/

லீமன் சகோதரர்கள் குழுமத்தை பற்றிய எனது கலந்துரையாடல் Rediff.com-ல் வெளிவந்த தொகுப்பு

Published Date: October 1, 2018

கேள்வி 1:  லீமன் சகோதரர்கள் குழுமத்தின் சரிவும் அதன் பின்னரான உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் நடந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த கடைசி சில நாட்கள், வாரங்கள் மனதளவில் ஏற்றத்தாழ்வுகளும் மாற்றங்களும்  நிறைந்ததாக இருந்திருக்கும் அல்லவா?

பதில் 1:  செப்டம்பர் 15 2008 முந்தைய மற்றும் பிந்தைய வாரங்கள் என் வாழ்வின் மிக தீவிரமானவை/ மும்முரமானவை. என்னால் அந்தக் காலகட்டத்தை என்றும் மறக்கமுடியாது. மனித இயல்புகள் குறித்தும் தீவிரமாக நிலைகள் (இயல்புகளை தாண்டிய அல்லது செயலிழந்த நிலைகள்) குறித்தும் ஒரு ஐந்தாண்டு கால கட்டத்தில் கற்பதை விட இந்த காலகட்டத்தில் நான் அதிகமாக கற்றேன். ஆனால் அவை அனைத்தும் வேறு ஏதோ ஒரு வாழ்நாளில்  நடந்ததுபோல இன்று  உணர்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுநேரமாக பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். கடந்த பத்தாண்டுகளில் பல செயல்களை பல்வேறு இடங்களில் செய்து அவற்றைக் கடந்து வந்துள்ளேன். எனவே அன்றைய நிகழ்வுகள் தொலைவில் கேட்கும் எதிரொலி போல இன்று உள்ளது.

 

கேள்வி-2 நீங்கள் அந்த தருணத்தில் மும்பையில் வசித்தீர்கள் என்றாலும் அந்த நிகழ்வுகளின் மையப்புள்ளியில் இருந்தீர்கள். அந்த நாட்கள் குறித்து எங்களுக்கு சொல்ல முடியுமா? நிலைமையின் தீவிரம் குறித்து தங்கள் எப்பொழுது முதலில் உணர்ந்தீர்கள்?

பதில் 2 - பல வாரங்களாக நிலைமை பலவீனமாக இருந்தது எனக்குத் தெரியும், ஒவ்வொரு வாரமும் அது மேலும் பலகீனமடைந்தது. ஆனால் நான் மும்பையில் இருந்ததால் பல நிகழ்வுகள் குறித்த விவரங்கள் தெளிவாக தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை நியூயார்கில் இருந்திருந்தால் இந்த நிகழ்வுகள் மற்றும் அதன் விவரங்களுடன் மேலும் விழிப்புடன் இருந்து இருப்பேன். உள்ளபடி, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் நான் நேரடியாகவே ஈடுபட்டிருக்கக்கூடும். ஏனெனில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அலெக்ஸ் கிர்க் (என் கடைசி மேற்பார்வையாளர்) மற்றும் வங்கியின் கடைசி தலைவரான பார்ட் மெக்டேட் (சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்த அலெக்ஸ் கிர்க்ஐ  இறுதி காலகட்டத்தில் மீண்டும் கொண்டுவந்தவர்) ஆகியோரின் கீழ் நேரடியாக பணிபுரிந்து வந்தேன். என் தொழில் பின்னணி பன்முகத்தன்மை வாய்ந்தது என்பதால் எனக்கு பல சிறப்பு திட்டங்கள் ஒதுக்கப்பட்டன. கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு UTAHவில் ஒரு வங்கி நிறுவுவதும் ஒன்று. மேலும் ஜப்பானை சேர்ந்த மூன்று பெரிய வங்கிகளில் ஏதாவது ஒன்றுடன், உத்திகளுடன் கூடிய பங்கு முதலீட்டை உறுதி செய்வதற்கு நான் பலமுறை டோக்கியோ பயணப்பட வேண்டி இருந்தது. ஆனால் மும்பையில் நியமிக்கப்பட்டு இருந்ததால் (என் தந்தையின் மறைவுக்குப் பின்னால் என் தாயாரின் அருகில் நான் வசிப்பதற்கு ஏதுவாக) அப்பொழுது நடந்த அலுவலக கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை. மேலும் லீமன் தோல்வியடைய அனுமதிக்கப்படும் என்று நான் ஒருபோதும் சிந்தத்திதில்லை.

செப்டம்பர் 15 2008 குறித்தான நினைவுகளை நான் பலமுறை பகிர்ந்துள்ளேன் சில சமயங்களில் மிக விரிவாக பகிர்ந்துள்ளேன் - யூடியூப் தளத்தில் ஒரு பதிப்பும் உள்ளது (insert link) - நேரம் கருதி அவற்றிற்குள் நான் மீண்டும் செல்வதை தற்போது தவிர்க்கிறேன். தோல்வி குறித்து நான் முதலாக சிந்தித்தது நியூயார்க்கில் உள்ள பொது ஆலோசகர்களின் வழக்கத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் (இந்திய நேரப்படி திங்கள் காலை 9.30 நியூயார்க்கில் ஞாயிறு நள்ளிரவு) கட்டுப்பாட்டாளர்கள் எங்களை வங்கி நொடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லி இருந்தது தெரிய வந்த பின்னர் தான். எப்படி ஒரு நிதி அமைப்பால் இத்தனை பெரிய நிலைகுலைவை  தாங்க முடியும் என்பது எனக்குப் புலப்படவில்லை. ஏனெனில் அபாயங்கள் குறித்தான தகவல்கள் என் முந்தைய செயல்பாடுகளால் எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது.

 

கேள்வி 3: லெமன் குழுமத்தின் பழைய நட்பு வட்டம் என்று ஏதேனும் உள்ளதா? நீங்கள் அதில் உள்ளீர்களா? எப்போதாவது நீங்கள் அனைவரும் சந்தித்து அந்த நிகழ்வுகள் குறித்தும் அவற்றை வேறு விதமாக எவ்வாறு கையாண்டிருக்கலாம் என்பது குறித்து விவாதிப்பது உண்டா?

 

பதில் 3: அனுபவங்கள் மக்களை ஒன்றிணைக்கும் என்று நான் நம்புகிறேன். அனுபவங்கள் அதிர்ச்சி தரக்கூடியவையாக இருந்திருந்தால் பிணைப்பு  மேலும் வலுவாக இருக்கும். நாங்கள் அனைவரும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பொறுப்புகளில் மும்முரமாக இருப்பதால் என் பழைய சகாக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு அமைவதில்லை. ஆனால் உலகம் தற்போது தொழில்நுட்பத்தின் வாயிலாக (தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைதளம்) என நம் கையில் உள்ளதால் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். கடவுளின் ஆசியுடன் என் சகாக்கள் அனைவரும் தொழில் முறையாகவும் அவரவர் சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக உள்ளனர். என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்து நாங்கள் நெடு நேரம் செலவு செய்வதில்லை. நெடு நாட்கள் ஆன படியால் அது என்றோ நடந்தது போல உள்ளது. ஆனால் பள்ளி கல்லூரி நண்பர்கள் போல பழைய நாட்கள் குறித்து நாங்கள் பேசுவது உண்டு. எங்களில் பலரும் நியூயார்க்கில் (நான் 2007 வரை) வேலை செய்தவர்கள் என்பதை மறவாதீர்கள். லெஹ்மன் நெருக்கடியோடு  நாங்கள் 9/11 இல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலையும் கடந்து வந்துள்ளோம். லெமன் அலுவலகங்கள் உலக வர்த்தக மையத்தில் இருந்தன,  உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விபத்தால் நாங்கள் அலுவலகத்தை துறக்க வேண்டியிருந்தது. நாங்கள் இரட்டை அளவில் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி இது.

 

கேள்வி 4 : தாங்கள் ஒரு கலந்துரையாடலில் கட்டுப்பாட்டாளர்கள் கொள்கை வகுப்பாளர்களும் நிகழப்போகும் நெருக்கடி குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறினீர்கள். அது ஏன்?

பதில் 4 : உண்மையில் நான் கூறியது என்னவெனில் செயலிழப்பை அனுமதிப்பதன் மூலம் நெருக்கடி ஏற்பட ஏற்படுத்தப்போகும் அதிர்வுகளையும் அதன் விளைவாக உலக சந்தையிலும் முடிவாக உலகப் பொருளாதாரத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் உருவாகக்கூடும் இன்னல்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று தான்.

பாதுகாப்பில் புதுமை, மூல விலை நிர்ணயித்தல் மற்றும் கட்டமைப்பு, அதற்கும் மேலாக சந்தை அபாயங்களை உலகளவில் பகிர்ந்தளித்தல் போன்றவை 2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் மிகவும் வேகமாக நடந்தது, பெரும்பாலான கட்டுப்பாட்டாளர்களுக்கு லெஹ்மன் குழுமம் செயலிழந்தால் ஏற்படும்  மாற்றங்களின் தன்மை மற்றும் அளவு குறித்து போதுமான புரிதல் இல்லாமல் இருந்தது. ஆகையால், மோசமான தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்தனர், ஆனாலும், அவருள் சிலர் இதை  உணர்ந்து நேர்மையுடன் தவறுக்கு பொறுப்பேற்கவும் செய்தனர்.

கேள்வி 5. “Too Big To Fail” எனும் நான்கு வார்த்தைகள் நெருக்கடிக்கு பிறகான காலத்தில் புகழ்மிக்கவையாக இருந்தன. லெஹ்மன் குழுமத்திற்கு இந்த வார்த்தைகள் பொருந்தாமல் போனது ஏன்? மெரில் லிஞ்ச் போன்றவர்கள் தோல்வியில் இருந்து பாதுகாக்கப்பட்ட போது, ஏன் லெஹ்மன் குழுமும் மட்டும் தோல்வி அடைந்தது?  தாங்கள் ஓரிடத்தில் “ எங்கள் தோல்வியை நாங்களே அமைத்து கொண்டோம்” என்று கூறியுளீர்கள், எனவே தான் இந்த கேள்வி.

பதில் 5 - லெஹ்மன் தோல்வியடைய அனுமதிக்கப்பட்டது ( முன்னராக பியர் ஸ்டெர்ன்ஸ், மற்றும் பின்னாட்களில்  மெரில் லிஞ்ச், ஏஐஜி போலல்லாமல்) ஏனென்றால் கட்டுப்பாட்டாளர்கள் அரசியலால் உந்தப்பட்டார்கள். அவர்கள் தார்மீக தீங்கை ஊக்குவிக்கவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர். அரசியல் அழுத்தம் மற்றும் இந்த செயலுக்குண்டான பின்விளைவுகள் குறித்த போதிய விவரமின்மை போன்றவை ஒரு நிறுவனம் தோல்வியடைய அனுமதிக்கப்பட்ட பின் தான் ஞானம் பிறக்கும் என்பதை பிற்காலத்தில் உணர்த்தியது. அதாவது, அரசியல் முடிவுகளை புறந்தள்ளி கொள்கைகளை பரிசீலிக்க ஒரு பலி தேவைப்பட்டது - அரசியல் அழுத்தங்களை திருப்திப்படுத்த ஒரு பலி தேவைப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அந்த பலி லெஹ்மன் ஆக இருந்திருக்க வேண்டாம். அந்த புள்ளி வரையில் லெஹ்மன் குழுமத்தில் நடந்த உள் நிகழ்வுகள் (நீண்ட நெடிய வெற்றி, அதன் மூலம் எழுந்த தோல்வியே இல்லை எனும் போலி பிம்பம், அதன் விளைவாக எடுக்கப்பட்ட விவேகமற்ற ஆபத்து முடிவுகள், அபாயங்களின் அளவுகள் குறித்து எழுந்த கருத்து வேறுபாடுகள், அதை தொடர்ந்து பணியாளர்கள் வெளியேறியது அவர்களுக்கான மாற்று) என எங்கள் செயல்களே லெஹ்மன் குழுமம் பலியாவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தது. நிச்சியமாக, நடந்தேறிய நிகழ்வுகள் சதி செய்து எங்களை பலி வாங்கும் என்று எங்களுக்கு முன்னேரே தெரிந்திருக்க வாய்ப்பில்லை….

 

கேள்வி 6 - நேரடி பங்கேற்பு இல்லாமல் பார்வையாளராக மட்டுமே இருந்ததால் இந்தியாவிற்கு இந்த நெருக்கடியின் போது, பெரிய அளவில் சேதாரம் ஏதும் இல்லை. பலர் இதற்கு நம் மத்திய வங்கியின் வலுவான கட்டுப்பாடுகளே காரணம் என்று கூறுகின்றனர். கட்டுப்பாடு எனும் வார்த்தை பல நேரங்களில்  எதிர்மறையான உட்பொருள் கொண்டதாக உள்ளது, ஆனால் இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நெருக்கடிகளை புறம்தள்ள தேவையான ஒன்றா?

பதில் 6 - உலக பொருளாதார சந்தையில் இருந்து தனிப்படுத்திய செயல்பாடும், பழங்காலத்து வங்கி முறையுமே நெருக்கடியின் போது இந்தியாவிற்கு  சேதாரங்கள் அதிகம் நேராமல் இருந்ததற்கான காரணங்கள். சந்தை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த என் புரிதல்களின் படி, பெருமை கொள்ளும் அளவிற்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் ஏதும் இருந்ததாகவோ இருப்பதாகவோ தெரியவில்லை. வங்கிகள் கடன்களை எவ்வித வகைப்படத்தலும் இல்லாமல்  மாற்றியமைக்கவும் இருப்புகளை ஒதுக்கி வைக்காமலும் இருக்க ஒருமுறை (நெருக்கடிக்கு பின் RBI வழங்கிய) சலுகை, என் கருத்தின் படி, ஒரு தரம் குன்றிய கட்டுப்பாடு செயல்முறை. இந்தியாவில் கட்டுப்பாடுகள் மீதான  கவனக்குறைவுகள் குறித்து இந்த கட்டுரையை (https://www.frontline.in/cover-story/article250364, 43.ece) நான் பரிந்துரைக்கிறேன்

 

கேள்வி 7 - கடந்த பத்து ஆண்டுகளில் , உலகம் தேவையான பாடங்களை கற்றது என்றும் பொருளாதார நெருக்கடியின் இன்னல்கள் தீர்ந்தது என்றும் கருதுகிறீர்களா? அல்லது, விதியை போல மீண்டும் நம்மை துரத்துமா?

பதில் 7 - சந்தையில் நினைவுகளின் காலம் குறைவு என்றொரு சொற்றொடர் உண்டு. வரலாற்றில், பொருளாதார நெருக்கடிகள் பல நூறாண்டு காலங்களுக்கு முன்னதாகவும் இருந்துள்ளன. துலிப் நெருக்கடி, தென் கடல் நிறுவன குமிழி போன்றவை கடந்த 500 ஆண்டுகளுக்கு உள்ளானவை.

சந்தையில் நெருக்கடிகள் தவிர்க்கமுடியாதவை, மனிதர்களின், ஒற்றையாகவோ அல்லது கூட்டமாகவோ, குறைபாடான பகுத்தறிவே இதற்கு காரணம். மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி உலகத்தை விரைவில் தாக்கும், ஒன்றிணைந்த பொருளாதார சந்தையின் காரணமாக வரும் நூற்றாண்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட நெருக்கடிகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், கட்டுப்பாட்டாளர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும், நம் கடமைகளை புறக்கணிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடும் நெருக்கடிகளை சமாளிக்க, சந்தை கட்டமைப்பை வலுப்படுத்தவும், பொது மக்கள் பார்வையில் முக்கிய நிறுவனங்களான வங்கிங்கள் போன்றவற்றை ஸ்திரமாக்கவும் தொடர்ந்து செயல்பட வேண்டும்,

 

கேள்வி 8. 2008 காலகட்டத்திற்கு அடுத்ததாக கோட்டையை வலுப்படுத்த செய்யப்பட்டிருக்க வேண்டியவை எவை, எவற்றை செய்யவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் 8 - மிக எளிமையான சில செயல்கள் - OTC Derivativesஇற்கான காசோலை தீர்வகங்கள், வங்கி அழுத்த சோதனைகள், மேம்பட்ட மூலதன விகிதங்கள் போன்றவை செய்யப்பட்டன. தேவையான அளவிற்கு செய்யப்பட்டனவா, உலகம் முழுவதும் சீராக ஒரேபோல செய்யப்பட்டனவா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்.

ஆயினும், பிரச்சனையின் அடி நாதமான - மதிப்பீட்டு நிறுவனங்களில் கருத்து  வேற்றுமைகள், மூலதன தேவைகள் மற்றும் இருப்பு ஆகியவற்றின் சுழற்சிமுறை,  அபாயங்களை உருவாக்கியவர்களிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் அதற்குண்டான பின்விளைவுகள், வரம்புக்குட்பட்ட எல்லைக்குள் கணக்கியல் தரநிலைகளின் நடுநிலைமை - போன்றவற்றிற்கு என் புரிதல் வரையில் எந்த ஒரு அர்த்தமுள்ள தீர்வும் எட்டப்படவில்லை.

 

கேள்வி 9 - நெருக்கடிக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில், விதிதளர்த்தல்கள் மூலம் பணப்புழக்கம் அதிகரித்தது. ஆனால் இப்பொழுது, US மத்திய வங்கி வட்டு விகிதங்களை  ஏற்ற தொடங்கி, மூலதன வெளியேற்றம் அதிகரித்து, பழைய நிலை மீண்டும் திரும்புவதால், நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் வெளியில் தெரிகின்றன அல்லவா? இதை நாம் எப்படி எதிர்கொள்வது?

.

பதில் 9 - நாம் இதை ஏற்கனவே ஓரளவிற்கு சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். உள்ளபடி, புள்ளிவிவரங்கள் கூறுவதென்பது, உள்நாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டார்கள், முக்கியமாக LIC, அதீதமாக பங்கு சந்தையில் முதலீடுகள் செய்துள்ளன. அதனால், அவர்களின் பங்கு விலைகளை நேரடியாக ஏற்றியும் மற்ற உடைமைகள் விலைகளை மறைமுகமாக ஏற்றியும் வருகின்றனர். உலக பொருளாதாரத்தில் பணப்புழக்கம் இயல்புநிலைக்கு திரும்பி வருவதால், வெளிநாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். அடுத்த ஓராண்டில் பங்கு சந்தையில் விலை நிர்ணயம் செய்வதில் சொல்லத்தக்க மாற்றங்களும், உடைமைகள் விலைகளில் பரந்த மாற்றங்களும் ஏற்படக்கூடும் - உலக பொருளாதரத்தில் பணப்புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கை அதிகரித்தாலோ, அல்லது மற்ற சந்தைகள் அல்லது அரசியல் மற்றும் பூகோளம் சார்ந்த நிகழ்வுகள் தடுமாற்றங்களை ஏற்புடுத்தினால், இந்த மாற்றங்கள் நிச்சியமாக நடக்கும்.

ஆனால் தற்பொழுது, இது இந்தியாவின் (உலகத்தின் பிரச்னை அல்ல, ஏனெனில் பல வெளிநாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் இங்கு பங்கெடுப்பதை தவிர்ப்பர்) பிரச்னை. இதற்கு நன்கு பரிசீலிக்கப்பட்ட பக்குவமான தீர்வுகள் - பணப்பரிவர்த்தனை(RBI) மூலமாகவும் மற்றும் நிதி (மத்திய அரசின்) மூலமாகவும், மேலும் அமைப்பு சார்ந்த(LIC போன்ற நிறுவனங்களின் பங்கு என்ன போன்றவை) எட்டப்படவேண்டும்.

 

கேள்வி 10 - கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவும் உலக பொருளாதாரத்தில் அதிக பங்கெடுத்துள்ளது, ஒரு வேளை நெருக்கடிகள் மீண்டும் ஏற்பட்டால், அதன் காரணமாக,நம் இழப்புகள் அதிகமாக இருக்குமா?

பதில் 10 - ஆம். இந்தியாவின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்துடன் - மூலதனம், பொருட்கள், சேவைகள், தொழிலாளர்கள் இடம்பெயர்தல் - என எல்லா வகையிலும் தற்பொது ஒன்றியுள்ளது. இந்த இணைப்பின் பின்விளைவுகளை நாம் கண்டு வருகிறோம் - அவற்றுள் நல்லவையும் உள்ளன தீயவையும் உள்ளன. 2008இற்கு பின்னரான காலகட்டத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கீழ் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பணம் வளர்ந்து வரும் பொருளாதார சந்தைகளுக்குள் ( இந்தியா உட்பட) புகுந்து  உடைமைகள் மதிப்பையும் வெளிநாட்டு பண இருப்புகளையும் உயர்த்தியது. 2013ன்

டேப்பர் டான்ட்ரம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளால், US மத்திய வங்கி பணப்புழக்கத்தை அளவை குறைக்க தொடங்கியவுடன், இந்தியாவிலும் அதன் எதிர்விளைவுகள் ( சந்தை விலைகள், டாலருக்கு எதிரான ருபாய் மதிப்பு ) தொடங்கின.

எனவே, இதற்கு முன்னர் வந்த நெருக்கடிகள் நம் மேல் ஏற்படுத்திய தாக்கத்தை விட இனி வரப்போகும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்போகும் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறலாம்.

 

கேள்வி 11 - இந்தியாவின் நிதித்துறை நல்ல நிலையில் இல்லை, நெடுநாட்களாகவே நல்ல நிலையில் இல்லை. நம் வங்கி அமைப்பு ஒரு பொருளாதார சரிவை எதிர்நோக்கி உள்ளதா?

பதில் 11 - இந்தியா நிதித்துறை நல்ல நிலையில் இல்லை - . வங்கி அமைப்பில் அரசாங்கத்தின் ஈடுபாட்டின் விளைவாக அரசியல் மற்றும் கொள்கை முடிவுகள் நிதி அமைப்பின் மீது ஆழமான தாக்கத்தை பல நிலைகளில் ஏற்படுத்தியது. கூட்டுறவு வங்கிகள் முதல் ( கூட்டுறவு வங்கிகளின் அரசியல் தொடர்புகள் டீமோனேடைசேஷன் போது வெளிவந்தது ஒரு எடுத்துக்காட்டு) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வரை இது எதிரொலித்தது.

இது நெடுங்காலமாக இருந்து வரும் ஆழமான சிக்கல், 2008 நெருக்கடிக்கும் இதற்கும் தொடர்பேதும் இல்லை. மக்களின் பணத்தை வங்கிகளிடம் இருந்து அரசாங்கமே களவாடி அரசியல் ரீதியில் இணைப்பு உள்ளவர்களுக்கும் நேர்மையற்ற தொழிலதிபர்களுக்கும் வாரிவழங்கி வருகிறது. இதில் வருத்தம் என்னவெனில், இந்த சிக்கலுக்கு தீர்வாக தற்போதைய அரசாங்கம் முன் வைக்கும் யோசனைகள் (மதிப்பு குறைத்தல்/இடர்பாடு விற்பனை) சிக்கலை விட அதிக வலியை அளிக்கும் விதத்திலும் கொள்ளைக்கு மேலும் இடம் கொடுக்கும் வகையிலும் உள்ளது தான்.

நெருக்கடிக்கோ சரிவிற்கோ வாய்ப்புகள் உள்ளதாக நான் எண்ணவில்லை. ஏனெனில், அது உண்டாக்கும் பின்விளைவுகளை சந்திக்க எந்த அரசாங்கமும் விரும்பாது. எனவே, அது முற்றிலும் தவிர்க்கப்படும். ஆனாலும், துவண்டிருக்கும் நிதி அமைப்பை சீரமைக்க எந்த ஒரு தெளிவான வழியும் எனக்கு தெரியவில்லை.  வரப்போகும் ஆட்சியில், புதுமையான சில வழிகளை கண்டறிந்து அதன் மூலம் தீர்வுகளை எட்டி, காலம் என் அவநம்பிக்கையை துடைத்தெறியும் என்று நம்புகிறேன்.

 Articles Year Wise: