேல் அவர் வைக்கும் குற்றசாட்டுகள்,கருத்து மோதல்கள், திமுகவின் கூட்டாட்சி கொள்கை ஆகியவற்றையும் இந்த பேட்டியில் விளக்குகிறார். இந்த பேட்டியை மேற்பார்வை செய்தவர்  நிர்வாக ஆசிரியர் (தேசிய விவகாரங்கள்) பி வைத்தியநாதன் ஐயர் அவர்கள்.

பி வைத்யநாதன் ஐயர்: மே மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் தங்களின்  உரையில், GST அமைப்பை ரப்பர் ஸ்டாம்ப் கவுன்சில் என்று விவரித்தீர்கள். ஒன்றிய அரசிடம் தீவிரமாக  அதிகாரங்கள் குவிந்திருப்பதை  பற்றியும் பேசினீர்கள். நீண்டகால மந்தநிலை காரணமாக அரசாங்க நிதி மோசமடைந்ததால்  மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இதில் மூன்று-நான்கு அம்சங்கள் உள்ளன. முதலாவது ஒன்றிய -மாநில அரசுகளின் உறவு, எல்லா உறவுகளை போலவே, காலப்போக்கில் சிதைந்துவிடும். மேலும் பல அழுத்தங்களின் உருவாகும்போது இந்த விரிசல்கள் இன்னும் அதிகரிக்கின்றன. எனவே, சீரழிந்து வரும் பொருளாதாரம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் ஏற்பட்ட  நெருக்கடி  இந்த உறவை மேலும் சிதைத்துள்ளன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி ஆக்கியுள்ளது. இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், எனது மேற்கோள்களை நியாயப்படுத்த நான் மிகுந்த சிரமம் எடுக்க தேவையில்லை - குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடந்த நரேந்திர மோடியின் ஆட்சியை கவனித்தால் போதும். மாநிலங்களுடன் நிதி உறவின் அடிப்படையில் இப்போது  ஒன்றிய அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் முதல்வராக இருந்தபோது வெளிவந்த  அறிக்கைகளுக்கு (அவர் கூறிய கருத்துக்கள்)  நேர்மாறாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஜிஎஸ்டி கவுன்சிலின் கேள்வி மிகவும் நுணுக்கமானது. கட்டமைப்பு ஏற்படுத்தும் முன் சரியான முறையில் சிந்திக்காமல் விட்டுவிட்டார்கள். திடீரென நான்கு மணிநேர அவகாசத்துடன் அறிவிக்கப்பட்ட  ஊரடங்கு, இரவோடு இரவாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதை நிறைவேற்றுவதில் காட்டப்பட்ட அவசரம் என நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவசர கோலத்தில் ஜிஎஸ்டி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்னும் அதை புரிந்துகொள்ள பலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். நான்கரை வருடங்களுக்குப் பிறகும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ...

இந்த நான்கு மாதங்களில் என்னுடைய புரிதலின் படி, ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைகள் வழங்குவதற்காக மட்டுமே அமைக்க பட்டுள்ளது  என்று கூறுவேன் . எந்த முடிவை இந்த அமைப்பு எடுத்தாலும்  அது நடைமுறைக்கு வர, மாநில அரசு ஒரு அரசாணையை நிறைவேற்ற வேண்டும் அல்லது அதன் சொந்த வணிக வரி விதிகளில் மாற்றங்களைச் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

என் கருத்துப்படி, மத்திய-மாநில உறவுகளில் சிதைவு  ஏற்பட்டுள்ளது. அதில் நிறைய தவறுகள் தவிர்க்கப்படக்கூடியவை. நாட்டை உண்மையில் பாதிக்கும்  விஷயம் என்னவென்றால், அதிகாரத்தின் குவியல்  அதை பயன்படுத்த விரும்பாத அல்லது பயன்படுத்தத் தெரியாத ஆட்களின் கைகளுக்கு செல்வதுதான். அவர்கள் மற்றவர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், பின்னர் அந்த அதிகாரத்தை சரியாக  பயன்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதற்கு மேலும் ஒரு  சான்றாகிறது 

பி வைத்யநாதன் ஐயர்: மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நம்பிக்கை முறிவு பற்றி நீங்கள் பேசியுள்ளீர்கள். இது நிதி கூட்டாட்சிக்கு மட்டுமே தொடர்புடையதா அல்லது வேறு முக்கிய காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

நான் உங்களுக்கு இரண்டு உறுதியான உதாரணங்களை தருகிறேன். முதல் தவறு , அதிகாரப் பரவலை 32% லிருந்து 42% ஆக மாற்றியது  மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது போல் செய்யும்  பாசாங்கு செயல் ஆகும் (பிரிக்கக்கூடிய வரி). எந்தவொரு சுதந்திர அமைப்பையும்  நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அதிகாரப் பகிர்வு என்று அழைக்கப்பட்டாலும்  உண்மையில் அது நடைபெறுவதில்லை. எங்களிடம் பணம் எதுவும் கிடைக்காத அளவுக்கு அவர்கள் பிரிக்க முடியாத செஸ் வரியாக  பணத்தை மாற்றியுள்ளனர். அதன் விளைவு என்னவென்றால், ஒன்றிய அரசின்  மானியங்கள் மூலம் நாம் பெறும் நிதி  வரிகளின் பங்காக நாம் பெறும் நிதியை  விட அதிகமாக உள்ளது. வரிகளின்  பங்காக நாம் அதைப் பெற்றால், எப்படிச் செலவழிக்க வேண்டும் என்று நாமே  சட்டம் இயற்றலாம். ஆனால் இப்போது நடப்பதோ  கூட்டாட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது.

பிறகு ஏன் மத்திய அரசு சட்டத்தில் எழுதப்பட்ட 14% குறைந்தபட்ச இழப்பீட்டுத் திட்டத்தை வைத்திருக்கக்கூடாது என்ற அபத்தமான கருத்தும்  உள்ளது. போதுமான பணம் இல்லாததால் நாங்கள் 14% செலுத்த முடியாது என்றும் , ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்ட செஸ் மட்டுமே இழப்பீடு வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கும் என்றும் கூறினார்கள் . அதே நேரத்தில், சிஏஜி அறிக்கையில்  முதல் இரண்டு ஆண்டுகளில், மாநிலங்களுக்கு செலுத்த வேண்டியதை விட சுமார் 40,000 கோடி ரூபாய் அதிகமாக ஒன்றிய அரசு வசூலித்ததை குறிப்பிடுகிறது. அதை கணக்கில் காட்டாமல் , வரியை பகிர்ந்துகொள்ளாமல் ஒன்றிய அரசு மீண்டும் எடுத்துக்கொண்டது . எனவே செஸ் வரி  எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக ஒன்றிய அரசு அதை பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

பி வைத்தியநாதன் ஐயர்: தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணி  -I அரசாங்கத்தின் ஒரு பகுதியாக முன்பு இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி , பாஜக அல்லது திமுகவின் சொந்த தத்துவத்தில் என்ன மாற்றங்கள் உண்டாகியுள்ளன , எது இந்த இரு கட்சிகளையும் பிரிக்கிறது?

இப்போதைக்கு, பாஜகவுடன் இருக்கும் இடைவெளியை விட திமுகவின் நிலைப்பாட்டிற்கும் ஒன்றிய அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகம் உள்ளது. பாஜகவுடன் மட்டும் எங்களுக்கு பிரச்சனை இல்லை . திமுகவின் நிலை மாறாமல் உள்ளது என்று தான்  சொல்கிறேன். ஒன்றியத்தில்  இருந்து மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மாநிலங்களிலிருந்து அதிகாரத்தின் கீழ்நிலைகளுக்கும்  அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காக நாங்கள் எப்போதும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றுகிறோம். ஆனால் பாஜகவின் நிலை வியத்தகு முறையில் மாறிவிட்டது. குஜராத்தில் இருந்தபோது அதே பிரதமரும் உள்துறை அமைச்சரும் சிறந்த கூட்டாட்சிவாதிகளாக இருந்தனர். இப்போது,  பிரதமர் இந்திரா காந்தியின் நாட்களில் இருந்தது போல  அவர்கள் மிகச்சிறந்த மையவாதிகளாக மாறிவிட்டனர். உணவு கொள்கை முதல் கல்வி வரை வரி, கழிப்பறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். எனவே, பாஜக கட்சி  என்பதை தாண்டி  பாஜகவின் இந்த அரசாங்கம் தான் இப்படி நடந்து கொள்கிறது .

மற்றொரு மட்டத்தில், மதச்சார்பற்ற, சமூக நீதி கட்சிகளின் கருத்து இந்துத்துவா தத்துவத்தால் இயக்கப்படும் கட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் அங்கு கூட, அந்த தத்துவம் நிலையானதாக இல்லை. வாஜ்பாயின் நிர்வாகம் இன்று நாம் காணும் நிர்வாகத்திலிருந்து வேறுபட்டது என்று பெரும்பாலான மக்கள் உணர்வார்கள்.

லிஸ் மேத்யூ: அண்மையில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அமைதியான தோழனாக  இருந்தது. முதல் முயற்சி  எடுத்த மம்தா பானர்ஜி போல , குறைந்தபட்சம் இன்று நீங்கள் எழுப்பிய பிரச்சனைகளிலாவது, அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் திமுக முன்னிலை வகிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

நான் கட்சியில் அனுபவம் கம்மியாக கொண்ட நபர். சில விஷயங்களில், தேசிய அளவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்லும் நிலையில் இல்லை. ஆனாலும், இந்த நாட்டின் எதிர்காலம் பிராந்திய கட்சிகள் மற்றும் மாநில அரசுகளில் உள்ளது என்று நான் கூறுவேன். இந்த நாட்டின் சிக்கல்கள், பன்முகத்தன்மை, 'ஒரு தேசம், ஒரு வரிவிதிப்பு' போன்ற கருத்துக்கள் நடைமுறைக்கு சாத்தியமானவை  அல்ல. அவர்கள்  என்ன செய்தாலும், எத்தனை பேர் குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டு  இறங்கினாலும் அவர்கள் தோல்வியடைவார்கள்.

ஒவ்வொரு நாளும் அது தோல்வியடைவதைப் பார்க்கிறோம். அவர்களே  சென்று கழிவறைகளை கட்ட முடியாது என்பதால் அவர்கள்  ஸ்வச் பாரத் நிதியைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் . தேசியக் கொள்கை என்பதே ஒரு தோல்வியை தழுவும் சிந்தனையாகும் . எத்தனை காலங்களுக்கு பிறகு , எவ்வளவு பிரச்னைகளுக்கு  பிறகு இந்த தோல்வியை ஒப்புக்கொள்ள போகிறார்கள் என்பதே இப்போதிருக்கும்  கேள்வி.

தேசிய கட்சிகள் என்ற கருத்தே , முரண்பாடாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் பாஜக மாட்டிறைச்சிக்கு ஆதரவாக உள்ளது, ஆனால் மாட்டிறைச்சி கொண்டு செல்வது என்ற சந்தேகத்தில் சில பாஜக ஆளும் மாநிலங்களில் ஒருவர்  கொல்லப்படலாம் ... காங்கிரஸ் ஒரு சில இடங்களில் எதிர்க்கட்சியாக உள்ளது ,அனால்  நாங்கள் அனைவரும் இங்கே கூட்டணியில் இருக்கிறோம். எனவே 10-12 மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கலாம், மீதமுள்ள இடங்களில் அவர்கள் மின்சாரம் வாங்குகிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒன்றியத்தை  கட்டுப்படுத்துகிறார்கள், அல்லது மக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் ... நான் எங்கள்  கட்சித் தலைவரிடமும் சொன்னேன், நல்ல நிர்வாகம் எப்படி இருக்கிறது, என்ன தரவு என்பதை நாங்கள் காட்டலாம் உங்கள் தத்துவத்தால் உந்தப்பட்ட செயல்கள் போல, வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை வைத்துக்கொண்டு நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம், அளவில்லா அதிகாரத்தை வைத்து கொண்டு சிலர் மோசமாக செயல்படுகின்றனர் . எங்கள் மாண்புமிகு முதல்வர். (மு.க.ஸ்டாலின்) அவரது கொள்கைகளில்  தெளிவாக இருக்கிறார் ...

ஆஞ்சல்  இதழ்: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை பற்றி நீங்கள் பேசினீர்கள். இந்த ஆண்டு, வளர்ச்சியின் கணிப்புகளின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலுவைத் தொகை கூட வழங்கப்படாத நிலையில் இது நியாயமானதா? எனது இரண்டாவது கேள்வி, கோவா மற்றும் பிற பாஜக ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சருடன் நீங்கள் வெளிப்படையாக  பேசியது பற்றியது. மற்ற நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தங்கள் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த அமைப்பு தனித்துவமான பிரச்னைகளை தீர்ப்பதற்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு மாநிலம் சிக்கலை எதிர்கொண்டால் அதை கவனித்துக்கொள்வதற்காக. ஆனால் எங்களுக்கு  அமைப்பு ரீதியான ஆபத்து இருக்கும்போது, மாநிலங்களும்  ஒன்றிய அரசும் ஒருசேர சரிவை சந்திக்கும்  போகும்போது, முழு இழப்பீட்டு இயந்திரமும் தோல்வியடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் தோல்வியடைந்ததால் நாம்  இந்த சூழ்நிலையில் இருக்கிறோம் ... ஜிஎஸ்டியின் மற்ற அம்சங்களைப் போல, இதுவும் நன்கு சிந்திக்கப்படவில்லை.

கோவா நிதியமைச்சர் உடன், எனக்கு ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஒப்புதலுக்கு உள்ளவை எவை, தகவலாக வழங்கப்பட்டவை எவை என்று ஒன்றரை மணி நேரம் விவாதித்தோம். திரு பாதல் (மன்பிரீத் பாதல், பஞ்சாப் நிதியமைச்சர்) போன்ற அமைச்சர்கள் எங்களால் அங்கீகரிக்கப்படாமல் , வெறும் தகவலாக மட்டும் ஒரு முடிவு  தெரிவிக்கபட்டால், அது சட்டப்படி செல்லுமா? ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக நாங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே விதி ... 'தகவலுக்காக' என்ற வார்த்தையை 'ஒப்புதலுக்காக' மாற்றவும், அதனால் நாங்கள் அதை அங்கீகரிக்க முடியும், மேலும் நீங்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெறுவீர்கள் அவர் சொன்னது அவ்வளவுதான். ஆனால் கோவா அமைச்சர், 'இது தேச விரோதம்', 'இது போர் போன்ற சூழ்நிலை' என  கோபத்துடன் பேசிக்கொண்டே சென்றார் . இது முட்டாள்தனம், உண்மையிலேயே சரியான கேள்விகளை எழுப்பும் மக்களின் கண்ணியம், தேச பக்தி பற்றி கேள்வி எழுப்புவது கொடுமை. எனவே நான் உள்ளே நுழைந்து, ' ஒரு அமைச்சர், அதுவும் ஒரு சிறிய மாநிலத்திலிருந்து வந்தவர், கோடிக் கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் தகுதியை கேள்விக்குள்ளாக்கிற வகையில் நீங்கள் இந்த கூட்டத்தை நடத்துவது கொடுமையானது' என்றேன். உடனே, இந்த கவுன்சிலில் சிறிய மாநிலங்கள் ,பெரிய மாநிலங்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று திருமதி நிர்மலா சீதாராமன் என்னை சாடினார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, தொழில் செய்வதற்கான சாதகமான சூழல் பற்றிய அலோசனையில் , பாஜகவை சார்ந்திருக்கும் மாநிலங்கள் தாங்கள் சிறிய மாநிலங்கள் என்ற வாதத்தை முன்வைத்தன. நான் திருமதி சீதாராமனிடம் சொன்னேன், ' மேடம், பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என்ற பேசக்க்கே இங்கு இடமில்லை என்று கூறி என்னை கண்டித்தீர்கள்' .. என்றேன்.  கோவா அமைச்சர் வெளியே வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி என்னை எல்லா விதமான குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

பி வைத்யநாதன் ஐயர்:  நீங்கள் கூறுகின்ற இந்த முரண்பாடுகளை எப்படி தீர்ப்பது என்று நீங்கள்  பார்க்கிறீர்கள்?

பிரச்னைகளை தீர்க்க முடியுமா முடியாதா என்பதை பற்றி இங்கு நான் பேசவில்லை. ஆனால் தரவைப் பயன்படுத்துவதில் இருக்கும் குறைபாடு நிச்சயம் ஒரு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையாகும்.. ஏனென்றால் அடுத்த கூட்டத்திலும் வரி விகித அடுக்குகள் பற்றி  நாங்கள் மீண்டும் அதே விவாதத்தை நடத்தினோம். மீண்டும், எந்தத் தகவலும் இல்லை …ஒன்றிய அரசுஎன்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுவது அல்லது ராஜாவை விட அதிக விசுவாசமாக இருப்பதன் பயனாய்  பாஜக மாநிலங்கள் கூட துன்புறுத்தத் தொடங்குகின்றன என்பதை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் எந்த முதலமைச்சரும் தங்கள் செயல்படும் திறனை இழக்க விரும்பவில்லை, அரசியலமைப்பு அதிகாரங்களை மக்களுக்கு வழங்க வேண்டும், அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ...

எனவே இந்த மையமயமாக்கல் கருத்து பாஜக அல்லது திமுகவைப் பற்றியது அல்ல, இது ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எதிரானது. வித்தியாசம் என்னவென்றால், இன்றைய பாஜக தனது மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை இத்தகைய அடக்குமுறையின் கீழ் வைத்திருக்க முடிகிறது ... ஆனால் அது ஒரு நிரந்தர அம்சம் என்று நான் நினைக்கவில்லை.

அருண் ஜனார்த்தனன்: பொதுக் கடன் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்க உங்கள் திட்டம் என்ன - அதை கட்டுப்படுத்தி குறைப்பதா? அல்லது புதிய வருவாய் மாதிரிகளை ஆராய்வதா?

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட  சிதைவு கொடூரமானது ... நாங்கள் 5,70,000 கோடி ரூபாய் கடன் சுமை உள்ளதாக கூறப்பட்டசூழலில்  ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இங்கு சுமார் ரூ .9 லட்சம் கோடி கடன் இருப்பதை இப்போது  பார்க்கிறோம். இருந்தும் ரேஷன் கார்டு ஒன்றுக்கு ரூ .4,000 வழங்குவோம் என்று முதல்வர் கூறினார் , நாங்கள் எங்கள் வாக்குறுதியை காப்பற்றினோம். ... இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது.  ரூ 4,000 வழங்கப்பட்டதில் கூட,   அந்த பணத்தை பெற தகுதியற்ற நபர்கள் அட்டை வைத்திருந்தனர் என்பது மிகவும் தெளிவாக இருந்தது. எங்கள் தரவு அமைப்புகள் எப்படி மோசமாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது.

கூட்டாட்சி அமைப்பு சரியாக இல்லாததால் எங்கள் தரவு அமைப்புகள் மோசமாக உள்ளன. உதாரணமாக, கோ-வின் போர்டல் அனைத்து தடுப்பூசிகளையும் பதிவு செய்கிறது, ஆனால்  மூன்றாவது அலைக்குத் தயார்படுத்தத் தொடங்க, தடுப்பூசி எந்த அளவு மக்களிடம் சேர்ந்துள்ளது என்பதை அறிய மேலோட்டமாக ஒரு செரோ சர்வே செய்யச் செல்லும்போது, எங்களிடம் அந்தத் தரவு இல்லை …

நான் தகுதியானவர்களுக்கு மட்டும் மானியங்களை ஆளிக்க விரும்பினால், 'எந்த குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் மானியங்கள் பெறக்கூடாது' என்பதே நான் முதலில் கூறுவதாக இருக்கும், ஆனால் என்னிடம் அதற்கான தரவுகள் இல்லை. எல்லாவற்றையும் மையப்படுத்தியதால் நாங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம், தரவு இல்லாததால் எங்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. அதில் சில எங்கள் சொந்த தவறு, சில அரசமைப்பின் தன்மையில் உள்ள சிக்கல். அதுதான் எனக்கு ஒரே கவலை. 

பணம் எங்கிருந்து வரும் என்று நான் கவலைப்படவில்லை, ஆனால் சிதைந்துபோன அமைப்புபற்றியதே எனது கவலை  அரசாங்கத்தை நிர்வகிக்கும் திறன் தீவிரமாக குறைந்துவிட்டது. இதை திருப்புவது மிகவும் கடினம்.

அனந்த் கோயங்கா: நீங்கள் ஒரு தனியார் துறை பின்னணியில் இருந்து வருகிறீர்கள். இங்கு பொருளாதார ரீதியாக சரியான விஷயங்களைச் செய்வதற்கு மாற்றாக அரசியல் ரீதியாக சரியான விஷயங்களைச் செய்ய வேண்டியது இருக்கும். அரசியலில் உள்ள  இந்த முரண்பாடுகளை   எப்படி பார்கிறீர்கள் 

அநேகமாக வேறுபாடுகள் இங்கே எனக்கு இரண்டு ந்லையில் உள்ளன. ஒரு நிலை என்னவென்றால், ஒரு முதலீட்டு வங்கியாளராக/ உலகளாவிய வங்கியாளராக, நீங்கள் ஒரு முதலாளித்துவவாதி. ஒரு அரசியல்வாதியாக, ஒரு திராவிடராக, ஒரு இந்தியனாக, நாம் அனைவரும் ஓரளவிற்கு சோசலிஸ்டுகள் அது சரியானதும் கூட. எனவே இது கடினமான மாற்றம் அல்ல, ஏனென்றால் இது வேறு சூழல். ஆனால் மிகவும் கடினமான மாற்றம் என்னவென்றால், உடைந்த ஒரு அமைப்பை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறோம் …

ஒரு வணிக நிறுவனத்தில், சரியானது என்ன என்பதை நீங்கள் கண்டறிந்தவுடன், நீங்கள் அதைச் செய்ய முடியும் , எந்த எதிர்ப்பும் இருக்காது. இங்கே நீங்கள் செய்ய வேண்டிய சரியான விஷயம் என்ன என்பதை அறியலாம், அனால் அதன் பின்னர் இங்கு அனைத்து வகையிலும்  தடைகள் இருப்பதை அறியமுடியும் . தினசரி அடிப்படையில் நான் எதிர்கொள்ளும் உண்மையான சவால் அதுதான்.

பி வைத்தியநாதன் ஐயர்: மறைந்த டிடிபி தலைவர் என்டி ராமாராவ் மத்திய அரசை 'கருத்தியல் கட்டுக்கதை' என்று விவரித்தார்.கடந்த 10-15 ஆண்டுகளில்  மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான  உறவு ஒரு பக்கத்திற்கு சார்பாகவே மேலும் சாயுமளவிற்கு என்ன மாறிவிட்டது?

ஒன்றிய அரசிர்கான பொறுப்புகள் என்னவென என்னால் தெளிவாக பார்க்கமுடிகிறது. வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம், சர்வதேச வர்த்தகம், வர்த்தகக் கொள்கை, தடுப்பூசி கொள்முதல் ஆகியவை ஒன்றிய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். ஒன்றிய அரசே  இருக்கக்கூடாது என்று சொல்லும் ஒழிப்புவாதிகளில் அல்ல நான். ஒரு திறமையான, செயல்திறமிக்க, சக்திவாய்ந்த ஒன்றிய அரசாங்கத்திற்கான தேவை நிச்சயமாக உள்ளது. ஆனால் டெல்லியில் இருந்துகொண்டு எந்த பள்ளிக்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாது, சென்னையில் உட்கார்ந்துக்கொண்டு நாங்களும் அதை செய்யமுடியாது, எனவே அந்த அதிகாரத்தை நாம் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் மையப்படுத்திய போக்குகளைப் பார்த்தால் ... UPA- வின் இரண்டாவது ஆட்சியில் அப்பிரச்சனை  தொடங்கி NDA அரசாங்கத்தின் ஏழு ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்ட ஊரடங்கு தளர்த்தலின் போது, மத்திய உள்துறை அமைச்சகம் எங்களிடம் முடிதிருத்தும் கடைகளை எப்போது திறக்க முடியும் என்பதையெல்லாம் சொல்லித்தர முயன்றது. முடிதிருத்தும் கடை திறப்பதில் தேசிய அளவிலான கொள்கை இருப்பது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்க முடியும் ? இது

(இந்த மையமயமாக்கல்) தோல்வியடையும் ஒரு போக்கு. அது தோல்வியடையும் முன் அது எவ்வளவு சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதே இங்கு கேள்வி , ஏனென்றால் நீங்கள் அதிகமாக மையப்படுத்த முயற்சிக்கும்போதெல்லாம் மேலும் நீங்கள் மோசமான விளைவுகளைப் பெறப் போகிறீர்கள் .

பி வைத்யநாதன் ஐயர்: ஈஷா அறக்கட்டளையின் ஜக்கி வாசுதேவுக்கும் உங்களுக்கும் இடையிலான வெளிப்படையான மோதல் ,  கோவில்களை அரசே நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு  வலுவான ஆதரவலராக நீங்கள் இருப்பதை உணர்த்துகிறது...

ஜக்கி வாசுதேவ் போன்ற ஒருவருடன் எனது கருத்துக்கள் எதிர்ப்பாக இருக்கிறதா அல்லது ஒத்துப்போகிறதா என்பது குறித்து நான் கவலைப்படவில்லை ... ஆனால் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களிலிருந்து எப்படியாவது அரசாங்கத்தின் கையை நீக்கிவிடலாம் என்ற கருத்துடன் அடிப்படை சிக்கல்கள் உள்ளன.

பிரசாந்தா சாஹு: ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு வரி வருவாய் வளரவில்லை என்று பல மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன. இழப்பீடு வழங்கப்படுவதும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைகிறது, இது வருவாயை மேலும் குறைக்கக் கூடும்.

ஆமாம், குறிப்பாக மத்திய அரசு செஸ் வசூலிக்கப் போகிறது மற்றும் குறிப்பாக இரண்டு வருட எதிர்பாராத பேரியல் ஆபத்து அல்லது தோல்வி காரணமாக நிறைய விஷயங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன. இழப்பீடு வழங்கும் காலம் மேலும்  நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் நான் மற்ற மாநிலங்களுடன் இணைகிறேன். மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் இழப்பீடு குறித்த சிறப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்துவதாக உறுதியளித்தார்.

தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் தனது நிதிகளை ஒழுங்காக நிர்வகிக்கத்தான் , நாங்கள் எந்த இழப்பீடும் பெறத் தகுதியுடையவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் அதற்கான அளவு 14% ஆண்டு வளர்ச்சி என்றால், நாங்கள் அதை விற்பனை வரி/VAT நடைமுறையில் இருந்த காலகட்டத்திலேயே செய்துகொண்டிருக்கலாம் .

ஜிஎஸ்டி உற்பத்தி அடிப்படையிலான வரியிலிருந்து நுகர்வு அடிப்படையிலான வரியாக மாற்றப்பட்டது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம், எனவே ஜிஎஸ்டி பெரிய உற்பத்தி மாநிலங்களுக்கு இயல்பாகவே சாதகமற்றதாக உள்ளது . ஆனால் தமிழ்நாடு கொஞ்சம் தனித்துவமானது, ஏனென்றால் நாங்கள் அதிக உற்பத்தி செய்பவர்களாக இருக்கும் அதே சமயம் அதிக தனிநபர் நுகர்வு கொண்டவர்கள், ஏனென்றால் குஜராத் அல்லது மகாராஷ்டிரா அளவிற்கு பாகுபாடுடைய சமூகமாக  நாங்கள் இல்லை. எனவே எங்கள் ஐஜிஎஸ்டி  தோராயமாக பெரிய மாறுதல் இருக்காது  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மற்ற மாநிலங்களை விட எங்கள் அமலாக்க அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. உள்வரும் ஐஜிஎஸ்டி மற்றும் வெளிச்செல்லும் ஐஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு இடையேயான பெரிய இடைவெளிகளை நாங்கள் தொடர்ந்து கண்டறிந்து வருகிறோம் - வருவதை விட வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிகளை நாங்கள் அதிகம் செலுத்துகிறோம். இவை அனைத்தும் நம்மை அதிகம் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நிச்சயமாக, தத்துவ ரீதியாக இழப்பீட்டை நீட்டிப்பதற்கு நாங்கள் துணைநிற்போம்.

Source: Indian Express

 Articles Year Wise: