ரூ.23.86 கோடியில் 148 தார்ச்சாலை பேவர் பிளாக் சாலை புதுப்பிக்கும் பணி

Published Date: December 18, 2021

CATEGORY: CONSTITUENCY

ரூ.23.68 கோடியில் 148 தார்ச்சாலை, பேவர் பிளாக் சாலை புதுப்பிக்கும் பணி

மதுரை, டிச.18:  மதுரையில் நேற்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

மதுரை சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார், மதுரை எல்லீஸ் நகர் வீர காளியம்மன் கோயில் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். மேலும், மதுரை மாநகராட்சி மூலதன மானிய நிதி 2021-22ம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்ட நிதியின் கிழ் மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளான ஆரப்பாளையம், தத்தனேரி, பொன்னகரம், ரயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர்,பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 

மேலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளான சுந்தரராஜபுரம், பெருமாள் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், தமிழ்ச்சங்கம் ரோடு, சொக்கநாதர் கோயில், வடக்கு கிருஷ்ணண் கோயில், சுப்பிரமணியபுரம், காஜிமார் தெரு ஆகிய பகுதிகளிலும் இப்பணிகள் முடிந்துள்ளன. இங்கெல்லாம் இயற்கை இடர்பாடுகளினால் சேதமடைந்த பல்வேறு தார்சாலைகளை மேம்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. அதன்படி ரூ.23.68 கோடி மதிப்பில் 148 தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. எல்லீஸ் நகர், தமிழ்ச்சங்கம் ரோடு (சிம்மக்கல்) பகுதிகளில் அமைச்சர் சாலைப்பணிகளை துவக்கி வைத்தார்.

மதுரை மாநகர் மேலப் பொன்னகரம் 8 வது தெரு பகுதியில் உள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். நாற்காலி, மேஜை உள்ளிட்ட அங்கன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அங்கன்வாடிக்கு வருகை தந்த அமைச்சருக்க ரோஜா மலர் அளித்து, குழந்தைகள் வரவேற்றனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய அமைச்சர் குழுவாக அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக நேற்று ஆய்வு பணிகளை துவக்கும் முன்பு, சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Media: Dinakaran